கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

உயிர் துறத்தலின் அழகியல்

உயிர் வாழவேண்டும் எனும் ஆசையில், அனைத்து ஆசாபாசங்களுக்கும் அடிமைப்பட்டோர், உண்மையில் வரலாற்றிலே இழிவோடும், நிரந்தரமாகவும் இறந்துவிட்டனர். ஆனால், உயிர் வாழ்வதற்காக தங்களைக் காத்துக்கொள்வதற்கு எத்தனையோ காப்பரண்கள் இருந்த போதிலும், எத்தனையோ சாக்குப்போக்குகள் இருந்த போதிலும், அவற்றை முன்வைக்காது, கொலைக்களத்திற்கு கனவான்களாய் சென்று இமாம் ஹுசைனோடு வீரமரணத்தை அடைந்துகொண்டோர் இன்றும் நித்தியமாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். உயிர் துறத்தலின் அழகியலே, ‘ஷஹாதத்’ ஆகும். அதனூடாக, சிறப்பாக வாழவும், சிறப்பாக உயிர் துறக்கவும் இமாம் ஹுசைன் அவர்கள் நம்மனைவருக்கும் கற்றுத்தந்துள்ளார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அறநெறி நுண்மதி – ஒரு இஸ்லாமியப் பார்வை

தமது ஆத்ம திருப்திக்காக மக்கள் நாடிச்சென்ற சமயப் பெரியார்களை நாம் இழந்து நிற்கும் தருணமிது. இப்போதெல்லாம், மக்களின் ஆன்மீக, பண்பாட்டுப் பயணங்களில் பங்கெடுக்கும் ஆன்மீகத் தலைவர்களை காண்பதரிது. மாறாக, லௌகீக தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக மட்டுமே இஸ்லாமியத் தலைமைகளை நாடிச் செல்லும் சமூக மரபு தோன்றியதானது நம்மை வருந்தச் செய்கிறது. இந்நிலையில், இளம்தலைமுறையினரை வழிநடாத்தும் பணியை நமது முதன்மையான செயற்திட்டமாகக் கொண்டு செயற்பட முயற்சிப்போம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாத்தை ஆழ்ந்தறிவதற்கான அவசியம்

இஸ்லாம் என்பது இறைவன் எனும் அகண்ட சாரத்திலிருந்து பிரவாகிக்கும் அறிவுப் பிரளயமாகும். அதனைக் கற்றலானது அறிதல் (تعلّم), ஆழ்ந்தறிதல் (تفقّه) எனும் இரண்டு படிநிலைகளில் நிகழ்கிறது. இஸ்லாத்தை அறிவது எல்லோருக்கும் சாத்தியம். ஆனால் இஸ்லாத்தை ஆழ்ந்தறிவதென்பது வரையறுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே சாத்தியம். முஸ்லிம் அல்லாதோர் கூட, ஒப்பீட்டு சமயக் கற்கைகளில் இஸ்லாமிய அறிவைப் பெறுகிறார்கள். ஆனால், இஸ்லாத்தை புரிந்து ஏற்று நடத்தல், ஆன்மீகவெளியில் பயணப்படல் என்பன அவர்களுக்கு அசாத்தியமாகவே இருக்கின்றன. இதே நிலைமையை நம் மத்தியிலுள்ள இஸ்லாமியக் கல்லூரிகளிலும் ஆன்மீக அறிவகங்களிலும் நம்மால் காணமுடிகின்றது. இன்று இஸ்லாம் பேசுவோரில் அதிகமானோர் அதனை ஆழ்ந்தறிந்தவர்கள் கிடையாது என்பதுதான் உண்மை.

மேலும் படிக்க