கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மசோதாக்களை எதிர்த்து வாக்களிக்கும் துணிச்சல் திமுகவுக்கு இருக்கிறதா? – திருமுருகன் காந்தி

வாக்களிப்பது என்பது ஆவணபூர்வமாக அதைப் பதிவு செய்வதாகும். ஆனால், அந்தப் பதிவை திமுக செய்யவில்லை. பாஜக-வுக்கு அது முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் வரலாற்றில் பதிவாகும். அதையே நாங்களும் குற்றம்சாட்டுகிறோம். அடுத்து UAPA மசோதா வரப்போகிறது. என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

திராவிட அரசியல்: வரலாற்றுத் தடங்கள் – நிகழ்ச்சித் தொகுப்புரை

நாடெங்கும் வளர்ந்துவரும் இந்துத்துவப் பேயைத் தடுக்கும் வழி தெரியாமல் மற்ற மாநிலங்களெல்லாம் திகைத்து நிற்க, இந்துத்துவத்தையும் அதன் அரசியல் கட்சியான பாஜகவையும் கேலிக்குரியவையாக ஆக்கி விரட்டியடிக்கும் ஒரு பொது மனப்பான்மை கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு, இங்கு செல்வாக்குடன் திகழும் ‘திராவிட / தமிழ்க் கருத்தியலே’ முக்கியக் காரணம் என்ற கூற்றுடன் வெகுசிலரே முரண்படுவர். அக்கருத்தியலின் தொடக்கத்தை அறிவிக்கும் வகையில் 1916ல் நீதிக்கட்சி தொடங்கப்பட்டு, ‘பார்ப்பனர் அல்லாதோர் அறிக்கை’ (non-Brahmin Manifesto) வெளியிடப்பட்டு நூறாண்டுகள் கடந்த நிலையில்; திராவிடக் கருத்தியலை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட திமுக 1967ல் முதன்முறையாக தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றி ஐம்பதாண்டுகள் கடந்த நிலையில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கு பல வகையிலும் முக்கியமானது, பயன் மிகுந்தது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

திராவிட சாஹிப்களும் பிராமண மௌலானாக்களும்

இந்தியா முழுக்கவுள்ள கிறித்தவர் மற்றும் முஸ்லிமல்லாத எல்லாச் சமூகங்களையும் இந்துக்களாகக் கற்பித்து முஸ்லிம்களை எதிர்க்கச்சொன்னது இந்து தேசியவாதம். இந்துக்களையும் முஸ்லிம்களையும் இருவேறு சமூகங்களாகப் பிரித்து இரு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது மதச்சார்பற்ற தேசியம். ஆனால் திராவிட இயக்கமோ பார்ப்பன-பனியாக்களை விலக்கிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மொழி மற்றும் மதச்சிறுபான்மையினரின் ஐக்கியத்தை வலியுறுத்தியது. இங்கு முஸ்லிம்கள் பிற சமூகங்கள் போலவே தங்களது அடையாளத்தை முன்னிறுத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாய்ப்பை பெற்றார்கள். அவர்களது கோரிக்கை தேச விரோதம், பிரிவினைவாதம் என்று குற்றப்படுத்தப்படாத நிலை ஏற்பட்டது.

மேலும் படிக்க