தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அருட்கொடைகளும் நன்றிகெட்டத்தனமும் -1

சொல்லுக்கும் செயலுக்கும், கொள்கைக்கும் நடத்தைக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அது தொடர் முயற்சியையும் பயிற்சியையும் அல்லாஹ்வுடனான தொடர்பையும் அவனது உதவியையும் வேண்டி நிற்கிறது. வாழ்வின் சூழல்களும் தேவைகளும் தனிமனிதனை அவன் நம்பும் கொள்கையிலிருந்தும் அழைக்கும் பாதையிலிருந்தும் திசைதிருப்பவே செய்கின்றன. அழியக்கூடிய இந்த மனிதன் என்றும் நிலைத்திருப்பவனுடன் தொடர்பு கொள்ளவில்லையெனில் பலவீனப்பட்டுப் போவான். ஏனெனில் தீமையின், அநியாயத்தின் ஆற்றல்கள் அவனைவிட வலிமையானவை. அவை அவனை எளிதாக வீழ்த்திவிடும். அவனது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் நாசமாக்கிவிடும். என்றும் நிலைத்திருக்கும் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் மனிதன் பலம்பெற்று விடுகிறான். பலமான அனைத்தையும் மிகைத்துவிடும் அளவுக்கு அவன் பலம்பெற்றுவிடுகிறான். தன் இச்சையை, பலவீனத்தை, தேவைகளை மிகைத்து விடுகிறான். எதுவும் அவனை அடிமையாக்கி விடுவதில்லை.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

யூதர்களும் இஸ்லாமிய அழைப்பும்

இஸ்ராயீலின் மக்களுடைய சம்பவம்தான் திருக்குர்ஆனில் அதிகமாக இடம்பெற்ற சம்பவமாகும். அது எடுத்துரைக்கும் சந்தர்ப்பங்களும் அவற்றிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை முஸ்லிம் சமூகத்தை சீர்படுத்துவதற்கும் பண்படுத்துவதற்கும் பிரதிநிதித்துவ பணிக்காக அதனைத் தயார்படுத்துவதற்குமான அல்லாஹ்வின் நோக்கத்தை உணர்த்தக்கூடியவையாக இருக்கின்றன.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நிராகரிப்பாளர்களும் நயவஞ்சகர்களும் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

இதுபோன்ற வசனங்களில் நாம் மிகப் பெரிய உண்மையை, அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு அளிக்கும் பெரும் சிறப்பைக் காண்கிறோம். இந்த உண்மையை திருக்குர்ஆன் மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கிறது, நிலைநிறுத்துகிறது. அது அல்லாஹ்வுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையேயுள்ள தொடர்பைக் குறித்த உண்மைநிலையாகும். அவன் அவர்களின் அணியை தன் அணி என்றும் அவர்களின் விவகாரத்தை தன் விவகாரம் என்றும் கூறுகிறான். அவர்களின் ஒவ்வொரு செயலையும் தன்னோடு இணைத்துக் கூறுகிறான். அவர்களைத் தன்னோடு அரவணைத்துக் கொள்கிறான். அவர்களின் எதிரியை தன் எதிரி என்கிறான். அவர்களுக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சியை தனக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சி என்கிறான். இதுதான் மிக உயர்ந்த கண்ணியம். அவன் நம்பிக்கையாளர்களுக்கு உயர்வையும் பெரும் கண்ணியத்தையும் அளிக்கிறான். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையும்விட ஈமானே மிகப் பெரியது, மிகவும் கண்ணியமானது. அது நம்பிக்கையாளனின் உள்ளத்தில் எல்லையில்லா திருப்தியை ஏற்படுத்துகிறது, அல்லாஹ் நம்பிக்கையாளனின் விவகாரத்தை தன் விவகாரமாக, அவனது போராட்டத்தை தன் போராட்டமாக, அவனது எதிரியை தன் எதிரியாகக் காண்கிறான் என்பதை அவன் எண்ணும்போது. இந்த அரவணைப்பிற்கு, பாதுகாப்பிற்கு முன்னால் அடிமைகளின் சூழ்ச்சியும் ஏமாற்றும் என்ன செய்துவிடப் போகிறது!?

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

அல்பகறா (பசுமாடு) அத்தியாயம் – முன்னுரை (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

அன்று இஸ்லாமும் முஸ்லிம்களும் எதிர்கொண்ட அந்த சூழல்களைத்தான் பொதுவாக எல்லா இடங்களிலும் காலகட்டங்களிலும் – சிறிது மாற்றத்துடன் – முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். அதே வகையான நண்பர்கள், அதே வகையான எதிரிகள். இதுதான் குர்ஆனின் போதனைகளை இஸ்லாமிய அழைப்பின் நிரந்தர சட்டமாக ஆக்கி விடுகிறது. அதன் வசனங்களில் ஒவ்வொரு காலகட்டத்தையும் நிலையையும் எதிர்கொள்ள புத்தம் புதிய வழிமுறைகள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. சிரமங்கள்மிகுந்த தம் நீண்ட பாதையில் முஸ்லிம் சமூகம் அந்த வசனங்களைக் கொண்டு வழிகாட்டலைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அந்தப் பாதையில் வரக்கூடிய தடைகள் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டதாக ஆனால் ஒத்த இயல்பினைக் கொண்டவையாக இருக்கின்றன. குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திலும் இந்த தனித்தன்மை வெளிப்படுகிறது. இது அதன் அற்புதங்களில் ஒன்றாகும்.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

காரிருள் (பகுதி 1) – சையித் குதுப்

மனிதனின் கண்ணோட்டத்திற்கும் சமூக அமைப்பிற்குமிடையே என்றும் அறுபடாத உறுதியான தொடர்பு உண்டு. அவனது சமூக அமைப்பு, இந்தப் பிரபஞ்சத்தைக் குறித்தும் அதில் மனிதனின் நிலை மற்றும் அவன் படைக்கப்பட்ட நோக்கம் குறித்தும் தெளிவுபடுத்தக்கூடிய அந்த விளக்கத்திலிருந்தே வெளிப்படும் ஒன்றாகும். இந்த விளக்கத்தின் அடிப்படையில் அல்லாமல் கட்டமைக்கப்படும் சமூக அமைப்பு வாழத் தகுதியற்ற செயற்கையான சமூக அமைப்பாக இருக்கும். அது நிலைத்திருக்கும் காலகட்டம் மனிதனுக்குத் துன்பம் மிகுந்த, அதற்கும் அவனது இயல்புக்குமிடையே மோதல் நிகழும் காலகட்டமாகத்தான் இருக்கும். அது இயல்பான தேவை மட்டுமல்லாமல் அமைப்பியல் ரீதியான தேவையும்கூட.

மேலும் படிக்க