நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

நவீன தென்கிழக்காசியாவில் இஸ்லாத்தை வடிவமைத்த சிற்பிகள்

Loading

தென்கிழக்காசியச் சூழலில் இஸ்லாமியச் சிந்தனையின் போக்குகளை ஆய்வுசெய்ய வேண்டுமென்ற கருத்துகள் பலமடையும் சூழலிலேயே பேராசிரியர் ஃகைருத்தீன் ஜுனைது தனது Shapers of Islam in Southeast Asia என்று நூலை வெளியிட்டுள்ளார். இவர் தென்கிழக்காசிய இஸ்லாமியச் சிந்தனை மரபு தொடர்பான ஆய்வுப்புல உரையாடல்களில் பிரதான விற்பன்னராகக் கருதப்படுபவர். அறிவுசார் வரலாற்றாசியர் (Intellectual Historian). சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகம், அமெரிக்க ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் பேராசிரியாகப் பணியாற்றியவர். தென்கிழக்காசியச் சூழலில் இஸ்லாம் பற்றிய விரிவான பல நூல்களை எழுதியுள்ளார்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

பச்சை மஞ்சள் சிகப்பு – நாவல் அறிமுகம்

Loading

அரசுத்துறைகளில் சோம்பேறித்தனம், சலிப்பு, ஊழல், பொறுப்பின்மை என்பன பொதுவாகக் காணக்கூடியவைகளென்றாலும் அதைத் தாண்டி உள்ளூர்/பன்னாட்டு சதி, கொலை, பிண ஆதாயம் என தொடர்வண்டித்துறைக்குள் நிலவும் அச்சுறுத்தும் இருள்களை நாவலுக்குள் காணும்போது தொடர்வண்டித்துறையென்பது நாம் வெளியிலிருந்து பார்த்து உருவகித்துக் கொண்டாடும் ஒன்றல்ல என்பது அதிர்ச்சியூட்டுகிறது. விதி விலக்கான நிகழ்வுகளை வைத்து மொத்தப் போர்வையைப் போர்த்தவியலாதுதான். என்றாலும் நினைவேக்கத்தின் சமகாலத் தாம்பாளத்தில் விள்ளல்கள் விழாமலில்லை.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

இரையாகும் இறையாண்மை – நூல் மதிப்புரை

Loading

இந்தியாவை அதன் அணிசேரா கொள்கையைக் கைவிட்டு, முற்றிலும் அமெரிக்கச் சார்புகொண்ட நாடாக மாற்றும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை விளக்கமாக எடுத்துரைக்கும் இந்நூலை பல பதிப்பகங்களும் வெளியிட மறுத்துவிட்ட நிலையில், துணிந்து அதனைப் பதிப்பித்துள்ள சீர்மை பதிப்பகம் பாராட்டிற்கு உரியது. அந்நூலைப் பற்றிய சுருக்கமான மதிப்புரை இது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

தமிழின் முதல் நாவல் கீழக்கரையிலிருந்து…!

Loading

தமிழின் முதல் நாவலான தாமிரப்பட்டணம் குறித்த ஆய்வு

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

நவீன கருத்தியல்கள் மீதான விமர்சனம்
சூறத்துல் ஃபாத்திஹாவுக்கு ஒரு புதிய விளக்கவுரை

Loading

The Straight Path: How Surah al-Fatiha Addresses Modern Ideologies நூலில் நாஸிர் ஃகான், சூறத்துல் ஃபாத்திஹாவை பத்து பகுதிகளாகப் பிரித்து சமகாலத்தி்ல் குறிப்பிடத் தக்களவில் தாக்கம் செலுத்திவரும் கருத்தியல்களான நாத்திகம் (Atheism), பொருள்முதல்வாதம் (Materialism), இயற்கைச் சமயவாதம் (Deism), மதச்சார்பின்மைவாதம் (Secularism), பலகடவுள் கொள்கை (Polytheism), இயற்கைவாதம் (Naturalism), சார்பியல்வாதம் (Relativism), முற்போக்குவாதம் (Progressivism), தாராளவாதம் (Liberalism), பின்நவீனத்துவம் (Postmodernism) போன்றவற்றை விமர்சன ரீதியாகவும் ஆழமாகவும் பகுப்பாய்ந்து எழுதி்யுள்ளார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

