கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

செக்யூலரிசமும் செக்யூலர்மயமாதலும்

மதத்தையும் அரசையும் பிரித்தல் என்று செக்யூலரிசத்தை எளிய முறையில் வரையறுக்கலாம். செக்யூலரிசம் பல்வேறு விதமாக மதச்சார்பற்ற நாடுகளில் வெளிப்படும். இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அது உள்ளடக்கும் (Inclusive) தன்மையில் இருப்பதாகச் சொல்வார்கள். அதுவே பிரான்ஸ் பாணி மதச்சார்பின்மையானது அரசிலிருந்து மதங்களை முற்றிலும் பிரிக்கும் பண்பைக் கொண்டது. அதை ‘லைசிடே’ என்றழைப்பார்கள். துருக்கியின் மதச்சார்பின்மையை ‘லைக்ளிக்’ என்கிறார்கள். அது பிரான்ஸைவிட மதத்தில் நேரடியாகத் தலையிடுகிறது.

இப்படி செக்யூலரிசம் நடைமுறைப்படுத்தப்படுவதில் வித்தியாசங்கள் இருப்பது உண்மையே. அதேசமயம் அவற்றுக்கு மத்தியிலுள்ள பொதுப் பண்பை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. நவீன தேச அரசு எனும் கட்டமைப்புக்குள் இயங்கும்போது அதன் பண்பை அது எல்லா மதச்சார்பற்ற நாடுகளிலும் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. ஆம், சமயத்தை, சமய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாகச் செல்லரிப்பது அதன் முதன்மையான பொதுப்பண்பு எனலாம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமும் மதச்சார்பற்ற கல்விமுறையும் – ஜாஸிர் அவ்தா

மார்ச் 12 அன்று திருச்சி அஸ்ஸலாம் கல்லூரியில் எஸ்ஐஓ நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் அறிஞர் ஜாஸிர் அவ்தா ஆற்றிய உரையின் சுருக்கம். புதிய சிந்தனைகளை உள்வாங்கிக்கொள்ள உங்களுடைய இந்த வயதுதான் சரியானது என்று நம்புகிறேன். முற்காலத்தில் இஸ்லாத்தைத் தம் தோள்களில் சுமந்த பல சஹாபாக்கள் பதின்ம வயதுடையவர்களாய் இருந்திருக்கிறார்கள். அலி, அர்கம், முஸ்அப் பின் உமைர், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) போன்றோர் இதற்கு சில உதாரணங்கள். அவர்கள் உலகையே மாற்றியமைப்பதற்கான பார்வையைக் கொண்டிருந்ததோடு, உலகின் போக்கை மாற்றியமைக்கவும் செய்தார்கள் என்பது வரலாறு. அந்த வகையில் உங்களின் முன்பு, மகாஸிதுஷ்ஷரீஆ குறித்துப் பேசுவதை என் கடமையாக உணர்கிறேன். அது இஸ்லாமியச் சிந்தனையின் ஒரு கிளை மட்டுமின்றி, அது இஸ்லாம் குறித்ததொரு புதிய பார்வை. அதை உள்வாங்கிக்கொள்வதற்கு நாம் இஸ்லாம் அல்லாத சிந்தனைமுறைகளிலிருந்து விடுபட வேண்டியது அவசியம். இஸ்லாத்துக்காகப்…

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

மதச்சார்பின்மையை மதச்சார்பற்றதாக்குதல்!

ஃபிரெஞ்சு விவகாரத்தை ஒற்றைக் கலாச்சாரவாதத்துக்கு (Cultural Monism) சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியும். ‘மதச்சார்பற்ற’ அரசியல் சாசனம் மதச் சுதந்திரத்தை வழங்குவதாக உறுதியளித்தாலும், அது நடைமுறையில் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம். அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு பிரதி. ஆதிக்கம் செலுத்தும் கலாச்சார மதிப்பீட்டின் தாக்கத்துக்கு ஆட்பட்டு அதை வாசித்து ஒரு புரிதலுக்கும் நடைமுறைக்கும் அவர்கள் வருகிறார்கள். கிறிஸ்தவத்தின் செல்வாக்குக்கு ஆளாகியுள்ள அவர்களிடம் எது இயல்பு, எது இயல்பல்ல என்ற முன்னுணுர்வு இருக்கிறது. ஒரு பெண் தலை முக்காடு அணிகிறாள் என்றால் அது ஃபிரெஞ்சுப் பொதுப்புத்திக்கு அசாதாரணமாகவும், இயல்பு மீறிய ஒன்றாகவும் படுகிறது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

