கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (5)

எப்படி குழப்பங்களை எதிர்கொள்ளப் போகிறோம்?
• பாரம்பரிய இஸ்லாமிய அறிவு மரபில் நிலைகொள்ள வேண்டும்.
• எதுவெல்லாம் பாரம்பரிய அறிவுக்கும் பண்பாட்டுக்கும் மாற்றாக எழுகின்றதோ அதை விசாரணைக்குள்ளாக்க வேண்டும்.
• இஸ்லாமிய அறிவு மரபின் ஞானத்தையும், அதன் உயர் மதிப்பீடுகளையும் நாம் கண்டடைவதோடு, அவற்றை நிறுவுவதற்கு உழைக்க வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (4)

கடந்த காலத்திலும் தற்காலத்தைப் போன்று முஸ்லிம்களிடையே பல குழப்பங்கள் தோன்றியிருக்கின்றன. இன்று நவீனத்துவம் வகிக்கும் இடத்தை முற்காலத்தில் கிரேக்கத் தத்துவம் வகித்தது. அதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் முகங்கொடுத்திருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு, கிரேக்கத் தத்துவவியலாளர்கள் இந்தப் பிரபஞ்சம் நிலையானது, தொடக்கமும் முடிவுமற்றது என்றனர். அதற்கு சில அடிப்படைகளையும் முன்வைத்தனர். இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் வானியலாளர் எட்வின் ஹபிள் போன்றோரின் தலையீட்டுக்கு முன்புவரை இந்தக் கருத்தமைவுதான் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்தது. இஸ்லாமிய வரலாற்றின் முதல் நான்கு தலைமுறைகளுக்குள்ளாகவே முஸ்லிம் உலகில் இது அறிமுகமாகிவிட்டது. தத்துவவியலாளர்களான அரிஸ்டாட்டில், பிளேட்டோ முதலானோரை அநேகர் கற்க முற்பட்டார்கள். சிலர் அதை இஸ்லாத்துடன் குழப்பிக்கொள்ளும்போது வழிகேட்டுக்கு அது காரணமாக அமைந்தது. அவர்கள் இஸ்லாத்தை விட்டே வெளியேறும் சூழலும் உருவானது.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (3)

தொழில்நுட்பம், அறிவியல், பண்பாடு என அனைத்து அம்சங்களிலும் சமூகம் தொடர்ச்சியாக சிறந்த தெரிவை நோக்கி முன்நகர்வதாய் முற்போக்குவாதம் கருதுகிறது.

பத்தாண்டுகளுக்கு முன் ஜான் ஸ்டீவர்ட் அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பெண்களைப் போல் ஆண்கள் ஆடை அணிவதாகச் சொல்லி திருநங்கைகளை நகைப்புக்குள்ளாக்கினார். அனைவரும் சிரித்தார்கள். ஜான் ஸ்டீவர்ட் நவீனமானவராகவும் தாராளவாதியாகவும் அறியப்படுபவர்தான். இப்போது அவர் அப்படி செய்தால் Transphobic என்று எல்லாரும் அவர் மீது பாய்ந்திருப்பார்கள். ஏனெனில், இன்று சமூகம் முன்நகர்ந்திருப்பதாகக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில், சரி – தவறு என்ற மதிப்பீடுகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பதாகக் கருதுவது முற்போக்குவாதத்தின் ஓர் அடிப்படை.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (2)

மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் ஐரோப்பிய வரலாற்றை செவ்வியல் காலம், மத்திய காலம், நவீன காலம் என மூன்றாக வகைப்படுத்துவார்கள். பண்டைய எகிப்து மற்றும் கிரேக்கம் உள்ளிட்டவற்றின் வரலாறு செவ்வியல் காலத்தைச் சார்ந்தது. 16 – 18ம் நூற்றாண்டு காலப்பிரிவில்தான் மறுமலர்ச்சிக் காலம், அறிவொளிக் காலம் என்பன வருகின்றன. இது நவீன காலமாக அடையாளப்படுத்தப்படுகிறது. அப்போது தோன்றிய கருத்தியல்கள் குறித்தே நாம் அதிகம் கரிசனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

மேற்குலக வரலாற்றின் முப்பகுதிகள்:

• செவ்வியல் காலம் கி.பி. 500க்கு முன்
• மத்திய காலம் கி.பி. 500 முதல் கி.பி. 1500 வரை
• நவீன காலம் கி.பி. 1500க்குப் பின்

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (1)

இஸ்லாமிய அழைப்பாளரும், அலஸ்னா நிறுவனத்தின் நிறுவனருமான டேனியல் ஹகீகத்ஜு, இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் மீது நவீனத்துவம் தொடுக்கும் தாக்குதல்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருபவர். நாத்திகம், தாராளவாதம், பெண்ணியவாதம், மதச்சார்பின்மைவாதம் போன்ற ஆதிக்கக் கருத்தியல்கள் இவரின் பிரதான பேசுபொருள்களாக விளங்கின்றன. Dark Storms: The Modernist Challenge to Islam எனும் கருப்பொருளில் அவர் வழங்கிய ஆன்லைன் கோர்ஸின் சுருக்கப்பட்ட வடிவமே இந்தத் தொடர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மெளதூதியைக் குறிவைக்கும் இந்துத்துவர்கள்

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மெளதூதி, சையித் குதுப் புத்தகங்களுக்குத் தடை விதிக்கும் முடிவை எடுத்திருப்பது பதற்றத்தால் அல்லது கோழைத்தனத்தால்தான்.

