Uncategorized கட்டுரைகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

மக்களவைத் தேர்தலும் தமிழ்நாட்டு முஸ்லிம்களும்

Loading

சமூக நீதியையும் சுயமரியாதை சிந்தனைகளையும் உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு இப்படியொரு நிலையா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அத்துடன் இப்போதுதான் இந்த நிலையா அல்லது இதற்கு முன்னரும் இதே நிலைதானா என்ற கேள்வியும் எழுகிறது.

மேலும் படிக்க
Uncategorized உரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சலஃபீ சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள்

Loading

சலஃபிகள் தங்களை முன்னோர்களின் நீட்சியாகக் கருதுகின்றனர். ‘சலஃப்’ என்ற சொல்லின் பொருளும் அதுதான். சலஃப் என்றால் முன்சென்ற தலைமுறை, நமக்கு முன் வாழ்ந்த தலைமுறை என்று பொருள் ஆகும். இதன் மூலம் அவர்கள் தங்களை முன் சென்ற தலைமுறையினரை — குறிப்பாக இறைத்தூதரின் (ஸல்) மரணத்தைத் தொடர்ந்து வாழ்ந்த தலைமுறையினரை — பின்பற்றுபவர்கள் எனக் கூறுகின்றனர். அவர்களின் கருத்துப்படி அதுதான் மிகச்சிறந்த முஸ்லிம் தலைமுறை ஆகும்.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடங்கள்

Loading

தேர்தல் முடிவுகள்குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்தால் அதனை அதன் இறுதி அரசியல் அத்தியாயமாகக் கொண்டாடுவதும், பா.ஜ.க. வெற்றிபெற்றால் அதனை அதன் நிரந்தர வெற்றியாக அங்கலாய்ப்பதும் எதிர் தரப்பில் இப்போதும் தொடர்கிறது. பா.ஜ.க.வின் வெற்றியை ஒட்டுமொத்த வட இந்தியாவும் இந்துத்துவத்தின் பக்கம் சாய்ந்து விட்டதைபோல் சித்தரிப்பதும் ஏற்புடையதல்ல. அப்படியென்றால் ஐந்து வருடங்களுக்கு முன் இதே மாநிலங்களில் காங்கிரஸ் எப்படி வெற்றி பெற்றது?

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மானுட வாழ்வின் சுழற்சி: சூறத்துல் ளுஹாவின் ஒளியில்

Loading

மனித வாழ்வு கவலைகளால் மட்டுமோ அல்லது மகிழ்ச்சியால் மட்டுமோ சூழ்ந்ததல்ல. மாறாக அது கவலையும் மகிழ்ச்சியும் மாறிமாறி இடம்பெறும் வாழ்வியல் சுழற்சி. எதுவும் இங்கு நிலைக்கப்போவதில்லை. உண்மையில் வாழ்க்கை ஒரு சோதனையே எனும் குர்ஆனியக் கண்ணோட்டத்தை அத்தியாயம் அல்ளுஹாவின் ஒளியில் விளக்குகிறது இக்கட்டுரை.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஃபலஸ்தீன்-இஸ்ரேல் தற்காலிகப் போர் நிறுத்தம்: விளைவுகள் என்ன?

Loading

இந்தத் தாக்குதல் யாருக்குச் சாதகமாக அமைந்தது என்பதைக் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கொண்டு கூற இது ஒன்றும் கிரிக்கெட் போட்டி அல்ல. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதில் இஸ்ரேல் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதே உண்மை.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிறை சீர்திருத்தங்களும் சில அபத்தங்களும்

Loading

வெறும் நெருக்கடியைக் குறைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரை சிறைவாசிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நிலை, அவர்களின் உரிமைகுறித்து கிஞ்சிற்றும் அக்கறை கொள்ளவில்லை.

மேலும் படிக்க
Uncategorized 

தசவ்வுஃப்பின் தோற்றமும் வளர்ச்சியும்

Loading

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் தோன்றி வளர்ந்த ஹதீஸ், தப்ஸீர், பிக்ஹ், இல்முல் கலாம் போல இஸ்லாத்தின் நிழலில் உருவாகியதே தசவ்வுஃப் கலை. அது பலராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. சிலர் தசவ்வுஃப் ஒரு இஸ்லாமியக் கலை என்பதையே ஏற்க மறுத்து, இஸ்லாமிய நாகரிக வளர்ச்சியில் கிரேக்க தத்துவம், பாரசிகப் பண்பாடு ஆகியவற்றின் தாக்கம் காரணமாகத் தோன்றி வளர்ச்சியடைந்த ஒரு கலையாக இதைக் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தசவ்வுஃப் தவறாகப் புரியப்படுவதற்கும், அறிமுகப்படுத்தப்படுவதற்கும் காரணமாக அமைந்த அம்சங்கள் பற்றி ஆராய்வது ஒரு நீண்ட விளக்கத்திற்கு நம்மை இட்டுச்செல்லும். சுருங்கக்கூறின், தசவ்வுஃப் அல்லது சூஃபி என்ற பதம் சிலபோது ‘Mysticism’ என்ற பதப் பிரயோகத்தோடு இணைத்துப் பேசப்படுதல், தசவ்வுஃபின் பெயரால் பிரபலப்படுத்தப்படும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணான கருத்துகள், சூஃபி தரீக்காக்களின் சில செயல்பாடுகள் போன்றவை தசவ்வுஃப் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கு…

மேலும் படிக்க