வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் முஸ்லிம்கள்
![]()
SIR எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் முற்றிலும் குளறுபடிகள் நிறைந்தவையாகவும், முறையான திட்டமிடலின்றி மேற்கொள்ளப்படுபவையாகவும், சட்டப்பூர்வ நியாயங்கள் அற்றவையாகவும் உள்ளன என்பது தெளிவாகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையரை அரசாங்கம் பாதுகாக்கிறது என்றும், உச்ச நீதிமன்றம் அதற்கு ஆதரவாக நிற்கிறது என்றும் அரசியல் ரீதியான வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இந்த விவகாரத்தின் முழுப் பரிமாணத்தையும் புரிந்துகொள்ள இந்த வாதம் மட்டும் போதுமானதல்ல. SIR நடவடிக்கையில் மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்குப் பின்னால் உள்ள தர்க்கம் என்ன, அதன் மூலம் எத்தகைய நோக்கங்கள் நிறைவேற்றப்பட முயல்கின்றன, உச்ச நீதிமன்றம் தொடர்ந்து பின்பற்றிவரும் ‘தேர்ந்தெடுத்த நீதி’ அணுகுமுறை எத்தகையது என்பவற்றை விரிவாக ஆராய வேண்டியுள்ளது.
