காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

புத்த, சமண கோவில்கள் இந்து ஆலயங்களாக மாற்றப்படவில்லையா?

கஜினி முகம்மது பதினேழு முறை சோமநாதபுரம் கோவிலை இடித்து நொறுக்கினார் என்று உங்களுக்குப் பாடநூற்கள் சொல்லியுள்ளன இல்லையா? பண்டைய இந்தியாவில் கோவில்கள் என்பன சாமி கும்பிடுகிற இடங்கள் மட்டுமல்ல. மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக் களஞ்சியங்களாகவும் அவை இருந்தன. இல்லாவிட்டால் தஞ்சைப் பெரிய கோவிலைச் சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்? பண்டைய மன்னர்களின் போர்கள் என்பன பெரும்பாலும் கொள்ளையடிப்பதற்காக மேற்கொள்ளப் பட்டவைதாம். இந்த அடிப்படையில்தான் கஜினி முகம்மது கொள்ளையிட்டதும். கோவிலுக்குள் ஒளிந்து கொண்ட எதிரி மன்னனைக் கொல்லவும், ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தைக் கொள்ளையிடவும், எதிரியின் பண்பாட்டு ஆளுமையை அழிக்கவுமே கோவில்கள் மீது படையெடுக்கப்பட்டன. எந்த முஸ்லிம் மன்னனும் தன்னுடைய எல்லைக்குள் இருந்த இந்துக் கோவில்களையோ, தனது பாதுகாப்பிலிருந்த இந்துக் கோவில்களையோ இடித்ததில்லை. அவுரங்கசிப் ஆட்சிக் காலத்திலும் அப்படித்தான். அவருக்கு எதிராகச் சதி செய்தவர்களின் கோட்டைகளும் கோவில்களும் இடிக்கப்பட்டன.…

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நேற்று அயோத்தி, இன்று காசி: ஞான்வாபி மசூதியும் விஸ்வநாதர் ஆலயமும் – அ.மார்க்ஸ்

நரசிம்மராவ் ஆட்சியின்போது 1991ல், “வணக்கத்தலங்களைப் பொருத்தமட்டில், 1947 ஆகஸ்ட் 15லிருந்த நிலையில் எந்த மாற்றமும் கூடாது” எனச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதாவது, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இந்தியா முழுவதும் உள்ள வணக்கத்தலங்கள் யார் வசம் இருந்தனவோ அதில் எந்த மாற்றங்களும் இனி செய்ய முடியாது என்பது இதன் உள்ளடக்கம். அதற்கு முன்பாகப் பல ஆண்டுகளாக பாபர் மசூதிப் பிரச்னை இருந்ததால் அதற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆக, இனி யாரும் எந்த ஒரு தரப்பின் ஆலயத்தையும், இது முன்னதாக எங்களிடம் இருந்தது; இதை இப்போது வைத்துள்ளவர்கள் கைப்பற்றிவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லி பிரச்னை செய்ய இடமில்லை என்பதை அந்தச் சட்டம் உறுதிசெய்தது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

இந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்

இத்தொகுப்பு மார்க்ஸின் இந்துத்துவம் குறித்த முக்கியமான ஆய்வுப்பங்களிப்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட ஓர் தொகுப்பு. இப்பேசுபொருள் குறித்து மார்க்ஸின் எழுத்துக்களை கற்க நினைக்கும் ஒருவர் அதை ஒரே இடத்திலேயே பெற்றுக்கொள்ளுமாறு செய்திருப்பது இத்தொகுப்பின் மிக முக்கியமான பலமாகும். இந்துத்துவத்தை கருத்தளவில் எதிர்கொள்ள நினைக்கும் எழுத்தாளர்கள் இரண்டு வகைகளில் அதைச் செய்வார்கள். ஒன்று அதன் பிரச்சாரங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு அதற்கு தக்க பதில்களைச் சொல்வது, இரண்டாவது அதன் அரசியலைக் கேள்விக்குள்ளாக்கி விவாத மேசையை திருப்ப எத்தனிப்பது. மார்க்ஸ் இவ்விரண்டையுமே செய்திருக்கிறார் என்பதை இந்நூலை கூர்ந்து வாசிப்போர் புரிந்துகொள்வர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்?

தமிழகத்தின் மத்தியச் சிறைகளில் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான ஆயுள் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நீண்ட கால சிறைவாசத்தை அனுபவிப்பது – ராஜீவ் கொலை வழக்குக் கைதிகளுக்கு அடுத்தபடியாக – முஸ்லிம்களே! இளவயதில் கைதாகி ஒட்டுமொத்த இளமையையும் வாழ்வையும் தொலைத்தவர்களாக அல்லலுறுகின்றனர். பிணையில்கூட வெளிவராமல் அவர்கள் சிறையிலேயே நோய்வாய்ப்பட்டுச் செத்துமடியும் கொடுமையும் நிகழ்கிறது.

மேலும் படிக்க