நடந்திருப்பது பாசிச அரசின் மிக முக்கியமான தாக்குதலாகும்.
பாஜக அரசின் சிறுபான்மை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானப் போராட்டக் களத்தில் நின்று கொண்டிருந்த, அமைப்புப் பலம் பொருந்திய சக்தி ஒன்று அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பாசிச எதிர்ப்பு முகாம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில் வசித்து வந்த உலகப் புகழ்பெற்ற இஸ்லாமியப் பேரறிஞர் யூசுஃப் அல்-கர்ளாவி (96) மரணமடைந்ததாக அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
‘கசபத்’ காயல்பட்டினத் தமிழில் எழுதப்பட்ட அழகிய சுயசரிதை நாவல். காயல்பட்டினத் தமிழ் புதிதாக கேட்பவர்களுக்கு புதுமையாகவும் இனிமையாகவும் இருக்கும். அது இந்த நாவல் முழுக்க விரவிக் கிடக்கிறது. நாவலைப் படித்து முடிக்கும்போது நம் நாவும் அந்த வட்டார மொழியை உச்சரிக்கத் தவறாது.
நாவலாசிரியர் சாளை பஷீரின் ஊர் காயல்பட்டினம். அவரைச் சுற்றி நடந்த சுமார் நான்கு வருட நிகழ்வுகளை அற்புதமாக விவரித்திருக்கிறார் என்பதை விட காட்சிப்படுத்தி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
பிறரின் கதையைக் கேட்பது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு நிறைய பொறுமை வேண்டும். கொட்டாவி விடாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்! ஆனால், இந்த அலுப்புகள் எதுவும் இன்றி நாவலை முடிக்கும்வரை சலிப்புத் தட்டாமல் நகர்த்தியிருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஓய்வு பெற்றார். தனது பதவிக்காலத்தில் அரசியலமைப்பைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி 29க்கும் மேற்பட்ட உரைகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். எனினும், நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 6 வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும், நடுவர் மன்ற மறுஆய்வு தேவைப்படும் 53 வழக்குகள் முன்பிருந்ததைப் போலவே கிடப்பில் போடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
உலகிலேயே சட்ட விதிகளை மீறி சிறுபான்மையினர் வீடுகளைத் தகர்ப்பது இரண்டே நாடுகள்தான்; ஒன்று இஸ்ரேல், மற்றொன்று இந்தியா என்கிறார்கள். ஒரு நாடாக இந்தியாவுக்கு இது எவ்வளவு பெரிய அவமானம்? இந்தியர்கள் வெட்கித் தலைகுனியத்தான் வேண்டும்.
இந்து ராஷ்டிர கனவில் மிதக்கும் சங் பரிவாரம் முஸ்லிம்களை அதன் முதன்மை இலக்காக்கி தன் பாசிச செயல்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாட்டில் மத ரீதியாக பதற்ற நிலை ஏற்பட்டால் அதை அருவடை செய்து பெரும் அரசியல் லாபமடைவது பாஜகதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போது பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு எனப் பல பிரச்னைகள் இந்தியாவை சூழ்ந்துள்ளன. இந்திய மக்கள் வெறுப்பரசியலுக்கு இனியும் இடமளித்தால் இன்னொரு இலங்கையாக இந்தியா மாறக்கூடும் என்று எச்சரிக்கிறோம்.
ஹிஜாப் உங்கள் சுயதேர்வா அல்லது வீட்டிலுள்ளர்களின் அழுத்தத்தால் கடைப்பிடிக்கப்படுவதா?
இது எங்கள் மீது திணிக்கப்பட்டிருப்பதாக முஸ்லிமல்லாதோர் பலர் நினைக்கிறார்கள். அந்த அடிப்படையிலிருந்துதான் இந்தக் கேள்வி வருகிறது. நாங்கள் மூளை சலவை செய்யப்பட்டிருப்பதாகக்கூட ஒருசிலர் வெறுப்பைக் கக்குகிறார்கள். எங்களுக்கு சுயசிந்தனை இல்லை என்பதுபோல் அவர்கள் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். ஒருவகையில் இதுவெல்லாம் முஸ்லிம் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை.
சுயதேர்வு பற்றி ஒன்றைச் சொல்லியாக வேண்டும். ஒருவரின் சுயதேர்வு 100 சதவீதம் எந்தப் புற அழுத்தமும் இல்லாமல் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்ல முடியுமா? நம் சமூகத்தில் பெண்கள் முடியை நீளமாக விடுவதும், ஆண்கள் தன் முடியைக் கத்தரித்துக்கொள்வதும் அவரவர் விருப்பங்களின்படிதான் நடக்கிறதா? அவ்வாறு நடந்தால் மக்கள் எல்லோரும் எப்படி ஒன்றுபோல் இருக்க முடிகிறது?
