காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

புத்த, சமண கோவில்கள் இந்து ஆலயங்களாக மாற்றப்படவில்லையா?

கஜினி முகம்மது பதினேழு முறை சோமநாதபுரம் கோவிலை இடித்து நொறுக்கினார் என்று உங்களுக்குப் பாடநூற்கள் சொல்லியுள்ளன இல்லையா? பண்டைய இந்தியாவில் கோவில்கள் என்பன சாமி கும்பிடுகிற இடங்கள் மட்டுமல்ல. மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக் களஞ்சியங்களாகவும் அவை இருந்தன. இல்லாவிட்டால் தஞ்சைப் பெரிய கோவிலைச் சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்? பண்டைய மன்னர்களின் போர்கள் என்பன பெரும்பாலும் கொள்ளையடிப்பதற்காக மேற்கொள்ளப் பட்டவைதாம். இந்த அடிப்படையில்தான் கஜினி முகம்மது கொள்ளையிட்டதும். கோவிலுக்குள் ஒளிந்து கொண்ட எதிரி மன்னனைக் கொல்லவும், ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தைக் கொள்ளையிடவும், எதிரியின் பண்பாட்டு ஆளுமையை அழிக்கவுமே கோவில்கள் மீது படையெடுக்கப்பட்டன. எந்த முஸ்லிம் மன்னனும் தன்னுடைய எல்லைக்குள் இருந்த இந்துக் கோவில்களையோ, தனது பாதுகாப்பிலிருந்த இந்துக் கோவில்களையோ இடித்ததில்லை. அவுரங்கசிப் ஆட்சிக் காலத்திலும் அப்படித்தான். அவருக்கு எதிராகச் சதி செய்தவர்களின் கோட்டைகளும் கோவில்களும் இடிக்கப்பட்டன.…

மேலும் படிக்க
law student abdul raheem issue கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அப்துல் ரஹீம் விவகாரமும் காவல்துறை சீர்திருத்தமும் – அ.மார்க்ஸ்

1. 2014 தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி காவல்துறைச் சீர்திருத்தம் குறித்துப் பேசியிருந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. வெற்றிபெற்றிருந்தாலும் அது அந்த திசையில் நகர்ந்திருக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

2. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிவேண்டி உறுதியுடன் நின்று போராடினாலும் உடனடியாக நீதி கிடைப்பது கடினம். தொடக்கத்தில் அவர்கள் உறுதியாக நின்றாலும் கடைசிவரை அதைத் தொடரமுடிவதில்லை. நம் குற்ற நடைமுறை தொடர்பான வழமைகளும் இப்படியான அத்துமீறல்கள் பிரச்சினையில் மக்களுக்கு எதிராகவே உள்ளன.

3. நீதிபதி அனந்த நாராயண் முல்லா அவர்களின் ஒரு முக்கியத் தீர்ப்பு இங்கே குறிப்பிடத்தக்கது. “எந்த ஒரு கிரிமினல் கும்பலைக் காட்டிலும் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட காவல்துறையே பெரிய கிரிமினல் கும்பல்” – என்கிற புகழ்பெற்ற கருத்தை முன்வைத்த நீதியரசர் முல்லா அவர்களின் இவ் வாசகங்களை நான் அடிக்கடி மேற்கோள் காட்டுவதுண்டு. இப்படியான அவரது தீர்ப்பு நேர்மையான போலிஸ்காரர்களின் உற்சாகத்தைக் கெடுத்துவிடும் எனக் கூறி அதைத் தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும் எனக் காவல்துறை முறையீடு செய்தபோது, “ஒரு கூடை நாறிய மீன்களில் நல்ல மீனைத் தேடும் முட்டாள் நானல்ல” எனக் கூறி அவர் அந்த மனுவைத் தள்ளுபடி செய்யவும் செய்தார்.

மேலும் படிக்க
islamophobia in tamil nadu நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

மையநீரோட்டத்தில் இஸ்லாமோ ஃபோபியா – அ. மார்க்ஸ் அணிந்துரை

இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் முஸ்லிம்களுக்கு எதிரான இன்றைய சூழலை விளக்கும் முக்கியமான கட்டுரைகளையும் நேர்காணல்களையும் உள்ளடக்கியுள்ளது ரிஸ்வானின் இந்த நூல். சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின் உருவான ஒருதுருவ உலகில் உருவாகியிருக்கும் இஸ்லாமிய வெறுப்பு குறித்த கருத்தாழமிக்க ஆக்கங்களுடன் வெளிவரும் இத்தொகுப்பு, கடந்த சில ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் தொடர்பான ஓர் முக்கியமான ஆவணம் என்றும் சொல்லலாம். ஜனநாயகத்திலும் மதச்சார்பின்மையிலும் அக்கறையுள்ள நாம் இத்தகைய நூல்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கு முன்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

