கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்து முகங்கள், முஸ்லிம் முகமூடி

Loading

டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நாசிக் வழக்கின் பின்னணியில், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் திட்டமிட்ட குற்றமயமாக்கலின் சமூக, பொருளாதார, அரசியல் பாதிப்புகளை இக்கட்டுரை ஆராய்கிறது. குறிப்பாக, முஸ்லிம் அல்லாதவர்கள் செய்யும் குற்றங்களை முஸ்லிம் அடையாளங்களின் கீழ் மறைத்து, ஊடகங்களும் அதிகார அமைப்புகளும் எவ்வாறு ‘முஸ்லிம் குற்றவாளி’ என்ற பிம்பத்தைக் கட்டமைக்கின்றன என்பதை இது விவரிக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தேர்தல் கணக்குகளுக்கு அப்பால் பாஜக-எதிர்ப்பு அரசியலின் எல்லைகள்

Loading

மேற்கு வங்கம், அஸ்ஸாம் முதலான மாநிலங்களின் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் விவாதங்களில் கவனிக்கத்தக்க விசயம், பாஜக பெற்ற வெற்றியின் அளவு மட்டுமல்ல; அந்த வெற்றியை விளக்குவதற்காக முன்வைக்கப்பட்ட அரசியல் பகுப்பாய்வுகளின் பலவீனமும்தான். மதச்சார்பற்ற மற்றும் மாநில கட்சிகளின் பெரும்பாலான எதிர்வினைகள், வாக்குரிமை பறிப்பு குறித்த குற்றச்சாட்டுகளையே மையமாகக் கொண்டிருந்தன.
ஆனால், தற்போதைய அரசியல் நெருக்கடி என்பது வெறும் வாக்குரிமை பறிப்பு சார்ந்தது மட்டுமல்ல. ‘இந்தச் சூழல், எதிர்க்கட்சி அரசியலின் தற்போதைய நிலையைப் பற்றி எதை வெளிப்படுத்துகிறது?’ என்பது அதைவிட முக்கியமான கேள்வியாகும். 
‘ஜனநாயகம் எவ்வாறு பலவீனப்படுத்தப்பட்டது?’ என்பதை விட,‘இந்துத்துவ அரசியலின் வீச்சை எதிர்கொள்ளக்கூடிய வலிமையான மக்கள் ஒற்றுமையையும், புதிய அரசியல் நம்பிக்கையையும் உருவாக்குவதில் மதச்சார்பற்ற மற்றும் மாநில அரசியல் ஏன் தோல்வியடைந்துள்ளது?’ என்பதே இந்தத் தேர்தல்களுக்குப் பின் எழவேண்டிய உண்மையான கேள்வியாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கல்வி வளாகங்களில் நிகழும் இனப்படுகொலை!

Loading

கல்வி என்பது விடுதலைக்கான வழி என்று அண்ணல் அம்பேத்கர் கற்பித்தார். ஆனால், இன்றைய இந்திய வளாகங்கள் தலித் மாணவர்களை அவர்களின் சாதி அடையாளத்திற்குள்ளேயே முடக்கி வைக்க முயற்சிக்கின்றன. சட்டங்களை விடவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மனங்களிலுள்ள சாதி உணர்வு மாறாதவரை, கல்வி வளாக மரணங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். சாதி மற்றும் மத பாகுபாட்டை எதிர்கொள்ள தலித், முஸ்லிம் மாணவர்கள் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளும் போது அவர்கள் ‘தேச துரோகிகள்’ என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். கல்வி வளாகங்கள் அனைவருக்கும் பொதுவான வளாகங்களாக எப்போது மாறும்?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஆலி முஸ்லியார்: மலபார் புரட்சியின் தலைமகன்

Loading

ஆலி முஸ்லியார் வெளிப்படுத்திய வார்த்தைகள், மரணத்தைக் கண்டு அஞ்சாத அவரது தீரத்தைக் காட்டுகின்றன: “நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். விரைவில் நாங்கள் எதிர்கொள்ளப் போகும் மரண தண்டனையைப் பற்றிய எண்ணம் எங்களைச் சிதைக்கவில்லை. எங்களைப் போன்ற நிரபராதிகள் அனுபவிக்கும் இந்த வலியும் துயரமும் ஒருபோதும் வீண் போகாது என்ற சிந்தனையே எங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றன.”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

‘இந்துச் சமூகமே உச்சத்தில் இருக்க வேண்டும்!’
சில வேலைவாய்ப்பு வலைத்தளங்கள் மத அடிப்படையில் விண்ணப்பங்களை வடிகட்டுவது ஏன்?