அதனால் ஹிஜாபை திணிப்பு, அடிமைத்தனம் என்றெல்லாம் வெளியிலுள்ளோர் சொல்லக் கூடாது. அது எங்களை அவமதிக்கும் செயல். அப்படிச் சொல்வோரை சட்டப்படி தண்டிக்க வழிவகைகள் தேவை என்று நினைக்கிறேன். ஹிஜாப் குறித்து கருத்துச் சொல்லும் உரிமை மற்றவர்களைவிட எங்களுக்குத்தான் இருக்கிறது.
எழுத்தாளர் சாளை பஷீர் அவர்களின் முதல் நாவலான ‘கசபத்’தை சமீபத்தில் படித்தேன். தென் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்ட கடற்கரை ஊரான காயல்பட்டினம் தான் கதையின் நிகழ்விடம். காயல்பட்டினத்தை மையமாகக் கொண்டு அதன் வட்டார மொழியில் பண்பாட்டுப் பின்னணியில் வரும் முதல் நாவல் என நினைக்கிறேன்.
காயல்பட்டினம் மிகப் பழைமையான வரலாற்று எச்சங்களையும், பல ஸூஃபி அறிஞர்களின் தடங்களுடன் தமிழ்ச் செறிவும் கொண்ட இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் ஓர் ஊர். இந்நாவலின் ஆசிரியர் சாளை பஷீரின் சொந்த ஊரும்கூட. தான் கண்ட வாழ்வியல் முறைகளை, எளிய மனிதர்களை சிலாகித்த இடங்களை மிகையில்லாமல் பதிவு செய்திருக்கிறார் சாளை பஷீர். காயல்பட்டின ஊரார், குறிப்பாக இஸ்லாமியர்கள் என்றாலே சிவப்புத் தோல் உடையவர்கள், பெரும் செல்வந்தர்கள் எனப் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை உடைத்தெறிந்து இருக்கிறார்.
FIR படத்தைத் தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் மற்றுமொரு நச்சுக் குப்பைதான் இந்த Beast திரைப்படம். இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து வெளியிடும் உதயநிதி ஸ்டாலினின் கொள்கைப் பற்று மயக்கமடைய வைக்கிறது.
நாடே இந்துத் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும்போது, அதிலும் வடக்கில் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டும்கூட இப்படியொரு படம் எடுக்க முடிகிறதென்றால் நெல்சன் போன்றவர்கள் யார் என்று அடையாளம் கண்டு கொள்ள வேண்டிய தருணம் இது.
உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலையொட்டி அங்கே செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் இனியன், பியர்சன் ஆகியோர் தம் அனுபவங்களை மெய்ப்பொருள் யூடியூப் சேனலுக்குப் பகிர்ந்துள்ளார்கள்.
* உ.பி. தேர்தல் பிரச்சாரத்தை ஒவ்வொரு கட்சியும் எப்படி முன்னெடுத்தது?
* எதிர்க்கட்சிகளின் பலவீனங்கள் என்னென்ன?
* ஆதித்யநாத் அரசின் தோல்வி ஏன் தேர்தலில் எதிரொலிக்கவில்லை?
* பாஜகவின் சாதி அரசியல் பற்றி..
* உ.பி. முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்?
– உள்ளிட்ட பல விஷயங்களைத் தங்களின் ஒன்றரை மாத கள அனுபவங்களின் வழியாக அலசியிருக்கிறார்கள்.
சாளை பஷீர் தன் வரலாற்றிலிருந்தே காயல்பட்டினத்தின் கடந்த கால வரலாற்றை, தன்னைச் சூழ உள்ள மனிதர்களை, தன் சுயத்தின் நீட்சியை முகிழ்க்கச் செய்கிறார். அவரது கதை மாந்தர்களில் வெள்ளந்தி மனிதர்கள், எளியவர்கள், புத்தகப் பிரியர்கள், அடுத்தவரைச் சுரண்டி வாழ்பவர்கள், அடுத்தவர்களுக்கு உதவுபவர்கள், சம்பாத்தியமே வாழ்க்கை என அலைபவர்கள் எனப் பல்வேறு மனிதர்கள் வந்து போகிறார்கள். அவர் பாத்திர வடிவமைப்பை மிகக் கச்சிதமாக அமைத்திருப்பது அவரின் அனுபவத்தின் துணை கொண்டே. நாவலில் வரும் முதல் கதாபாத்திரமான தாவூதப்பா முதல் இறுதிக் கதாபாத்திரமான குட்டை ஷாஃபி வரை எந்தக் கதாபாத்திரமும் புனைவில் உருவாக்கப்படவில்லை என்பது மிகத் தெளிவு. மிகவும் தத்ரூபமாக அவர்களை எங்கள் மனக்கண் முன்பு நிறுத்துகிறார் சாளை பஷீர்.