Uncategorized கட்டுரைகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

மக்களவைத் தேர்தலும் தமிழ்நாட்டு முஸ்லிம்களும்

Loading

சமூக நீதியையும் சுயமரியாதை சிந்தனைகளையும் உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு இப்படியொரு நிலையா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அத்துடன் இப்போதுதான் இந்த நிலையா அல்லது இதற்கு முன்னரும் இதே நிலைதானா என்ற கேள்வியும் எழுகிறது.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடங்கள்

Loading

தேர்தல் முடிவுகள்குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்தால் அதனை அதன் இறுதி அரசியல் அத்தியாயமாகக் கொண்டாடுவதும், பா.ஜ.க. வெற்றிபெற்றால் அதனை அதன் நிரந்தர வெற்றியாக அங்கலாய்ப்பதும் எதிர் தரப்பில் இப்போதும் தொடர்கிறது. பா.ஜ.க.வின் வெற்றியை ஒட்டுமொத்த வட இந்தியாவும் இந்துத்துவத்தின் பக்கம் சாய்ந்து விட்டதைபோல் சித்தரிப்பதும் ஏற்புடையதல்ல. அப்படியென்றால் ஐந்து வருடங்களுக்கு முன் இதே மாநிலங்களில் காங்கிரஸ் எப்படி வெற்றி பெற்றது?

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஃபலஸ்தீன்-இஸ்ரேல் தற்காலிகப் போர் நிறுத்தம்: விளைவுகள் என்ன?

Loading

இந்தத் தாக்குதல் யாருக்குச் சாதகமாக அமைந்தது என்பதைக் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கொண்டு கூற இது ஒன்றும் கிரிக்கெட் போட்டி அல்ல. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதில் இஸ்ரேல் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதே உண்மை.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிறை சீர்திருத்தங்களும் சில அபத்தங்களும்

Loading

வெறும் நெருக்கடியைக் குறைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரை சிறைவாசிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நிலை, அவர்களின் உரிமைகுறித்து கிஞ்சிற்றும் அக்கறை கொள்ளவில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

விழித்தெழுமா மக்கள் மனசாட்சி?

Loading

இந்நாட்டில் சிறுபான்மையினர் — குறிப்பாக முஸ்லிம்கள் — மீதான வன்முறையும் அவர்கள் கொல்லப்படுவதும் தினசரி செய்திகள். ஆம், அவை எவரும் கேட்டுவிட்டு கடந்துவிடும் செய்திகள், அவ்வளவுதான். இப்போது, இங்கு அரசு இயந்திரமும் அதில் கூட்டு சேர்ந்து கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டவனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியவனுக்கும் இடையில் மௌனமாக நாம் இருந்தோமெனில், அவனைத் தாக்கியது குச்சியோ துப்பாக்கியோ அல்ல; அது நாம்தான். ஏனென்றால், முதல் தாக்குதலிலேயே நாம் அதை தடுத்திருந்தால் இரண்டாவது தாக்குதல் நிகழ்ந்திருக்காது அல்லவா? இந்திய வரலாற்றில் மரங்களைக் காப்பதற்குத் தோன்றிய மக்கள் இயக்கமான சிப்கோ (Chipko) போல, முஸ்லிம்களைக் காப்பதற்கு தன்னெழுச்சியான ஒரு மக்கள் இயக்கம் தோற்றம் பெறுமா எனும் எதிர்பார்ப்பை முன்வைக்கிறது இக்கட்டுரை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஏன் இந்த கள்ள மௌனம்?

Loading

நாட்டில் கணிசமாக உள்ள ஒரு சமூக மக்களை ஒதுக்கிவிட்டு வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை இந்த தலைவர்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள். இருந்தும் முஸ்லிம்களிடம் கைகோர்க்கும் சிந்தனை அவர்களிடம் ஏன் இல்லை என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை எதிர்க்கும் சில கட்சிகளிடம் கூட ஒரு வித அனுதாபப் பார்வை மட்டுமே இருக்கிறது. ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் மீது அனுதாபம் கொள்வதையும் தாண்டி அவர்களுடன் இணைந்து பயணிப்பதே, அதைவிட அவசியமாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இ.ந்.தி.யா Vs. பா.ஜ.க.

Loading

தேர்தல் நெருங்கநெருங்க பா.ஜ.க. கொடுக்கும் நெருக்கடிகள் இன்னும் அதிகமாகும் என்பதை எதிர்க்கட்சிகளும் ஃபாசிசத்திற்கு எதிரான சித்தாந்தம் கொண்டவர்களும் உணர வேண்டும். மூன்று மாதங்களாக மணிப்பூர் பற்றியெரிந்தாலும் நாளை யார் வீட்டிற்கு அமலாக்கத்துறையை அனுப்பலாம் என்றுதான் ஒன்றிய ஆட்சியில் இருப்பவர்கள் யோசித்துக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. இனி வரும் நாள்களில் அமலாக்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ.வின் கொடுங்கரங்கள் இன்னும் அதிகமானோரை நோக்கி நீளலாம். அரசியல் கட்சிகளுக்கு அமலாக்கத்துறை, செயல்பாட்டாளர்களுக்கு என்.ஐ.ஏ., சிலருக்கு இரண்டும் என்ற மிரட்டல்-அரசியலை பா.ஜ.க. மேலும் உக்கிரப்படுத்தவே செய்யும்.

மேலும் படிக்க