இலக்கியம் கட்டுரைகள் நூல் அறிமுகம் மொழிபெயர்ப்பு 

பூனைகளில்லா உலகம் – வாசிப்பனுபவம்

பூனைகளில்லா உலகம் நாவல் எதார்த்தமும், மாயவுலகும் ஒன்றுகலந்தது. அதில் சாத்தான் ஒன்று தோன்றி உரையாடும்; பூனை ஒருசமயம் பேசும். ஊடுபாவான தத்துவ குணம் கொண்டது நாவலின் தொனி. மரணம்; மனிதக் கண்டுபிடிப்புகள்; வாழ்க்கையின் பொருள் ஆகியவை இதில் தத்துவ வினவுப் பொருட்களாக உள்ளன. அதன் மீது விசாரணையானது நிகழ்த்தப்படுகிறது. அதன் விளைபொருளாக — வாழ்க்கையின் அர்த்தங்களைப் புரிந்துகொண்ட எண்ணம் நமக்குத் தோன்றும்போது நாவல் நிறைவடைகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

பஸ்மந்தா முஸ்லிம்களுக்கு வலை விரிக்கும் பாஜக
“நீங்கள் நினைக்கும் அளவுக்கு பிளவுபட்டதில்லை முஸ்லிம் சமூகம்” - கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலோ, அ.கலையரசன்

வட இந்தியாவில் சாதி அமைப்பானது இந்து, முஸ்லிம் சமூகத்தின் உட்பிரிவுகளுள் ஏற்படுத்தியுள்ள வர்க்க முரண்பாட்டை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டு முஸ்லிம் சமூகத்தின் மீதான சாதி அமைப்பின் குறைவான தாக்கத்தை இக்கட்டுரை நிறுவுகிறது. மேலும், முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவும் பாகுபாட்டைப் பயன்படுத்தி தனது வாக்குவங்கியை நிறுவ முயலும் பாஜகவின் தந்திரத்தை புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

மேலும் படிக்க
உரைகள் கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

முஃதஸிலா சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள்

இஸ்லாமிய சிந்தனைப் போக்கில் பகுத்தறிவு ரீதியான தாக்கத்தை ஏற்படுத்திய முஃதஸிலாகள் குறித்தான நேர்மறையான அணுகுமுறையை இக்கட்டுரை வழங்குகிறது. மேலும், குர்ஆன் படைக்கப்பட்டதா?, அல்லாஹ்வின் தன்மை போன்றவற்றில் அவர்கள் கொண்டிருந்த கருத்துகளின் நியாயங்களையும் தெளிவுபடுத்துகிறது. ஒட்டுமொத்தமாக இக்கட்டுரை நமது வரலாற்றை முன்முடிவுகளுடன் கருப்பு-வெள்ளையாக அணுகாமல் அதன் நியாயங்களை புரிந்துகொள்வதனுடாக முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையை வேண்டிநிற்கிறது.

மேலும் படிக்க
உரைகள் கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஜப்ரிய்யா, கதரிய்யா, முர்ஜிஆ சிந்தனைப் பள்ளிகள்
இஸ்லாமிய வரலாற்றில் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள்

முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய கோட்பாட்டளவிலான வித்தியாசங்களைப் பார்க்கையில், அவையனைத்தும் முஸ்லிம்களின் சாராம்சத்தோடு, அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் போன்ற கேள்விகளோடு தொடர்புடையவை அல்ல என்று பார்க்கிறோம். மாறாக, அவை ‘இஸ்லாத்தில் போதுமானளவு விவரிக்கப்படாத விவகாரங்கள்’ என்று சிலர் நினைத்த விஷயங்களை விவரிக்க முற்படுவதோடு தொடர்புடையது என்று பார்க்க முடிகிறது.

மேலும் படிக்க
இலக்கியம் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்துமாக்கடல் வாழ் சமூகத்தில் மறைந்துவரும் மொழியைக் காப்பாற்றும் காயல்பட்டினம்

தமிழ் – அறபி ஆகிய இரண்டு செவ்வியல் மொழிகள் இணைந்து ஈன்ற அழகிய குழந்தைதான் அர்வி மொழி. இன்று அர்வி அதன் நோக்கத்தையும் பெருமையையும் இழந்திருந்தாலும், அது மீட்டுருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படுவது அவசியம்.

