தடம்

ஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்

இயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை மறுக்கும் இந்த ஆதிக்கக் கருத்தியல்களின் முன்னால் மற்ற மதங்கள் போல் அது ஒருபோதும் மண்டியிடாது.

மேலும் படிக்க

அறிவியலும் குர்ஆனும் எப்போதாவது முரண்படுகிறதா? ஆம் முரண்படுகிறது.

பலரும் பிழையாக நம்பிவருவதற்கு முரணாக, அறிவியல் என்பது உண்மையின் பரிபூரணப் பிரதிநிதியொன்றும் கிடையாது. குறைந்தபட்சம் இன்றளவில் கிடையாது. என்றைக்கும் அவ்வாறு ஆகிவிடவும் முடியாது. அல்லாஹ்வுடைய வாக்கின் பரிபூரணத்தன்மையை கணக்கில் கொண்டு பார்த்தால், அறிவியல் போன்று இயல்பிலேயே பூரணத் தன்மையற்ற, பலவீனமான, மாறிக்கொண்டே இருக்கின்ற மனித உருவாக்கம் எதனுடனும் குர்ஆனுக்குள்ள பொருத்தப்பாடு குறித்து பொத்தாம் பொதுவான கூற்றுகளை மொழிவது முறையற்றதொரு செயலாகும்.

மேலும் படிக்க

ஹிஜாப் சட்டம் எந்த விதத்தில் ஒடுக்குமுறையானது?

பொது இடங்களுக்கான முஸ்லிம் உடை ஒழுங்குகள் என்பவை இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையில் அமைந்தவை. உடலின் எந்தப் பகுதியை மறைக்க வேண்டும், எதனை மறைக்கக் கூடாது என்பது குறித்த நம்முடைய நம்பிக்கையானது இறைவழிகாட்டுதல்களிலிருந்து வருவது. இறைவனை நம்புகிறவர்கள் என்ற அடிப்படையில் நாம் அந்த இறைவழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதோடு, அவற்றின் அகிலத்துவ முக்கியத்துவத்தையும் மெய்யறிவையும் புரிந்துகொள்ளவும் முயற்சிக்கிறோம். பிறருக்கு இவை எதிலும் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் முஸ்லிம்களிடத்தில் இவ்வுயர் விதிகளிலிருந்து பிறக்கும் தர்க்க நியாயமேனும் இருக்கின்றது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க

ஒரு முஸ்லிம் ஐயுறவுவாதியின் ஒப்புதல் வாக்குமூலம் – டேனியல் ஹகீகத்ஜூ

முஸ்லிம் அறிவுத்துறை வரலாறு நெடுகிலும் இத்தகைய முஸ்லிம் ஐயுறவுவாதிகள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றனர். அவர்கள் எந்தெந்த தத்துவங்களை எல்லாம் அபாயகரமானவையாகவும் நாசகரமானவையாகவும் கண்டார்களோ அவற்றை மதிப்பீடு செய்யவும், நிலைகுலையச் செய்யவும், விமர்சனத்திற்கு உட்படுத்தவும், வீழ்த்தவும் எல்லாவிதமான பகுத்தறிவு மூலோபாயங்களையும் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதைக் காண முடிகிறது. இன்றைய முஸ்லிம்கள் தொலைத்துவிட்டவொரு அரிய கலை இது.

மேலும் படிக்க