malcom x tamil குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஒடுக்கப்பட்ட மக்களுடன் அணிசேர்தல்

நாம் விடுதலை பெறுவதற்கான ஒரே வழி, உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருடனும் நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்வது மட்டுமே.

– மால்கம் X (மாலிக் அல்-ஷப்பாஸ்)

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஆண்மை தவறேல்!

ஆண்மை என்பதை ஏதோ நம் வாழ்நாள் முழுக்க குற்றவுணர்வுகொண்டு மருக வேண்டிய ஓர் ஆதி பாவம் போல் சித்தரிக்கிறது இன்றைய கலாச்சாரம். ஆனால், நாம் ஒழுங்குபடுத்தி, வளர்த்தெடுக்க வேண்டிய ஒரு கொடை அது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஜிப்ஸி: இஸ்லாமோ ஃபோபியாவின் சிபிஎம் வெர்ஷன்

முஸ்லிம் சமூகத்தை இந்து தேசியவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதும், முஸ்லிம் பெண்களை அந்தச் சமூகத்து ’அடிப்படைவாத’ ஆண்களில் இருந்து விடுவிப்பதும் தங்களுடைய கடமைதான் என தம்மைத் தாமே ஒரு மீட்பராகவும் சக்திமானாகவும் கருதும் சிபிஎம் மனநிலையில் இருந்தே ஜிப்ஸி உருவாகியிருக்கிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

காஷ்மீர் மீதான தாக்குதல் நிலத்தை அபகரிப்பதற்கானதா?

காஷ்மீரில் நடந்துகொண்டிருப்பது மக்கள் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதலின் தொடக்கமே ஒழிய, வெறும் நிலஅபகரிப்பு அல்ல. நிலத்தை அபகரிப்பது அந்த மக்களைத் துன்புறுத்துவதற்குத்தானே தவிர, நிலத்தை அபகரிப்பதற்காக அந்த மக்கள் துன்புறுத்தப்படவில்லை.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நவீன இஸ்லாமிய அறிவுஜீவிகளின் தடுமாற்றம்

நாம் உளுத்துப்போன அவற்றை அகற்றித் துப்புரவாக்க வேண்டும். அவற்றைத் தகர்த்து, கலைத்துப்போட்டு, அதன் சிதிலங்களை அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகே, நாம் முழு நம்பிக்கையுடன் நம்முடைய சொந்த நியமங்களில் ஊன்றிநின்று, நம்முடைய சன்மார்க்கத்தின் மேன்மையையும் மதிப்பச்சம்தரும் மகோன்னதத்தையும் உலகின் முன்பாக மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் காட்டமுடியும், இன்ஷா அல்லாஹ்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

காஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்

நாமொரு தேசிய அரசின் கீழ் வாழ்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், அவ்வரசு நம் பெயரால் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளை, அவை அறம் சார்ந்தவையா, அறம் பிறழ்ந்தவையா? அவற்றைக் கைக்கொண்டு வாழ்தல் தகுமா, தகாதா? என்று நாம் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

காலனியத்தின் உண்மை முகம்

“செவ்விந்தியர்கள் மத்தியில் ‘தனியுடைமை’ எனும் கருத்தாக்கமே இல்லை. கூட்டாக உற்பத்தியில் ஈடுபட்டு, தங்களுக்குள் அதைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்பதால் ‘சந்தை’ என்ற ஒன்றும் அவர்கள் மத்தியில் இல்லை. எனவே அவர்களை மனிதர்கள் என்று ஏற்க முடியாது. மிருகங்களைப் பிடித்து, பழக்கி, தமது வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதுபோல், செவ்விந்தியர்களையும் அடிமையாக்கி, பழக்கி, கட்டாய உழைப்பில் பயன்படுத்திக் கொள்வது முற்றிலும் சரியானதே.”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி

பாபர் மஸ்ஜித் தனது ஷஹாதத்தின் மூலம், சத்தியம் மற்றும் நீதியின் பாதையில் போராடும்படி கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு உணர்வூட்டியிருக்கிறது என்றே நாம் பார்க்க வேண்டும். சத்தியம் மற்றும் நீதியின் மீது காதல்கொண்ட இனிவரும் பல தலைமுறைகளையும் அது போராடும்படி உணர்வூட்டிக் கொண்டே இருக்கும்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

மால்கம் எக்ஸ்: கண்டெடுக்கப்பட்ட புதிய பக்கங்கள்

ஆனால், சமீபத்தில் சில கையெழுத்துப் பிரதிகள் கிடைத்துள்ளன. தற்போதைய தன்வரலாற்று நூலில் இடம்பெறாத பலவும் அதில் உள்ளன. நூலின் கட்டமைப்பையுமே கூட மால்கம் எக்ஸ் முற்றிலும் வேறுவிதமாகத் திட்டமிருந்தது இவற்றின் வழி தெரியவந்துள்ளது. தன் வாழ்க்கைப் பரிணாமத்தை வெறும் மூன்று அத்தியாயங்களில் சுருக்கிக் கொண்டு, எஞ்சிய அத்தியாயங்களில் கறுப்பின மக்களின் விடுதலைக்கான போராட்ட வரலாற்றை உரை (speech) வடிவிலான அத்தியாயங்களாக அமைக்கத் திட்டமிட்டிருந்திருக்கிறார் மால்கம்.

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் 

“பௌத்தத்திற்கு மாறுவதில் அர்த்தமில்லை” – அம்பேத்கர்

“(தலித்துகள்) பெளத்தராகவோ ஆர்ய சமாஜியாகவோ மாறுவதால் உயர் வர்ணத்தைச் சேர்ந்தோர் எனத் தம்மை அழைத்துக்கொள்வோர் (தலித்துகள்மீது) கொண்டுள்ள தப்பபிப்பிராயங்களில் எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. எனவே, அந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் பெரிய அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை. போர்க்குணமிக்க ஒரு சமுதாயத்தின் ஆதரவுடன் இந்துக்களின் தப்பபிப்பிராயங்களை வெற்றிகரமாக எதிர்க்க நாம் விரும்புவதாக இருந்தால், நாம் கிறிஸ்தவத்துக்கோ இஸ்லாத்திற்கோதான் மாறவேண்டும். அப்போது மட்டுமே தலித்துகள்மீது படிந்துள்ள தீண்டாமைக் கறை துடைத்தெறியப்படும்.”

மேலும் படிக்க