உரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் அரசும் அரச எதிர்ப்பும்

[இமாம் முஹம்மது அல்ஆஸியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்து, தலைப்புகளைக் கொடுத்துள்ளோம். உரையாற்றிய நாள்: 13-01-2006, இடம்: வாஷிங்டன் டி.சி. YouTube Link: The politics of state and Islamic opposition; தமிழில்: ஜுந்துப்] அல்லாஹ் நமக்குப் பல செய்திகளை வழங்கியுள்ளான். இறைத்தூதருடைய (ஸல்) நடத்தைகளும் நம்மிடையே உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இவையனைத்தும் நூற்றாண்டுகாலத் தவறுகள் மற்றும் திரிபுகளின் பாதிப்புகளுக்கு ஆட்பட்டிருக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்படவில்லை. அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் நாம் தொடர்புகொள்ளும்போது, பிற விஷயங்கள் மற்றும் சக்திகளின் தலையீடு இருக்கும்பட்சத்தில் அவற்றின் தாக்கம் நம்மீது அதிகம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களோடு கொண்டுள்ள உறவில் நாம் உண்மையாக இருந்தால், இவ்வாறு ஏற்படும் தலையீடு அவ்வுறவை வலுப்படுத்துமே ஒழிய அதை சமரசம் செய்வதாகவோ, பேரம் பேசி சரி செய்வதாகவோ, தவறான காரணங்களையும் சாக்குப்போக்குகளையும் சொல்லி அதைத் திணறடிப்பதாகவோ இருக்காது. நம்…

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

பிறை பார்த்தல்: நபிமொழியை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

நபிமொழியின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு முடியுமான — இதனை விடப் பலமான — மற்றொரு சாதனம் காணப்படுமாயின், அச்சாதனம் எவ்விதத் தவறோ அனுமானமோ பொய்யோ இன்றி உரிய மாதம் தொடங்கிவிட்டதைக் காட்டக் கூடியதாகவும், கஷ்டமின்றிப் பெறக்கூடியதாகவும், முஸ்லிம் சமூகத்தின் சக்திக்குட்பட்டதாவும் காணப்படுமாயின், பழைய வழிமுறையைப் பிடிவாதமாக பற்றிப் பிடித்துக்கொண்டு நபிமொழியின் நோக்கத்தை ஏன் நாம் அசட்டை செய்ய வேண்டும்?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சையித் குதுப்: ஆளுமை உருவாக்கமும் குடும்பப் பின்னணியும்

மலேசியா சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழக உசூலுத்தீன் துறைப் பேராசிரியர் தமீம் உசாமா எழுதிய Sayyid Qutb: Between Reform and Revolution என்ற நூலின் தமிழாக்கம் சீர்மை வெளியீடாக இவ்வாண்டின் இறுதியில் வெளிவரும், இன்ஷா அல்லாஹ். தமிழாக்கம்: நூரிய்யா ஃபாத்திமா. நூலிலிருந்து ஒரு பகுதி கீழே…

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சிறையிலிருந்து… ஷர்ஜீல் இமாம்

மாணவச் செயற்பாட்டாளரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவருமான ஷர்ஜீல் இமாம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராகப் போராடியதற்காக ஜனவரி 2020ல் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். இன்றுடன் மூன்று வருடங்களை நிறைவுசெய்கிறார். திகார் சிறையிலிருக்கும் ஷர்ஜீல் இமாம் கடந்த செப்டம்பர் 10ம் தேதி எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு கீழே

மேலும் படிக்க
குறும்பதிவுகள் மொழிபெயர்ப்பு 

தீய இச்சையின் பிடியிலிருந்து விடுபட

மனம் ஏதேனும் ஒரு தீய பழக்கத்துக்கு அடிமையாகும்போது அது தன்னுடைய சுதந்திரத்தை இழக்கிறது. அந்த பழக்கத்தை இயல்பான ஒன்றாக, அது தன் வாழ்க்கையோடு இயைந்த ஒன்றாக மனம் எண்ண ஆரம்பிக்கிறது. இந்த இடத்திலிருந்துதான் சிக்கல் தொடங்குகிறது. அவன் அதற்கான நியாய வாதங்களை முன்வைக்கிறான். கோட்பாட்டளவில் அதனை நியாயப்படுத்தும் கருத்தியல்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கத் தொடங்குகிறான்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

டெல்லி இனஅழிப்பும் ஜெர்மனியின் கிறீஸ்டல்நாஹ்ட்டும்

2020ம் ஆண்டு பிப்ரவரி 23ம் நாள் டெல்லியில் இந்து தேசியவாதக் கும்பல்கள் முஸ்லிம்களின் வீடுகளையும் கடைகளையும் வணிகத்தலங்களையும் மசூதிகளையும் எரித்துக் கொள்ளையடித்தனர். தப்பித்து ஓட முடியாத முஸ்லிம்களைக் கொன்றனர். அல்லது உயிருடன் எரித்தனர். பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்களை காவல்துறையும் பாதுகாக்கவில்லை.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நவீன இஸ்லாமிய அறிவுஜீவிகளின் தடுமாற்றம்

நாம் உளுத்துப்போன அவற்றை அகற்றித் துப்புரவாக்க வேண்டும். அவற்றைத் தகர்த்து, கலைத்துப்போட்டு, அதன் சிதிலங்களை அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகே, நாம் முழு நம்பிக்கையுடன் நம்முடைய சொந்த நியமங்களில் ஊன்றிநின்று, நம்முடைய சன்மார்க்கத்தின் மேன்மையையும் மதிப்பச்சம்தரும் மகோன்னதத்தையும் உலகின் முன்பாக மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் காட்டமுடியும், இன்ஷா அல்லாஹ்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

காஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்

நாமொரு தேசிய அரசின் கீழ் வாழ்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், அவ்வரசு நம் பெயரால் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளை, அவை அறம் சார்ந்தவையா, அறம் பிறழ்ந்தவையா? அவற்றைக் கைக்கொண்டு வாழ்தல் தகுமா, தகாதா? என்று நாம் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

உண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்?

உண்மையிலேயே முற்றிலும் பாதகமான சூழலை எதிர்கொண்டு, பொதுப்போக்கிற்கு எதிர்த்திசையில் பயணித்து சத்தியத்தைத் தேடமுனைவது இதில் யார்?

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

பாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்!

பத்தாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில், இன்றும் பாட்லா வீதிகளில் படிந்துகிடக்கும் சாஜித், ஆதிஃப் அமீன், காவல்துறை கண்காணிப்பாளர் எம்.சி. ஷர்மா ஆகியோரின் குருதிக்கறை உண்மை மற்றும் நீதிக்கான கேள்விகளை எழுப்பிய வண்ணமிருக்கிறது. நாட்டின் தலைநகரில் வைத்து முஸ்லிம் உடல்கள் மீது நிகழ்த்தப்பட்ட இவ்வன்முறை வெறியாட்டத்தை நினைவூட்டும் நாளாகவே செப்டம்பர் 19 இந்திய அரசின் வரலாற்றில் பதிவாகும்.

மேலும் படிக்க