கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அருவமாக்கப்படும் முஸ்லிம்கள்

கடந்த காலத்தில் இந்திய முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரசியல் களத்தில் செய்த பெரிய தவறு முஸ்லிம் சமூகத்தை ஒரு மதம்சார்ந்த மக்கள் தொகுதியாக மட்டுமே முன்வைத்ததும், மதம் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே அரசியலாக்கியதும்தான். அரசியல் கோரிக்கைகளை முஸ்லிம் கட்சிகள் முதன்மைப்படுத்தவில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்

இன்று சூஃபியிசப் பிரதிநிதிகளாகச் சொல்லிக் கொள்ளும் சிலரையும், ஷியா முஸ்லிம்களில் ஒரு பகுதியினரையும் எதேச்சதிகார அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை விளக்குவதை சூஃபியிசம் அல்லது ஷியா இஸ்லாம் ஆகியவற்றை எதிர்ப்பதாக யாரும் எண்ண வேண்டியதில்லை. சூஃபி அல்லது ஷியா இஸ்லாமியப் பிரிவுகளை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ, இல்லை ஆராய்வதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. இன்றைய அரசியல் சூழலில் அவை எவ்வாறு முஸ்லிம் எதிர்ப்பாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன எனச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மிடில் கிளாஸ்: பலியாகப்போகும் சாத்தானின் அழிவுகால சேனைகள் – வில்லவன்

இந்த நடுத்தர வர்க்கம்தான் இதுவரை நடந்த தாராளமய சுரண்டலுக்கு விளம்பர தூதுவர்களாக இருந்தார்கள். அவர்கள்தான் இதுவரை நடந்த சூழல் சீர்கேடுகளுக்கும், கிராமப் பொருளாதார வீழ்ச்சிக்கும் மவுன சாட்சிகளாக இருந்தார்கள். வறிய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களான மானிய வெட்டு, இலவச கல்வி மருத்துவ வசதிகள் ஒழிப்பு, தொழிலாளர் நல சட்டங்கள் ஒழிப்பு போன்றவைகளுக்கு இவர்களே போர்வீரர்களாக இருந்தார்கள். ஆனால் இனி இந்த வீரர்களுக்கான தேவை இல்லை, அவர்களுக்கு வீசப்படும் எலும்புத்துண்டுகள் இனி கார்ப்பரேட்டுக்களுக்கு அனாவசியம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மோடி அரசின் ‘செல்லாது’ அறிவிப்பின் அரசியல் – ஜெயரஞ்சன்

தமிழ் கதாநாயகன் துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டை பிடிப்பதை ரசிக்கும் நமது ரசிகர்கள், மோடியின் இந்த சாகசத்தில் மயங்குவது இயற்கைதானே? ஆக, பெருகி வரும் சமமின்மையைக் களைய எதையுமே செய்யத் தயாராக இல்லாத மோடி அரசு, இதன் காரணமாகத் தோன்றும் அதிருப்தியை திசை திருப்பவே பணக்காரர்களின் பணத்தை ஒரே அறிவிப்பால் அழித்தது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமே இந்த அறிவிப்பின் நோக்கம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கருப்புப் பண ஒழிப்பு: மக்கள் விரோத மோடி அரசின் முட்டாள் சாகசம் – பிரபாத் பட்நாயக்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தின் முன்னாள் பொருளாதாரத் துறை பேராசிரியரும் பன்னூலாசிரியருமான திரு. பிரபாத் பட்நாயக் ‘தி சிட்டிசன்’ இணைய இதழுக்காக எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பை கீழே பகிர்கிறோம். தமிழாக்கம்: ‘ஃபிரண்ட்லைன்’ பத்திரிக்கையின் ஆசிரியர், விஜயசங்கர் ராமச்சந்திரன்.

மேலும் படிக்க