நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

உலகத் தொழிலாளர்களே, ஓய்வெடுங்கள்!

அணுக்களால் உருவான பொருள் உலகத்திலிருந்து பொருட்களற்ற அருவ உலகத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம் என்கிறார் தென்கொரியாவில் பிறந்த சுவிஸ் – ஜெர்மன் தத்துவவியலாளர் ப்யுங் சுல் ஹான். உருவில்லா அருவப் பொருட்களையே நேசிக்கவும் பகிரவும் செய்கிறோம், அவையே நம்மை ஆள்கின்றன. யதார்த்த உலகிற்கும் எண்ம உலகிற்குமான (digital world) வேறுபாடுகள் குறையும்போது நம்முடைய இருப்பு என்பது கேள்விக்குள்ளாகிறது என்கிறார் ஹான். உலகளவில் அதிகம் வாசிக்கப்படும் தத்துவவியலாளரான ஹான், நவதாராளவாத முதலாளித்துவத்தின் விளைவுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்.

மேலும் படிக்க
srilanka economic crisis explained tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நெருக்கடியில் இலங்கைப் பொருளாதாரம் – அரசியல் பொருளாதார நிபுணருடன் ஓர் உரையாடல்

கடந்த பல மாதங்களாக உக்கிரமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றிய கட்டுரைகள் உள்ளூர் ஊடகங்களிலும், உலகளாவிய ஊடகங்களிலும் பிரதானமாக இடம்பெறுகின்றன. இலங்கையின் பெரும் வெளிநாட்டுக் கடன் சுமை, அந்நியச் செலாவணி இருப்பு குறைதல், எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டுள்ள சவால்கள் முதலான நெருக்கடியின் அறிகுறிகள் பற்றியே அவற்றில் பெரும்பாலான கட்டுரைகள் பேசுகின்றன. இலங்கை அரசியல் பொருளாதாரத்தின் நீண்டகால அம்சங்கள், அவற்றுக்கு இப்போதைய நெருக்கடியுடன் உள்ள உறவுகள் குறித்த கேள்விகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கடந்த கால இலங்கை அரசாங்கங்களின் அரசியல் பொருளாதாரக் கொள்கை முடிவுகள், பெருந்தொற்றுக்குப் பின்னர் இலங்கைப் பொருளாதாரத்தை அதிகமாகவோ குறைவாகவோ அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதா? பொதுவெளியில் வல்லுநர்களும் கருத்தாளர்களும் பொருளாதாரம் பற்றி எப்படி விவாதிக்கிறார்கள்? இப்போதைய அரசாங்கத்தின் முன்னுள்ள பணிகள் என்ன?

அரசியல் பொருளாதார நிபுணரும், வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் கௌரவத் தலைவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளருமான அகிலன் கதிர்காமர் அவர்களுடன் நாம் மேற்கொண்ட கலந்துரையாடல் இந்நேர்காணல். கதிர்காமர் இலங்கையின் பொருளாதாரப் பாதை, அதன் கட்டமைப்பு அம்சங்களை மட்டும் விவரிக்காமல், இப்போதைய நெருக்கடிகள் பற்றிய ஆழமான பார்வையை வழங்குகிறார். அதே வேளையில் இப்போதைய பிரச்னை குறித்த விவாதங்களின் தென்படும் சிக்கல்களையும் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

இளைய தலைமுறையை படுகுழியில் தள்ளும் ஆபாசம் – உம்மு ஃகாலிது

“இளைய தலைமுறையினரிடம் நிர்வாணத்தையும் விபச்சாரத்தையும் பரவலாக்கினால் எந்தவொரு நாட்டையும் யுத்தமின்றி அழித்துவிட முடியும்” என்பார் சலாஹுதீன் அய்யூபி. உண்மையில், சமூகத்தில் அழிவை உண்டாக்கும் இந்த விஷயங்களை இன்று நாம் பரவலாகக் காண முடிகிரது. நிர்வாணமும் கட்டற்ற விபச்சாரமும் விஸ்வரூபமெடுத்திருக்கின்றன.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கடவுள் சந்தை: உலகமயமாக்கல் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துமயமாக்குகிறது?

அரசு-கோயில்-தனியார்துறைப் பிணைப்பு என்பது புதிதல்ல. மதச்சார்பற்றதாகக் கருதப்படுகின்ற இந்திய அரசு, பொதுக்களத்தில் இந்துமதச் சின்னங்களைக் கொண்டாடுவதில் என்றும் விலகிச் சென்றதில்லை. இதெல்லாம் இந்தியக் கலாச்சாரத்தைப் பரப்புதல் என்ற பெயரிலேதான் நடந்தன. வணிகர்களுக்கும் வணிகக் குடும்பங்களுக்கும் பல நூற்றாண்டுகளாகத் தொடரும் நீண்டதொரு வரலாறு இருக்கிறது. அவர்கள் எப்போதுமே தங்கள் தேர்வுக்குரிய கடவுளர்க்கோ குருமார்களுக்கோ சமர்ப்பிக்கப்பட்ட கோயில்களையும் மடங்களையும் ஆதரித்தே வந்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

வணிகப் பொருளா கல்வி?

கல்வியே ஒரு சேவைதான். அதை வணிகத்திற்குரிய சேவையாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது. எவ்வித பாரபட்சமுமின்றி எல்லோருக்கும் தரமான கல்வி வழங்கவேண்டியது அரசின் கடமை. கற்றல் ஒருபோதும் பண்டமாக இருந்ததில்லை. கற்றலும் கற்பித்தலும் ஓர் அறப்பணி என்பதாகவே நாம் கருதுகிறோம். அதை வணிகமயபடுத்துவது நாட்டைத் சிதைத்து சின்னாபின்னமாக்கவே வழிகோலும்.

மேலும் படிக்க