கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாத்தை ஆழ்ந்தறிவதற்கான அவசியம்

இஸ்லாம் என்பது இறைவன் எனும் அகண்ட சாரத்திலிருந்து பிரவாகிக்கும் அறிவுப் பிரளயமாகும். அதனைக் கற்றலானது அறிதல் (تعلّم), ஆழ்ந்தறிதல் (تفقّه) எனும் இரண்டு படிநிலைகளில் நிகழ்கிறது. இஸ்லாத்தை அறிவது எல்லோருக்கும் சாத்தியம். ஆனால் இஸ்லாத்தை ஆழ்ந்தறிவதென்பது வரையறுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே சாத்தியம். முஸ்லிம் அல்லாதோர் கூட, ஒப்பீட்டு சமயக் கற்கைகளில் இஸ்லாமிய அறிவைப் பெறுகிறார்கள். ஆனால், இஸ்லாத்தை புரிந்து ஏற்று நடத்தல், ஆன்மீகவெளியில் பயணப்படல் என்பன அவர்களுக்கு அசாத்தியமாகவே இருக்கின்றன. இதே நிலைமையை நம் மத்தியிலுள்ள இஸ்லாமியக் கல்லூரிகளிலும் ஆன்மீக அறிவகங்களிலும் நம்மால் காணமுடிகின்றது. இன்று இஸ்லாம் பேசுவோரில் அதிகமானோர் அதனை ஆழ்ந்தறிந்தவர்கள் கிடையாது என்பதுதான் உண்மை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

வஹீதுத்தீன் கான் சொல்வது சமாதானமா, சரணாகதியா?

உண்மையில், அமைதியும் நீதியும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். நீதி இல்லாத இடத்தில் உண்மையான அமைதி இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தால் அது மயான அமைதியாக, திணிக்கப்பட்ட அமைதியாகத்தான் இருக்கும். சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு போராடச் சொல்கிறது இஸ்லாம். ஆனால், மௌலானா அவர்கள் இதை மறுக்கிறார். அவரது பிரதிகளை வாசிக்கும்போது, போராட்டம் என்பதையே ஒரு வன்முறை என்கிற ரீதியில்தான் அவர் பார்க்கிறார் என்பதை அவதானிக்க முடியும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

தத்துவமும் விஞ்ஞானமும் – ஜமாலுத்தீன் ஆஃப்கானி

மனிதன் பெற்ற முதற் கல்வி மதக் கல்வியாகும். ஏனெனில், விஞ்ஞான அறிவினை ஈட்டி, ஆதாரங்களையும் விளக்கங்களையும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சமூகமே தத்துவார்த்த அறிவினைப் பெற்றிருக்க முடியும். எனவே, எமது மதத் தலைவர்கள் முதலில் தம்மைத் தாம் சீர்திருத்தி, தமது விஞ்ஞானத்தினதும் அறிவுத் துறையினதும் பயன்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யாத வரையில் முஸ்லிம்கள் ஒருபோதும் சீர்திருந்தப் போவதில்லை என நாம் உறுதியாகக் கூற முடியும்.

மேலும் படிக்க