மால்கம் X மூட்டிய புரட்சித் தீ
![]()
மால்கம் X மார்பைத் துளைத்த தோட்டாக்கள் அவரின் போராட்ட அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக வெள்ளை இன வெறியர்கள் கொக்கரித்த தருணத்தில், மால்கம் ஏந்திய விடுதலை தீபத்தை, தொடர் ஓட்டப் பந்தய வீரனைப் போல மால்கமிடமிருந்து வாங்கி கொண்டார் ஹாரி எட்வர்ட்ஸ். டாமி ஸ்மித், ஜான் கார்லோஸ் போன்ற கறுப்பின இளைஞர்கள் மால்கமின் மார்பைத் துளைத்த தோட்டாக்களை கறுப்பின விடுதலைக்கான விழிப்புணர்வு வித்துகளாக ஊன்றினர். மெக்சிகோ ஒலிம்பிக் அரங்கில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்பு காற்றைக் கிழித்துக் கொண்டு உயர்ந்தது வெறும் கறுப்பு நிற கையுறைகள் மட்டுமல்ல, அது மால்கம் X-ன் ஆன்மா! அவர் கொல்லப்படவில்லை; ஒடுக்குமுறைக்கு எதிரான தத்துவமாக என்றும் வாழ்கிறார்.
மேலும் படிக்க