கட்டுரைகள் 

இஸ்லாமிய இலக்கியம்: தமிழ் இஸ்லாமிய புலத்தின் மீதான தொடக்கநிலை வாசிப்பு

இஸ்லாம் கலைகளை வெறுக்கிறது என்ற எண்ணத்தில் கலைகள் விசயத்தில் கடினபோக்குடையோர் இப்பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கின்ற அழகை உய்த்துணர்வதற்கான வாயில்களை மூடிக் கொள்கின்றனர். இதனால் அவர்கள் அழகு என்னும் இந்த அருளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாதவர்களாக ஆகிவிடுகின்றனர். அவ்வாறு இருக்க அவர்கள் விரும்பாவிட்டாலும் கூட. அதாவது பைத்தியக்காரன் ‘அறிவு’ என்னும் அருளுக்காக அல்லாஹ்வுக்கு எப்படி நன்றி செலுத்துவான்? ஏனெனில் அவனிடம் அறிவு இல்லாத போது, அந்த அருள் அவனுக்கு வாய்க்காதபோது அவன் எப்படி அதன் பெறுமதியை உணர்ந்து அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த முடியும்? இப்பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கும் அழகின் அத்தாட்சிகளுக்கு புறமுதுகு காட்டுவோர், அல்லாஹ் சொரிந்திருக்கின்ற அந்த அருளின் பெறுமதியை எப்படி உணரமுடியும்? எனவே, கலைகள் தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள இந்தத் தர்க்கவியல் நுழைவு இன்றியமையாதது. உண்மையில் இஸ்லாம் கூறியுள்ள வழிமுறையும் ஒழுங்கும் கூட இதுதான்.

மேலும் படிக்க