கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சாத்தியம் இல்லாத தேசியம்

தேசியவாதம் போதையைக் கொடுக்கிறது. சுயநலம்தான் அதன் ஆதாரமாக இருக்கிறது. தேசியவாதத்தை எத்தகைய நியாயமும் இல்லாத ஒன்றாக தாகூர் பார்த்தார் என்றால் அதற்குக் காரணம், எந்தவொரு தேசியவாதத் திட்டத்திலும் எப்போதும் அதன் மையமாக அதிகாரத்திற்கான முனைப்புதான் இருந்துவந்திருக்கிறது, இப்போதும் இருக்கிறது என்பதனால்தான். அவரைப் பொறுத்தமட்டில், ‘தேசியம் மிகக் கச்சிதமாக உருவாக்கியிருப்பது அதிகார அமைப்பைத்தானே தவிர, ஆன்மிக லட்சியவாதத்தை அல்ல. இது, அதன் இரையை வேட்டையாடக் காத்திருக்கும் மிருகம்போல் இருக்கிறது…’.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய விஞ்ஞானங்கள்: அர்த்தம், சாத்தியம், எதிர்காலம்

இஸ்லாமிய அறிஞர்கள் அவர்களுடைய மரபை முழுமையாக அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், இது தொடர்பாக மேற்கத்திய அறிஞர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஜெர்மன், பிரெஞ்சு, மற்றும் இன்ன பிற மொழிகளில் உள்ள அறிவுசார் ஆய்வுகளை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய கல்விப்புல ஆய்வுகள் மீது அறிவை அடிப்படையாகக் கொண்டு விமர்சனங்களை முன்வைக்க முடிந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் கல்விப்புலம் சார்ந்த போதாமைகள் இருக்குமானால் அவர்களின் எழுத்துகளை எவரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. இதற்கு மொழியாளுமையும் தேவைப்படுகிறது. அறபு, பாரசீகம், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு கட்டாயமாகத் தேவைப்படுகின்றன. மேலும் ஒரு இஸ்லாமிய மொழியையும் அறிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு அறிஞர் உஸ்மானிய அறிஞர்கள் பற்றியோ, இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் பற்றியோ அக்கறை கொண்டிருப்பாரானால், அவர் துருக்கி அல்லது உருது மொழியைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இன்று ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்பதற்கான அளவுகோல் என்னவென்றால், அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் முக்கியமான மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் கூட மரியாதையை உண்டாக்கக்கூடிய உரையை நிகழ்த்தக்கூடிய திறன்படைத்தவராக அவர் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க