தடம்

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: என்றும் மாறாதது (பகுதி 2)

நிச்சயமாக உறுதியான அடிப்படைகளையும் மதிப்பீடுகளையும் கொண்ட கண்ணோட்டம் மிக அவசியமானது. அது எல்லாவற்றையும் அறிந்த, தான் நாடியதைச் செய்யக்கூடிய ஒருவனிடமிருந்து வந்திருக்க வேண்டும். அவன் வாழ்க்கையின் எல்லா தளங்களையும் அறிந்திருக்க வேண்டும். எதுவும் அவனைவிட்டு மறைவாக இருக்கக் கூடாது. இச்சைகளோ தாக்கங்களோ அவன் வகுத்த மதிப்பீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அது முழுக்க முழுக்க அவசியமானதாக, பாதுகாப்பானதாக, இயல்பான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடியதாக, நிலையான மையத்தைச் சுற்றி இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும். அது நேரான, பாதுகாப்பான, நிலையான நோக்கத்தை அடையும் இயக்கமாக இருக்க வேண்டும். அதுதான் சீரான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியது.

மேலும் படிக்க

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 7) – மரியம் ஜமீலா

“இஸ்லாத்தின் போதனைகளின்படி, நீதமான வழியில் ஒருவன் சம்பாதித்த அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடையாகும். அல்லாஹ்வின் அருட்கொடைக்கு வரம்பு ஏதும் இல்லை. முறைகேடான சொத்து எவ்வளவு சிறியதாக இருப்பினும் அது முறைகேடானதே. முறையாக சம்பாதித்த சொத்து எவ்வளவு பெரியதாக இருப்பினும் அது முறையானதே. தனிச் சொத்துக்களை பலப்பிரயோகம் செய்து அரசாங்கம் கைப்பற்றுவதைவிட –சிறிய நோய்க்கு பெரிய நோய் கொண்டு சிசிச்சை அளிப்பதை விட- அநீதமாக செல்வம் குவிவதற்கு வழிவகுக்கும் முறைகேடான வழிகளனைத்தையும் தடுக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, வீடு, கல்வி, மருத்துவ தேவைகள் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.”

மேலும் படிக்க

ஆய்வுக் கட்டுரை: இஸ்லாமிய பார்வையில் அரசியல் பொருளாதாரம்

தனது உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் மீது உழைப்பாளி மட்டுமே சட்டபூர்வமாக உரிமை கோர முடியும். எனவே, யாரேனும் ஒருவர் மற்றவர்களை வேலைக்கமர்த்தி, அவர்களுக்குக் கூலியையும் கருவிகளையும் வழங்கி, அவர்களின் உழைப்பில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களை தனது உடமையாக்கிக் கொள்வதென்பது இஸ்லாத்தை பொறுத்தவரை நினைத்தும் பார்க்கவியலாத ஒன்று.

மேலும் படிக்க

ஒரு தலித் போராளியின் வாழ்வும் அவர் காட்டிய வழியும்

‘இறைவனின் இந்த இஸ்லாமியத் தத்துவங்கள் உலகெல்லாம் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்தச் சூழலிலும் எடுத்துச் செல்ல வெண்டிய மாபெரும் தத்துவங்களாகும். இவை இரகசியமாகக் கூட்டங்களில் சொல்லப்படவேண்டியவை அல்ல. மாறாக மலை மீதும், குன்றின் மீதேறியும் நின்று வெளிப்படையாக அனைத்து மக்களுக்கும் எட்ட வைக்கப்பட வேண்டிய உயர்ந்த தத்துவங்கள். ஆகும். அனைத்து மக்களுக்கும் வழி காட்டக் கூடிய கருத்துக்களாகும். இறைவன் ஒருவனே, நீங்கள் அவனையே நம்புங்கள். முஹம்மது நபி அவர்களையே ஏற்றுக் கொள்ளுங்கள், பின்பற்றுங்கள்”.

மேலும் படிக்க