மேலும் படிக்க
உரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் அரசியல் சிந்தனைப் பள்ளிகள்

இஸ்லாமியச் சிந்தனைப் பள்ளிகளில் பெரும்பான்மை முஸ்லிம்களை உள்ளடக்கியுள்ள அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் குறித்த அறிமுகத்தையும் அதன் கவனப்படுத்த வேண்டிய பகுதிகளையும் புறநிலையாக நின்று தொட்டுச் செல்கிறது இந்த ஆக்கம்.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

உலகத் தொழிலாளர்களே, ஓய்வெடுங்கள்!

அணுக்களால் உருவான பொருள் உலகத்திலிருந்து பொருட்களற்ற அருவ உலகத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம் என்கிறார் தென்கொரியாவில் பிறந்த சுவிஸ் – ஜெர்மன் தத்துவவியலாளர் ப்யுங் சுல் ஹான். உருவில்லா அருவப் பொருட்களையே நேசிக்கவும் பகிரவும் செய்கிறோம், அவையே நம்மை ஆள்கின்றன. யதார்த்த உலகிற்கும் எண்ம உலகிற்குமான (digital world) வேறுபாடுகள் குறையும்போது நம்முடைய இருப்பு என்பது கேள்விக்குள்ளாகிறது என்கிறார் ஹான். உலகளவில் அதிகம் வாசிக்கப்படும் தத்துவவியலாளரான ஹான், நவதாராளவாத முதலாளித்துவத்தின் விளைவுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்.

மேலும் படிக்க
உரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஃகவாரிஜ் சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் அரசியல் சிந்தனைப் பள்ளிகள்

இமாம் அல்ஆஸீயின் இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகள்பற்றிய தொடர் உரையின் இப்பகுதி, இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய முதலாவது கடுபோக்காளர்களாக அறியப்படுகிற ஃகவாரிஜ்களின் சிந்தனைப் போக்கு, அதன் சிக்கல், அவர்களுக்குள்ளே காணப்பட்ட வேறுபட்ட குழுக்கள்குறித்த முழுமையான சித்திரத்தை வழங்குவதுடன் சம காலத்தில் அப்போக்குகளின் நீட்சியையும் சுட்டிக் காட்டுகிறது. நடுநிலையுடன் வரலாற்றை அறிய விரும்புவர்களுக்கு இது பயனளிக்கக் கூடும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அறுக்கும் முன்…

நாம் ஏன் இளம் பிராணிகளை அறுக்கிறோம்? அதன் இறைச்சி மென்மையாக இருப்பதற்காக என்று சொல்கிறோம். அதுதான் ருசியாக இருக்கும் என்கிறோம். நாவு ருசி தேடி அலைவதில் சட்டங்களை நமக்குச் சாதகமாக வளைக்கிறோம். ருசியாகச் சாப்பிட்டால்தானே அல்லாஹ்வுக்கு மனமுவந்து நன்றி சொல்லலாம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறோம். சபாஷ்! அல்லாஹ்வுக்கு நன்றி சொல்வதில் நாம் அவ்லியாக்களை மிஞ்சிவிட்டோம் பாருங்கள்!

மேலும் படிக்க
உரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஷீஆ சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் அரசியல் சிந்தனைப் பள்ளிகள்

ஒரே இறைவன், ஒரே தூதர், ஒரே வேதம், ஒரே உம்மத் – என்ற கருத்தாக்கம்கொண்ட முஸ்லிம் சமூகத்தில் பல்வேறுபட்ட பிளவுகளும் குழுக்களும் இருப்பதுபோல் தோன்றுவதன் உண்மைநிலை என்ன? 1400 ஆண்டுகால நீண்ட இஸ்லாமிய வரலாற்றில் பல்வேறுபட்ட சமூக-அரசியல் சூழல்களில் தோன்றிய இச்சிந்தனைக் குழுக்களின் அடிப்படைகள், வகைகள், வேறுபடும் புள்ளிகள் போன்றவற்றை விளக்கி இமாம் முஹம்மது அல்ஆஸி அவர்கள் ஆங்கிலத்தில் ஆற்றிய உரைகளை மொழிபெயர்த்து தொடராகப் பதிவிடுகிறோம். தேடலுள்ள ஆரம்பநிலை வாசகர்களுக்கு இவை நல்லதொரு புரிதலை வழங்குமென்று எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க