நீருக்குள் மூழ்கிய புத்தகம் - நிஷா மன்சூர் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ஒரு ரொட்டித் துண்டை உண்ணும் தவம்!

மெளலானா ரூமி பற்றி அறிந்த எல்லோரும் பிரபலமான இச்சம்பவத்தையும் அறிந்திருப்பர். மெளலானா ரூமியின் ஆளுமையையும் ஆகிருதியையும் வளர்த்தெடுத்த சம்பவம் அது. கொன்யா நகரத்தில் தனது மார்க்கப் பள்ளியில் மாணவர்களுடன் நீர்த்தடாகத்தின் அருகே அமர்ந்து அரிய நூல்களைக் கையில் வைத்தபடி உரையாடிக் கொண்டிருக்கிறார். பரதேசிக் கோலத்தில் இடையில் வந்த ஷம்ஸுத் தப்ரேஸ் அந்த நூல்களை நீர்த்தடாகத்தில் எறிந்து விடுகிறார். அவை மூழ்கியும் விடுகின்றன.

அவற்றில்தான் மெளலானா ரூமியின் தந்தையார் பஹாவுத்தீன் வலதின் மிக முக்கியமான நாட்குறிப்புகளின் தொகுப்பும் இருந்தது. “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று ரூமி பதறுகிறார், படபடத்துச் சினந்து முகம் சிவக்கிறார். ஆனால் அமைதியான குரலில் ஷம்ஸுத் தப்ரேஸ் பதிலளிக்கிறார்: “நீ இதுவரை படித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்ததை வாழவேண்டிய நேரம் வந்துவிட்டது. உனக்கு அந்தப் புத்தகங்கள் வேண்டுமெனில் அவற்றை மீட்டுத் தருகிறேன். அவை நனையாமல் உலர்ந்தபடிதான் இருக்கும், பார்க்கிறாயா?” என்றவாறு நீர்த்தடாகத்தில் கைகளைவிட்டு அந்த நூல்களை வெளியே எடுக்கிறார். அவை சிறிதும் நனையவே இல்லை. மெளலானா ரூமியின் தந்தையார் ஷைஃகு பஹாவுத்தீன் வலது அவர்களின் அந்த நாட்குறிப்புகளின் தொகுப்புதான் இந்த “நீருக்குள் மூழ்கிய புத்தகம்”.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ரூமியை இஸ்லாம்நீக்கம் செய்வதன் பின்னுள்ள அரசியல்

“மொழி என்பது வெறும் தொடர்புறுத்தலுக்கான ஊடகம் மட்டுமல்ல, அது நினைவின், பாரம்பரியத்தின், கலாச்சார முதுசத்தின் சேமிப்புக் களன்” என்கிறார் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆன சினான் அண்ட்டூன் (Sinan Antoon). இரு கலாச்சாரங்களுக்கு இடையிலான இணைப்பு பாலமாக இருப்பதனால், மொழிபெயர்ப்பாளர்கள் மேற்கொள்வது ஒரு அரசியல் வேலைத்திட்டம் (Political project) ஆகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டு கவிஞர் தற்கால அமெரிக்க வாசகருக்கு புரியும் வண்ணம் அவர்கள் தான் ஒரு வழி ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவர்கள் மூலப்பிரதிக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதன்மூலம், ரூமியின் விஷயத்தில், ஒரு ஷரியாத் துறை பேராசிரியரும் கூட உலகம் முழுக்க விரும்பி படிக்கப்படும் காதல் கவிதைகளை எழுத முடியும் என்று வாசிப்பவர்களால் அங்கீகரிக்க முடியும்.”

மேலும் படிக்க