5 states election results 2022 காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

பாஜகவின் தேர்தல் வெற்றிகளும் முஸ்லிம்களும்

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததையொட்டி சகோதரன் இணையதள ஆசிரியர் பஷீர் அஹ்மதுடன் மெய்ப்பொருள் ஆசிரியர் நாகுர் ரிஸ்வான் மேற்கொண்ட உரையாடல்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழகத்தில் முஸ்லிம் இடஒதுக்கீடு: தேவைகள், சிக்கல்கள், தீர்வுகள் – அ.மார்க்ஸ்

முஸ்லிம்களின் பிரச்னைகள் இன்றும் பல தளங்களில் உள்ளன. அரசு நலத்திட்டங்களின் பங்கு, கடன் வசதி பெறுதல், தனியார் துறைகளில் ஒதுக்கீடு, மதரசாக் கல்விக்கு உரிய ஏற்பு, வக்ஃப் சொத்துகளை மீட்டு முஸ்லிம்களுக்குப் பயனுடையதாக ஆக்குதல், தொகுதிச் சீரமைப்பு, முனிசிபாலிடி மற்றும் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றில் இடஒதுக்கீடு என எத்தனையோ விவகாரங்கள் இருக்கின்றன. 3.5% இடஒதுக்கீடு ஆணை பெற்றதோடு முஸ்லிம் இயக்கங்களின் பணி ஓய்ந்துவிடவில்லை என்பதையும், சிறுபான்மை மக்களின் உரிமை கோரலை வெறும் இடஒதுக்கீடு என்பதோடு நிறுத்திக்கொண்டால் அதில் பெரியளவுக்குப் பயனிருக்காது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சுதந்திரம் அடைந்த 72 ஆண்டுகளுக்குப் பின் இந்திய முஸ்லிம்களின் நிலை

இன்றைய தேர்தல் அரசியல் என்பதே முஸ்லிம்களை ‘நாம்-அல்லாதவர்களாக’ மற்றமைப் படுத்துவதுதான். உன் அடையாளத்திற்கு ஒரு அச்சுறுத்தல் என்கிற ரீதியில், நீ முஸ்லிம் வெறுப்புப் பேச்சை அவிழ்ப்பதன் ஊடாக நீ உன்னவர்களாக வரையறுப்பவர்களை ஒருங்குதிரட்டிக்கொள்ள வேண்டும். முஸ்லிம்களை மற்றவர்களாக்குவதுதான் இன்றைய தேர்தல் அரசியல்!

தாங்கள் (முஸ்லிம் ஆட்சி முதலிய) வரலாற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற அச்சம் இந்துக்களுக்கு உண்டு. உலகளாவிய கிலாஃபத் இயக்கம் முதலியன ஆர்எஸ்எஸ் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தன. இப்படியான அணிதிரட்டலில் பலனடைகிறோம் என்றால், அதை அவர்களும் செய்வார்கள்தானே. செய்கிறார்கள். எல்லா அம்சங்களிலும் (பாபர் மசூதி தொடங்கி) அது நடக்கிறது. ஆங்காங்கு வன்முறைகள். கலவரங்கள் இன்னொரு பக்கம். எல்லாவற்றையும் தங்களின் ‘தேர்தல் போர்த் தந்திரம்’ என்பதாக முன்வைத்து அவர்கள் மேலே மேலே செல்கின்றனர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்திய முஸ்லிம்கள் சிறுபான்மையினரா?

சிறுபான்மை என்று வரையறுக்கப்படுவதில் எண்ணிக்கை மட்டுமே மையமான அம்சம் அல்ல. ஒரு அரசியல் அமைப்பில் பெரும்பான்மைச் சமூகத்தை ஒப்பிடுகையில் சிறுபான்மைச் சமூகம் எவ்வாறு அதிகாரம் குன்றிய நிலையில் இருக்கிறது என்பதே அதில் மையமானது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரின் கண்டிக்கத்தக்கப் பேச்சு!

தலித்களுக்கு எதற்காக ஒரு அரசியல் கட்சி? விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் பாமக போன்ற சாதியக் கட்சிகளே பலனடைகின்றன. எனவே அது ஒரு ‘மைய நீரோட்ட’ கட்சியின் தலைமையை ஏற்று அதனுடன் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். நிலவுகிற அரசியல் சூழலில் இப்படியெல்லாம் ஒடுக்கப்படும் தரப்பிடம் ஒருவர் அபத்தமாக அட்வைஸ் செய்தால் அவற்றை நாம் ஏற்போமா?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அருவமாக்கப்படும் முஸ்லிம்கள்

கடந்த காலத்தில் இந்திய முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரசியல் களத்தில் செய்த பெரிய தவறு முஸ்லிம் சமூகத்தை ஒரு மதம்சார்ந்த மக்கள் தொகுதியாக மட்டுமே முன்வைத்ததும், மதம் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே அரசியலாக்கியதும்தான். அரசியல் கோரிக்கைகளை முஸ்லிம் கட்சிகள் முதன்மைப்படுத்தவில்லை.

மேலும் படிக்க