உலக குடியாட்சி தினம்: ஜனநாயகத்தில் சிறுபான்மையினர் – அ.மார்க்ஸ்

பெரும்பான்மையின் ஆட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கையில் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்படுவது, கருத்தொருமிப்பின் அடிப்படையில் உருவான அரசியல் சட்டத்தின் ஆளுகை (Constitutional Governance) முதலியவற்றை நாம் ஜனநாயகத்தின் முக்கியக் கூறுகள் என்கிறோம். இவை ஒவ்வொன்றுமே ஆழமான பல தத்துவார்த்தப் பிரச்னைகளை உள்ளடக்கியுள்ளன.

”பெரும்பான்மை” எனும்போது அதன் மறுதலையாக ”சிறுபான்மை” ஒன்று இருந்தாக வேண்டும். ஜனநாயகத்தில் அந்தச் சிறுபான்மையின் பங்கு என்ன? பெரும்பான்மையின் ஆட்சி என்கிறபோது ”பெரும்பான்மை எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வது” (Majority Takes All) என்ற பொருள் வந்துவிடுகிறது. அப்படி ஆகும்போது அது ஜனநாயகம் என்பதாகவன்றி ஜெஃபர்சன் சொல்வதுபோல ”கும்பலாட்சி” (Mob Rule) ஆகிவிடுகிறது. பெரும்பான்மையின் ஆட்சி என்றால் 51 பேர் 49 பேர்களை ஒடுக்குவதுதானே என்றார் அவர். ஆக, ஜனநாயகம் என்பது வெறும் பெரும்பான்மையின் ஆட்சி மட்டுமல்ல. சிறுபான்மையினரும் சேர்ந்ததுதான் ஜனநாயகம். சிறுபான்மையினருக்கு முழுச் சுதந்திரமும் அவர்களின் கருத்துகளைப் பேசுவதற்கும், பரப்புவதற்கும், அதைப் பெரும்பான்மையாக ஆக்குவதற்குமான முழு வாய்ப்பும் அளிக்கப்படுவதுதான் ஜனநாயகம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழகத்தில் முஸ்லிம் இடஒதுக்கீடு: தேவைகள், சிக்கல்கள், தீர்வுகள் – அ.மார்க்ஸ்

முஸ்லிம்களின் பிரச்னைகள் இன்றும் பல தளங்களில் உள்ளன. அரசு நலத்திட்டங்களின் பங்கு, கடன் வசதி பெறுதல், தனியார் துறைகளில் ஒதுக்கீடு, மதரசாக் கல்விக்கு உரிய ஏற்பு, வக்ஃப் சொத்துகளை மீட்டு முஸ்லிம்களுக்குப் பயனுடையதாக ஆக்குதல், தொகுதிச் சீரமைப்பு, முனிசிபாலிடி மற்றும் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றில் இடஒதுக்கீடு என எத்தனையோ விவகாரங்கள் இருக்கின்றன. 3.5% இடஒதுக்கீடு ஆணை பெற்றதோடு முஸ்லிம் இயக்கங்களின் பணி ஓய்ந்துவிடவில்லை என்பதையும், சிறுபான்மை மக்களின் உரிமை கோரலை வெறும் இடஒதுக்கீடு என்பதோடு நிறுத்திக்கொண்டால் அதில் பெரியளவுக்குப் பயனிருக்காது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நேற்று அயோத்தி, இன்று காசி: ஞான்வாபி மசூதியும் விஸ்வநாதர் ஆலயமும் – அ.மார்க்ஸ்

நரசிம்மராவ் ஆட்சியின்போது 1991ல், “வணக்கத்தலங்களைப் பொருத்தமட்டில், 1947 ஆகஸ்ட் 15லிருந்த நிலையில் எந்த மாற்றமும் கூடாது” எனச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதாவது, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இந்தியா முழுவதும் உள்ள வணக்கத்தலங்கள் யார் வசம் இருந்தனவோ அதில் எந்த மாற்றங்களும் இனி செய்ய முடியாது என்பது இதன் உள்ளடக்கம். அதற்கு முன்பாகப் பல ஆண்டுகளாக பாபர் மசூதிப் பிரச்னை இருந்ததால் அதற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆக, இனி யாரும் எந்த ஒரு தரப்பின் ஆலயத்தையும், இது முன்னதாக எங்களிடம் இருந்தது; இதை இப்போது வைத்துள்ளவர்கள் கைப்பற்றிவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லி பிரச்னை செய்ய இடமில்லை என்பதை அந்தச் சட்டம் உறுதிசெய்தது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சுதந்திரம் அடைந்த 72 ஆண்டுகளுக்குப் பின் இந்திய முஸ்லிம்களின் நிலை