Loading

இத்தகைய வேலைவாய்ப்பு வலைத்தளங்கள், வெற்றிடத்திலிருந்து தோன்றியவையல்ல. அவை, முஸ்லிம்களைப் பொருளாதார ரீதியில் புறக்கணிக்கும் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

‘மொஹப்பத் கா ஷர்பத்’ ஒன்றும் ‘ஷர்பத் ஜிஹாது’ இல்லை!
ரூஹ் அஃப்ஸாவை ஆயுதமாக்கும் உணவு அரசியல்

Loading

ஒரு காலத்தில் ஒற்றுமையின் சின்னமாகக் திகழ்ந்த ரூஹ் அஃப்ஸா, இன்று பிளவுபடுத்தும் வெறுப்புப் பேச்சில் பகடையாக மாறியுள்ளது. பாபா ராம்தேவ் இதனை ‘ஷர்பத் ஜிஹாது’ என்று அடையாளப்படுத்தியிருப்பது, ஒன்றிணைக்க வேண்டிய உணவு எவ்வாறு அரசியல் ஆதாயங்களுக்காக ஆயுதமாக்கப்படுகிறது என்பதைப் பிரதிபலிக்கிறது. நாம் பகிர்ந்து உண்ட நமது உணவு மேசைகள், இதுபோன்ற பிளவுகளிலிருந்து என்றேனும் விடுபடுமா என்று வினவுகிறார் ஸதஃப் உசைன்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

தூஃபானுல் அக்ஸா: இழப்புகளுக்கு அப்பால்…

Loading

காஸாவின் இழப்புகளுக்கு ஈடாக எதுவும் இருக்க முடியாது என்றாலும், ஸியோனிஸ்டுகளின் இனப்படுகொலை முயற்சிகள் எதிர்ப்புப் போராட்ட அமைப்புகளையோ, அவற்றின் திறனையோ, போர் புரியும் மன உறுதியையோ பாதிக்கவில்லை. இராணுவ நடவடிக்கையின் மூலம் காஸாவை ஒருபோதும் பணியவைக்க முடியாது. தலைவர்கள் என்றோ, வீரர்கள் என்றோ வேறுபாடின்றி, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை முடித்துச்செல்கிறவர்களின் பொறுப்புகளை உடனடியாக ஏற்கக்கூடிய ஒரு நீண்ட வரிசையும், குறைபாடற்ற செயற்பாட்டு அமைப்பும் அங்கு இருக்கிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்திய முஸ்லிம்கள் ஜனநாயகத்தில் பங்காளிகள்; ராஜதந்திரத்தில் பகடைகள் அல்ல!

Loading

இந்திய அரசியலுக்கு மட்டுமே உரித்தான விசித்திரமான முரண்பாடாக, உள்நாட்டில் முஸ்லிம்களைப் புறக்கணிக்கும் ஓர் அரசாங்கம், அண்மையில் பஹல்காமில் நிகழ்ந்த கொடிய தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கினை ‘வெளிக்கொணர்வதற்காக’ முஸ்லிம் முகங்கள் முதன்மையாக இடம்பெற்றுள்ள 48 உறுப்பினர்கள் கொண்ட ஒரு பரந்த, பலகட்சிப் பிரதிநிதிகள் குழுவை தற்போது ஒருங்கிணைத்துவருகிறது.
முஸ்லிம்கள் அந்தக் குழுவில் அங்கம் வகிப்பது பிரச்சினையல்ல. மாறாக, இதன் பின்னணியில் உள்ள பாசாங்குத்தனமான அடையாள அரசியலே சிக்கலானது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மாலிக்: பீமாப்பள்ளி முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இரண்டாவது துப்பாக்கிச்சூடு!

Loading

பீமா பள்ளி துப்பாக்கிச்சூட்டிற்குக் காரணமானவர்களைக் குறித்து பேசாமல் மெளனம் சாதித்தும், பாதிக்கப்பட்டவர்கள் மீது சந்தேகத்தின் நிழலை படியச் செய்தும், வரலாற்றையும் உண்மையையும் திரித்தும் ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நேர்த்தியான படைப்பு என்ற ஒற்றைக் காரணம் மட்டுமே ஒரு திரைப்படத்திற்கு உரிய அங்கீகாரத்தை வழங்கிவிடாது என்ற உண்மையை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் படிக்க