முதலில், பாடத்திட்டம் தொடர்பான ஒரு கடிதம் யாருக்கு எழுதப்பட வேண்டும்? பிரதமருக்கா அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவுக்கா (யூஜிசி)? யூஜிசி ஏதாவது சொல்லியிருந்தால் அந்தக் கல்வி நிறுவனம் அதுகுறித்து ஒரு நடவடிக்கை எடுக்கலாம். மாறாக, கல்விப்புலத்துக்கு சம்பந்தமில்லாத, அரசியல் உள்நோக்கு கொண்ட சிலர் ஆற்றிய வினைக்கு AMU போன்ற ஒரு மதிப்புக்குரிய கல்வி நிறுவனம் இப்படி எதிர்வினையாற்றியிருக்கக் கூடாது. இதற்குப் பதிலாக, பல்கலைக்கழகத் தன்னாட்சி, அறிவுசார் சுதந்திரம், எதுவெல்லாம் “Indic” ஆகியவற்றை விவாதத்துக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் AMU ஒரு நியாயமற்ற, பிளவுவாதக் கோரிக்கைக்குப் பணிந்துவிட்டது!

மேலும் படிக்க
nv ramana tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்’: என்.வி. ரமணாவின் பேச்சும் செயல்பாடும்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஓய்வு பெற்றார். தனது பதவிக்காலத்தில் அரசியலமைப்பைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி 29க்கும் மேற்பட்ட உரைகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். எனினும், நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 6 வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும், நடுவர் மன்ற மறுஆய்வு தேவைப்படும் 53 வழக்குகள் முன்பிருந்ததைப் போலவே கிடப்பில் போடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க
psychoanalysis tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நவீன மனநல மருத்துவத்தின் வன்முறை

நண்பர்களோடு உளநிலை குறித்து உரையாடும்போது “டிப்ரஷனா இருக்கு..” என்பது தவிர்க்க முடியாத வசனமாகிவிட்டது. கவலை, துக்கம் என உளம் சார்ந்த இயல்பான அனைத்து இடர்பாடுகளும் டிப்ரஷனாக மட்டுமே அடையாளம் காணப்படுகிறது. ஏன் தொடர்ந்து அனைவரும் ஒரே விதமாகத் தங்களின் உளநிலையை மொழிப்படுத்துகின்றனர் என்று ஆழ்ந்து பார்த்தால், அதைத்தான் உள மருத்துவர்களும், anti-depressants தயாரிக்கும் நிறுவனங்களும் விரும்புகின்றன என்பது புலப்படும்.

இப்படி மொழி ஒரே விதமாக அமையும்போது உரையாடுவதற்கு வசதியாக அமைந்துவிடுகிறது. உள மருத்துவர்களும் எளிமையாக “உன் செரடோனின் (serotonin) அளவு குறைவாக இருப்பதால்தான் உனக்கு டிப்ரஷன்..” என்று சொல்வதற்கு வசதியாக இருக்கிறது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வதில் இவர்களுக்கு ஆர்வமில்லை. அதற்கான சட்டகமும் அவர்களிடம் இல்லை. ஒரு பாக்டீரியாவை நீக்குவதுபோல அதை நீக்க முனைகிறார்கள். அவ்வளவுதான். மூளையின் வேதியியல் கூறுகளைக் கொண்டு மட்டுமே மானுட நிலைமையை (human condition) சொல்லிவிட முடியுமா?

மேலும் படிக்க
bulldozer politics tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

புல்டோசர் அழகியலும் இந்து தேசியக் களியாட்டமும்

முஸ்லிம்களைத் தாக்குவதைக் கண்காட்சியாக்குவதன் மூலம் ஒரு பெருங்கொண்ட மக்கள்திரள் சத்தும் சாரமுமற்ற வாழ்வில் ஒரு உந்துசக்தியைப் பெறுவதாக உணர்கிறார்கள். அகத்திலும் புறத்திலும் இருக்கும் வாழ்க்கை பாரத்தைத் தாங்க முடியாத மக்களுக்கு அவர்களது வலியை குணப்படுத்துவதற்குப் பதிலாக வலியை மறத்துப்போகச் செய்யும் போதை வஸ்துகளைக் கொடுத்து பிறழ்ச்சியான இன்பத்திளைப்பில் திளைக்கச் செய்வதற்கு எவ்வகையிலும் மாறுபட்டதல்ல இந்து தேசியவாத அரசியல். போதை கிடைத்துக்கொண்டே இருக்க, முஸ்லிம்கள் வதைபட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு முஸ்லிம் வதை என்பது வெகுமக்கள் திரளின் களியாட்டத்துக்கான தியேட்டராகவும், முஸ்லிம்களின் கண்ணீரும் அங்கலாய்ப்பும் ஃபாசிஸ்ட் போர்னோகிராஃபியாகவும் மாறிவிட்டது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அறிவியலின் தத்துவம் – ஓர் அறிமுகம்

அறிவியல் என்றால் என்ன என்று கேட்டால் இயற்பியல், வேதியியல், உயிரியல் முதலானவை அறிவியல் என்றே பலரும் பதிலளிப்பார்கள். ஆம், இவையெல்லாம் அறிவியல் ‘பாடங்களே’ என்றாலும், ஏன் நாம் இவற்றை மட்டும் அறிவியல் என்கிறோம்? மற்ற பாடங்களையும் துறைகளையும் ஏன் அறிவியல் என்று அழைப்பதில்லை? இந்தத் துறைகளிடம் உள்ள எந்தத் தன்மை இவற்றை அறிவியல் என்று அடையாளப்படுத்துகிறது? யார் இந்தத் துறை அறிவியல் என்றும், இந்தத் துறை அறிவியல் இல்லை என்றும் முடிவு செய்வது? எதன் அடிப்படையில், எதை அளவுகோலாக வைத்து இந்த முடிவை எடுப்பது?

மேலும் படிக்க