இன்றைய தேர்தல் அரசியல் என்பதே முஸ்லிம்களை ‘நாம்-அல்லாதவர்களாக’ மற்றமைப் படுத்துவதுதான். உன் அடையாளத்திற்கு ஒரு அச்சுறுத்தல் என்கிற ரீதியில், நீ முஸ்லிம் வெறுப்புப் பேச்சை அவிழ்ப்பதன் ஊடாக நீ உன்னவர்களாக வரையறுப்பவர்களை ஒருங்குதிரட்டிக்கொள்ள வேண்டும். முஸ்லிம்களை மற்றவர்களாக்குவதுதான் இன்றைய தேர்தல் அரசியல்!

தாங்கள் (முஸ்லிம் ஆட்சி முதலிய) வரலாற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற அச்சம் இந்துக்களுக்கு உண்டு. உலகளாவிய கிலாஃபத் இயக்கம் முதலியன ஆர்எஸ்எஸ் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தன. இப்படியான அணிதிரட்டலில் பலனடைகிறோம் என்றால், அதை அவர்களும் செய்வார்கள்தானே. செய்கிறார்கள். எல்லா அம்சங்களிலும் (பாபர் மசூதி தொடங்கி) அது நடக்கிறது. ஆங்காங்கு வன்முறைகள். கலவரங்கள் இன்னொரு பக்கம். எல்லாவற்றையும் தங்களின் ‘தேர்தல் போர்த் தந்திரம்’ என்பதாக முன்வைத்து அவர்கள் மேலே மேலே செல்கின்றனர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், காந்தி: சில குறிப்புகள்

ஒரு முறை கே.என்.பணிக்கர் விவேகாநந்தரை தாராளவாதி எனவும், அவரை ஆர்.எஸ்.எஸ் சுவீகரிப்பது அபத்தம் எனவும் ஆங்கில இந்து நாளிதழில் எழுதினார் (April 10, 2013, Vivekananda’s Legacy of Universalism). அதற்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்து எழுதப்பட்ட பதிலில், “விவேகாநந்தரால் உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனிலிருந்து வெளி வந்த ஒருவர்தான் ஆர்.எஸ்.எஸ்-ன் புகழ் பெற்ற ’சர் சங் சலக்’ (தலைவர்) ஆக இருந்தவர் (கோல்வால்கரைத்தான் அவர்கள் குறிக்கின்றனர்). அந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பையா விவேகநந்தரின் 150வது பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது என்கிறாய்?” என்று கூறி விவேகாநந்தரின் உரைகளிலிருந்து பல்வேறு மேற்கோள்களைக் காட்டியது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்

தமிழர்களின் பெருமிதம் எனச் சொல்லி இவர்கள் கொண்டாடுவது எல்லாம் காலங்காலமாகச் சாதிமுறையையும் பார்ப்பனியத்தையும் முன்னிறுத்திய பழங்கால மன்னர்களைத்தான். இங்கு கொடுமையான நிலவுடைமை முறைகள், சமஸ்கிருதக் கல்வி, தேவதாசி முறை ஆகியவற்றையெல்லாம் புகுத்திய ராஜராஜ சோழன்தான் இவர்களின் திரு உரு (icon). கொடும் ஏற்றத் தாழ்வுகளும், சாதிமுறையும், தீண்டாமையும் தலைவிரித்தாடிய சோழர் காலம் அவர்களைப் பொருத்தமட்டில் பொற்காலம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஆர்.எஸ்.எஸ் தொடங்கும் இராணுவப் பள்ளிகள்

ஆர்.எஸ்.எஸ் ஒரு இராணுவப் பள்ளியைத் தொடங்க உள்ளதாம். உத்தர பிரதேசத்தில் புலந்தர் சாகர் மாவட்டத்தில் அது அமையுமாம். முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராஜேந்திரசிங்கின் நினைவாக ‘ராஜு பையா சைனில் வித்யா மந்திர்’ என்னும் பெயரில் அடுத்த ஆண்டு முதல் அப்பள்ளி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க