திராவிட சாஹிப்களும் பிராமண மௌலானாக்களும்

இந்தியா முழுக்கவுள்ள கிறித்தவர் மற்றும் முஸ்லிமல்லாத எல்லாச் சமூகங்களையும் இந்துக்களாகக் கற்பித்து முஸ்லிம்களை எதிர்க்கச்சொன்னது இந்து தேசியவாதம். இந்துக்களையும் முஸ்லிம்களையும் இருவேறு சமூகங்களாகப் பிரித்து இரு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது மதச்சார்பற்ற தேசியம். ஆனால் திராவிட இயக்கமோ பார்ப்பன-பனியாக்களை விலக்கிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மொழி மற்றும் மதச்சிறுபான்மையினரின் ஐக்கியத்தை வலியுறுத்தியது. இங்கு முஸ்லிம்கள் பிற சமூகங்கள் போலவே தங்களது அடையாளத்தை முன்னிறுத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாய்ப்பை பெற்றார்கள். அவர்களது கோரிக்கை தேச விரோதம், பிரிவினைவாதம் என்று குற்றப்படுத்தப்படாத நிலை ஏற்பட்டது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 10) – மரியம் ஜமீலா

“இஸ்லாத்தை உண்மையாக நேசிப்பவர்கள், அதுதான் சத்தியம் என்பதில் உள்ளத்தால் திருப்தியடைந்தவர்கள் மேலும் அதில் உள்ளார்ந்த நம்பிக்கை கொண்டவர்கள், தற்போதைய நிலைமைக்காக ஒருபோதும் பேரச்சம் கொள்ளவோ, அவநம்பிக்கைக்கு சரணடையவோ மாட்டார்கள். அத்தகையவர்கள், இஸ்லாத்தின் உயர்நிலைக்காக தங்கள் கடைசி மூச்சு வரை போராடுவது –அது இவ்வுலகில் வெற்றியாயினும் தோல்வியாயினும்- தங்கள் கடமை என்று கருதுகின்றனர். அவர்களது முயற்சிகள் இங்கு தோல்வியடைவது போல் தோன்றினும் உண்மை வெற்றி என்பது மறுமையில் பெறும் பாவமீட்சியே என்று நம்புகின்றனர். மேலும் அதுவே அவர்களது குறிக்கோள். இந்தக் கண்ணோட்டத்தில், உண்மையான கடமையுணர்ச்சி கொண்ட முஜாஹிதுகள் தோல்வியடைவதில்லை. மாறாக தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறிகொண்டே, இஸ்லாமிய ஒழுங்கிற்காக பாடுபடுபவர்களை வீழ்த்தவும் தடுக்கவும் தங்களால் இயன்றளவு முயற்சி செய்பவர்களே அசலில் தோல்வியும் வீழ்ச்சியும் அடைகின்றனர். அவர்களே இவ்வுலகிலும் மறு உலகிலும் இறைவனின் தண்டனைக்கு தகுதியானவர்கள். அத்தண்டனை தாமதமாகலாம், எனினும் அல்லாஹ்வின் சீற்றம் வரும்போது அது முழு உலகிற்கும் ஒரு எச்சரிகையாகவும் கடிந்துரையாகவும் அமையும். எனினும் நாளை காலை சூரியன் உதிக்கும் என்பதை எந்தளவு உறுதியாக நான் நம்புகிறேனோ, அதேபோல் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியப் படை முடிவாக வெற்றி பெறும் என்பதையும் நான் நம்புகிறேன்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 6) – மரியம் ஜமீலா

“இன்று முஸ்லிம் உலகை குழப்பங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்லாமிய மாநாட்டிற்கான இவ்வழைப்பு புதிய நம்பிகைகளை ஊட்டுகிறது. எனவே நட்பு மற்றும் கூட்டுறவுக்கான அழைப்பு எந்த நாட்டிலிருந்து வந்தாலும், முஸ்லிம்கள் அதை வரவேற்க வேண்டும்; அதே சமயம் நமது பின்தங்கிய நிலையையும் ஒற்றுமையின்மையையும் பயன்படுத்திக் கொள்வதற்கு என்றென்றும் கண்காணித்துக் கொண்டிருக்கும் உலக சக்திகள் குறித்து எச்சரிகையாக இருக்க வேண்டும். உண்மையில், எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமையை வேண்டி நிற்கிறது. இதன் காரணமாக ஒவ்வொருவரின் தனித்தனிச் சக்தியும் ஒரே கூட்டுச் சக்தியாக மாறிவிடும். இது மட்டுமே, முஸ்லிம்கள் தங்கள் சுதந்திரத்தைத் தக்கவைத்து, உலக விவகாரங்களில் ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான பங்காற்றி, தாங்கள் பெரிதும் விரும்பும் புத்துயிர்ப்பைக் கொண்டுவருவதற்கான பாதையாகும்.”

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

சஈத் நூர்ஸியும் ரிஸாலா-யே நூரும்

குர்ஆனிய உலகநோக்கை உட்கிரகித்து, இஸ்லாத்தின் புரட்சிகர இயல்பில் ஆழ்ந்த பற்றுறுதி கொண்டு, எதை நிர்மூலமாக்கி எதை நிர்மாணிக்க முனைகிறோம் என்பது பற்றிய பூரண பிரக்ஞை கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்குவதற்குப் பொருத்தமானவொரு கல்விமுறையே உண்மையில் இன்று தேவையாக இருக்கிறது. அத்தகைய ஒன்றையே சஈத் நூர்சி தனது ‘ரிஸாலா-யே நூரில்’ முன்வைக்கிறார்.

மேலும் படிக்க