நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய விஞ்ஞானங்கள்: அர்த்தம், சாத்தியம், எதிர்காலம்

இஸ்லாமிய அறிஞர்கள் அவர்களுடைய மரபை முழுமையாக அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், இது தொடர்பாக மேற்கத்திய அறிஞர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஜெர்மன், பிரெஞ்சு, மற்றும் இன்ன பிற மொழிகளில் உள்ள அறிவுசார் ஆய்வுகளை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய கல்விப்புல ஆய்வுகள் மீது அறிவை அடிப்படையாகக் கொண்டு விமர்சனங்களை முன்வைக்க முடிந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் கல்விப்புலம் சார்ந்த போதாமைகள் இருக்குமானால் அவர்களின் எழுத்துகளை எவரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. இதற்கு மொழியாளுமையும் தேவைப்படுகிறது. அறபு, பாரசீகம், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு கட்டாயமாகத் தேவைப்படுகின்றன. மேலும் ஒரு இஸ்லாமிய மொழியையும் அறிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு அறிஞர் உஸ்மானிய அறிஞர்கள் பற்றியோ, இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் பற்றியோ அக்கறை கொண்டிருப்பாரானால், அவர் துருக்கி அல்லது உருது மொழியைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இன்று ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்பதற்கான அளவுகோல் என்னவென்றால், அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் முக்கியமான மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் கூட மரியாதையை உண்டாக்கக்கூடிய உரையை நிகழ்த்தக்கூடிய திறன்படைத்தவராக அவர் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

மார்டின் லிங்ஸ்: ஓர் அறிமுகம்

2005-05-12-ல் மார்டின் லிங்ஸ் என்ற அபூ பக்ரு அல்-சிராஜுத்தீன் தனது 96 வயதில் இறையடி சேர்ந்ததை யடுத்து, The Journal of Islam & Science, Vol. 3, No. 2-ல் டாக்டர் முஸஃப்பர் இக்பால் எழுதிய நினைவேந்தல் கட்டுரையை தழுவி இதை ஆக்கியிருக்கிறேன். மெல்லினம் பதிப்பித்த ‘சூஃபியிசம் என்றால் என்ன?’ என்ற நூலில் இது பிரசுரமாகியுள்ளது.

மேலும் படிக்க