கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 2) – மரியம் ஜமீலா

“எனவே, என் முன் மூன்று பிரச்னைகள் இருந்தன; நாடு பிரிக்கப்படாவிட்டால் முஸ்லிம்களை பாதுகாக்க என்ன செய்வது; நாடு பிரிக்கப்பட்டால் இந்தியாவில் தங்கிவிடும் முஸ்லிம்களுக்காக என்ன செய்வது; பிந்திய நிகழ்வில், புதிய முஸ்லிம் நாடு இஸ்லாம் அல்லாத அரசாக உருவாகிவிடாமல் தடுத்து, அசல் இஸ்லாமிய அரசாக உருவாக வழி செய்வது எவ்வாறு?”

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 1) – மரியம் ஜமீலா

மரியம் ஜமீலா Islam in Theory and Practice என்ற தனது நூலில் அபுல் அஃலா மௌதூதி பற்றி எழுதியுள்ள அத்தியாயத்தை இங்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். நீண்ட ஆக்கம் என்பதால் பகுதி பகுதியாக வெளியிடுகிறோம். அதில் முதற் பகுதி கீழே.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஒரு தலித் போராளியின் வாழ்வும் அவர் காட்டிய வழியும்

‘இறைவனின் இந்த இஸ்லாமியத் தத்துவங்கள் உலகெல்லாம் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்தச் சூழலிலும் எடுத்துச் செல்ல வெண்டிய மாபெரும் தத்துவங்களாகும். இவை இரகசியமாகக் கூட்டங்களில் சொல்லப்படவேண்டியவை அல்ல. மாறாக மலை மீதும், குன்றின் மீதேறியும் நின்று வெளிப்படையாக அனைத்து மக்களுக்கும் எட்ட வைக்கப்பட வேண்டிய உயர்ந்த தத்துவங்களாகும். அனைத்து மக்களுக்கும் வழி காட்டக் கூடிய கருத்துக்களாகும். இறைவன் ஒருவனே, நீங்கள் அவனையே நம்புங்கள். முஹம்மது நபி அவர்களையே ஏற்றுக் கொள்ளுங்கள், பின்பற்றுங்கள்”.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

முஹம்மது அபூ ஸஹ்றா – ஓர் அறிமுகம்

அவரது நூல்களுள் அனைத்தைக் காட்டிலும் மிகப் பிரபலமானவை, ஒரு தொடராய் அமைந்த எட்டு நூல்கள்தாம். அவை ஒவ்வொன்றையும் அவர் இஸ்லாமிய வரலாற்றிலிருந்த முன்னணி அறிஞர்களுள் ஒருவரது வாழ்வு, கண்ணோட்டங்கள், புலமைத்துவம் ஆகியவற்றை ஆராய்வதற்கு ஒதுக்கியிருக்கிறார். அவ்வறிஞர்கள் பின்வருமாறு: அபூ ஹனீஃபா, மாலிக், அல்-ஷாஃபியீ, அஹ்மது இப்னு ஹன்பல், ஸைது இப்னு அலீ, ஜாஃபர் அஸ்-சாதிக், இப்னு தைமிய்யா மற்றும் இப்னு ஹஸ்ம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

மார்டின் லிங்ஸ்: ஓர் அறிமுகம்

2005-05-12-ல் மார்டின் லிங்ஸ் என்ற அபூ பக்ரு அல்-சிராஜுத்தீன் தனது 96 வயதில் இறையடி சேர்ந்ததை யடுத்து, The Journal of Islam & Science, Vol. 3, No. 2-ல் டாக்டர் முஸஃப்பர் இக்பால் எழுதிய நினைவேந்தல் கட்டுரையை தழுவி இதை ஆக்கியிருக்கிறேன். மெல்லினம் பதிப்பித்த ‘சூஃபியிசம் என்றால் என்ன?’ என்ற நூலில் இது பிரசுரமாகியுள்ளது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

சஈத் நூர்ஸியும் ரிஸாலா-யே நூரும்

குர்ஆனிய உலகநோக்கை உட்கிரகித்து, இஸ்லாத்தின் புரட்சிகர இயல்பில் ஆழ்ந்த பற்றுறுதி கொண்டு, எதை நிர்மூலமாக்கி எதை நிர்மாணிக்க முனைகிறோம் என்பது பற்றிய பூரண பிரக்ஞை கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்குவதற்குப் பொருத்தமானவொரு கல்விமுறையே உண்மையில் இன்று தேவையாக இருக்கிறது. அத்தகைய ஒன்றையே சஈத் நூர்சி தனது ‘ரிஸாலா-யே நூரில்’ முன்வைக்கிறார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

சையித் குதுப்: ஓர் அறிமுகம்

சிறையிலிருந்த காலத்தில் பல முக்கிய ஆக்கங்களை சையித் குதுப் எழுதி முடித்தார். அவை அனைத்திலும் பிரதானமாக, அவர் 1962-ஆம் ஆண்டு எழுதத் துவங்கிய ‘ஃபீ ழிலால் அல்-குர்ஆன்’ (‘திருக்குர்ஆனின் நிழலில்’) என்ற திருக்குர்ஆன் விரிவுரை ஆக்கமும் இதில் அடக்கம். அவருடைய வாழ்வின் அன்றாட போராட்ட மோதல் சூழ்நிலைகளால் இவ்விரிவுரை பெருமளவு தாக்கத்திற்கு உள்ளானது எனலாம். ஒவ்வொரு வசனத்திலும் இடம்பெறும் மொழியியல் மற்றும் வரலாற்று விவரணங்களைக் குறிப்பிடுவதிலும், விரிவான மேற்கோள்களையும் மாறுபட்ட அபிப்பிராயங்களையும் எடுத்துக் கூறுவதிலுமே கவனத்தைக் குவிக்கும் ஏனைய மரபுமுறை விரிவுரை ஆக்கங்களிலிருந்து இது மிக அடிப்படையிலேயே மாறுபடுகின்றது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

முஹம்மது அல்கஸ்ஸாலி: ஓர் அறிமுகம்

இஸ்லாத்தின் மீது ஷெய்ஃக் அல்-கஸ்ஸாலி மகத்தான பற்றுணர்வு கொண்டிருந்தார். அவரது சகல எழுத்துக்களிலும், அவரின் சக்தி வாய்ந்த நடையிலும் இது பிரதிபலித்தது. அவரின் வலுவான வாதத் திறமையும் புலமைத்துவ அணுகுமுறையும் அவரின் எழுத்து நடையை செறிவூட்டி இருந்தன. அவரின் நூல்கள் அனைத்தையும் குறிப்பிடுவதோ, அவற்றின் உள்ளடக்கம் பற்றிய சுருக்கக் குறிப்புகள் தருவதோ இங்கு சாத்தியமில்லை. தனது நீண்ட பணிக் காலத்தில் அவர் ஐம்பதுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

இமாம் அபூ ஹனீஃபா: வாழ்வும் பணிகளும்

நிலவும் ஆதிக்க அமைப்பில் பங்கேற்று பதவிகளுக்கு வருவதன் மூலம் சமூகத்திற்குத் தம்மால் பங்களிப்புச் செய்ய முடியும் என்பதான ஒரு கற்பிதம் இன்று கேள்விக்கப்பாற்பட்ட ஒன்றாக மாறிவருகிறது. அமுலில் இருக்கும் சட்டவிரோத ஆட்சிக்கு ஒரு துளியேனும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்காதிருப்பதே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும் என்பதில் இமாம் அபூ ஹனீஃபா மிகத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருந்தாக இந்நூல் மூலம் அறியவருகிறோம்.

மேலும் படிக்க