தாமிரப்பட்டணம்: தமிழ் எழுத்தில் எழுதப்படாத முதல் தமிழ் நாவல்

Loading

புகழ் வாய்ந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் பாரசீக எழுத்தாளரான பாக்கிர் யஸீது இப்னு மாலிக் அத்தாயி என்பவர் அறபி மொழியில் எழுதிய நெடுங்கவிதையொன்றைத் தழுவி ‘மதீனத்துந் நுஹாஸ்’ என்னும் பெயர் கொண்ட நாவலை அர்வி அல்லது அறபுத் தமிழில் எழுதினார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் நூல் அறிமுகம் மொழிபெயர்ப்பு 

பூனைகளில்லா உலகம் – வாசிப்பனுபவம்

Loading

பூனைகளில்லா உலகம் நாவல் எதார்த்தமும், மாயவுலகும் ஒன்றுகலந்தது. அதில் சாத்தான் ஒன்று தோன்றி உரையாடும்; பூனை ஒருசமயம் பேசும். ஊடுபாவான தத்துவ குணம் கொண்டது நாவலின் தொனி. மரணம்; மனிதக் கண்டுபிடிப்புகள்; வாழ்க்கையின் பொருள் ஆகியவை இதில் தத்துவ வினவுப் பொருட்களாக உள்ளன. அதன் மீது விசாரணையானது நிகழ்த்தப்படுகிறது. அதன் விளைபொருளாக — வாழ்க்கையின் அர்த்தங்களைப் புரிந்துகொண்ட எண்ணம் நமக்குத் தோன்றும்போது நாவல் நிறைவடைகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

தீண்டாமையை அழித்தொழித்த சையித் ஃபழ்ல் தங்ஙள்

Loading

மாப்பிளா போராட்டத்தை மதவெறி என இந்துத்வ நாஜிகள் சாயமடிக்கின்றனர். இடது சாரியினரோ  “விவசாயக்கூலிகளின் புரட்சி” என்பதாக மட்டிறுத்துகின்றனர். ஆனால், மாப்பிளா போராட்டத்தின் களமோ மானுட கரிசனத்தின்  ஆழமும் பரப்பும் கொண்டது. இந்துத்வ நாஜிகள் அவதூறு உரைப்பதைப் போல இப்போராட்டம் இந்து x முஸ்லிம் என்ற இருமைகளுக்கிடையிலான முரணாக நடந்திடவில்லை. இப்போராட்டங்கள் அவற்றின் இலக்கைப் போலவே, ஆதரவும் எதிர்ப்பும் கூடிய பல முனைகளைக் கொண்டவை என்பதை தனது உழைப்பினால் நிரூபித்திருக்கிறார் நூலாசிரியர் முஹம்மது அப்துல் சத்தார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

தஸவ்வுப்: இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம் – நூல் பார்வை

Loading

உண்மை ஸூஃபிகள் எங்கோ ஒரு மூலையில் ஓசையற்ற நதிபோல ஒழுகிக்கொண்டிருக்க, எதிர்மறைகளால் ஸூஃபியியம் பற்றிய புரிதல்களமோ அலங்கோலப்பட்டுக் கிடக்கிறது. இந்த அவலப் பார்வைகளிலிருந்தும் தெற்றுப் போக்குகளிலிருந்தும் ஸூஃபியியத்தை விடுவிக்கிறது இச்சிறு நூல்.

மேலும் படிக்க
கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்: ஒரு சமூகவியல் ஆய்வு – நூலறிமுகம்

Loading

மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் பற்றிய நினைவுகள் சில இஸ்லாமியர்களைத் தவிர்த்து அனேகமாக பொதுச் சமூக நினைவிலிருந்து முற்றிலும் நீங்கிவிட்டதாகவே தெரிகிறது. தமிழ்நாட்டில் வேங்கைவயல் போன்ற சாதிய வக்கிரங்கள் நிகழும் யுகத்தில், இந்தியாவில் இந்துத்துவம் இஸ்லாமிய மக்களை இரண்டாம் குடிகளாக மாற்றத் துடிக்கும் காலகட்டத்தில் மீண்டும் மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றத்தைக் குறித்துப் பேசுவதும் விவாதிப்பதும் அவசியமாகும்.

மேலும் படிக்க