தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: என்றும் மாறாதது (பகுதி 2)

நிச்சயமாக உறுதியான அடிப்படைகளையும் மதிப்பீடுகளையும் கொண்ட கண்ணோட்டம் மிக அவசியமானது. அது எல்லாவற்றையும் அறிந்த, தான் நாடியதைச் செய்யக்கூடிய ஒருவனிடமிருந்து வந்திருக்க வேண்டும். அவன் வாழ்க்கையின் எல்லா தளங்களையும் அறிந்திருக்க வேண்டும். எதுவும் அவனைவிட்டு மறைவாக இருக்கக் கூடாது. இச்சைகளோ தாக்கங்களோ அவன் வகுத்த மதிப்பீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அது முழுக்க முழுக்க அவசியமானதாக, பாதுகாப்பானதாக, இயல்பான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடியதாக, நிலையான மையத்தைச் சுற்றி இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும். அது நேரான, பாதுகாப்பான, நிலையான நோக்கத்தை அடையும் இயக்கமாக இருக்க வேண்டும். அதுதான் சீரான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: என்றும் மாறாதது (பகுதி 1)

மனிதன் இந்தப் பூமியில் பிரதிநிதியாக ஆக்கப்பட்டுள்ளான் என்பது என்றும் மாறாத உண்மை. அதில் அவன் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறான். பூமியை உழுது விவசாயம் செய்யக்கூடியவனாக வெளிப்படுகிறான். அவன் வாழ்க்கையின் சூழலும் அனுபவமும் அந்தக் கட்டத்தில் அவனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக விவசாயத்தையே ஆக்கியது. அதேபோல் அவன் அணுவைப் பிளப்பவனாக, பிரபஞ்சத்தின் இரகசியத்தை கண்டறிவதவதற்காக செயற்கைக்கோளை அனுப்புபவனாக வெளிப்படுகிறான். இதுவும் அதுவும் இவற்றிற்கு இடையிலுள்ளவையும் இவற்றிற்கு பின்னால் வரக்கூடியவையும் பூமியில் அவனுக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவத்தின் வெவ்வேறு வடிவங்கள். அவை எப்போதும் கூடுதலுக்கும் விசாலத்திற்கும் உட்பட்டவை. ஆனால் பூமியில் அவனுக்கு வழங்கப்பட்ட கிலாஃபா – பிரதிநிதித்துவம் எந்நிலையிலும் மாறாதது. அதன் மாறாத தேட்டம், மனிதனுக்கும் இறைவன் வகுத்த வழிமுறைப்படி அவனுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்திற்குமிடையே எதுவும் தடையாக அமைந்து விடக்கூடாது என்பதையும் இந்தப் பூமியில் மனிதனின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வண்ணம் அவனைவிட எதுவும் உயர்த்தப்பட்டு விடக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது. இந்த உலகிலுள்ள எல்லா பொருள்களையும்விட மனிதனே உயர்ந்தவனாவான். அவனே அவற்றிற்குத் தலைவனாவான்.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 5) – சையித் குதுப்

‘இயற்கை’ என்றால் என்ன? அது இந்த பிரபஞ்சத்தின் பருப்பொருளா? இந்தப் பருப்பொருளின் உண்மைநிலை என்ன? அவர்கள் பருப்பொருள் என்று கூறுவதை நிலையான ஒன்றாக எண்ணினால் அதன் உண்மை நிலையை வரையறுக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெளிவாகியிருக்கும். பருப்பொருள் குறைகிறது, அதிகரிக்கிறது எனில் அதிகரிப்பதுதான் இயற்கையா? அதுதான் பருப்பொருளா? அல்லது இந்த அதிகரிப்பு நிகழும் வடிவம்தான் பருப்பொருளா? இந்தக் கடவுள் ஒரு நிலையில் நிலைத்திருப்பதில்லை! அவர் வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறார், முன்னேறுகிறார்! இவற்றில் எந்த நிலையில் அது மனித அறிவைப் படைக்கும் திறனைப் பெறும்? அதுதான் தன் வடிவத்தை என்றும் இயங்கக்கூடியதாகப் படைத்துள்ளதா? கதிர்களிலிருந்து அணுவை நோக்கி, அணுவிலிருந்து பருப்பொருளை நோக்கி… அணுவிலிருந்து கதிர்களை நோக்கி! இந்தக் கடவுள் எப்போது படைக்கும் திறனைப் பெற்றது? எந்த நிலையில்? எவனது அறிவை இயற்கை படைத்ததோ அந்த மனிதனைப் படைத்தது யார்? அந்த இயற்கை ஆரம்பத்திலேயே அதனைப் படைத்ததா? அல்லது அவனது இருப்பிற்குப் பின்னர் அவனது அறிவைப் படைத்ததா?

மேலும் படிக்க