கவிதைகள் முக்கியப் பதிவுகள் 

போராடும் ஃபலஸ்தீன மக்களுக்காக ஐந்து கவிதைகள் — பீட்டர்

Loading

1. “யுத்தம் நிறுத்து!” என்றபாப் மார்லியின் ‘ஒருநாள்’ பாடல்உலகமுழுதும் பரவுகிறது இப்போது;அதில் உண்மையின் கூறு உண்டு.ஆனால், இந்த நாட்டில் யார் தொடங்கியது போரை?எத்தனை ஆண்டுகள், எதற்காக?யார் நிறுத்துவது?வெறிகொண்ட சண்டைகளை போர் என்றுபெயர் இட்டு ஊதிவிட்டது யார் ?அமெரிக்காவின் இசுரேலைத்தான் கேட்க வேண்டும்.இதோ, ஏவுகணை வீச்சில்ஆஸ்பத்திரியை அழித்துஐந்நூறு பேரைக் கொல்லுதுஇனவெறி இசுரேல்.எரிந்துபோன பெண்கள்பீதியூட்டும் யுத்தக் காட்சி ;மண்ணை முத்தமிட்டு மரிக்கும் குழந்தைகள்பாசிசத்தின் யுத்த சாட்சி! 2. மண் எரிந்தாலும்நாட்டைவிட்டு ஓடமாட்டார் காஸா மக்கள்.இத்தனைக் காலமும் ஆதரவாய்அரபு மக்கள் நிற்பது எத்தனை உண்மையோஅரபு ஆட்சி அதிகாரம் கேட்காது என்பதும்பச்சை உண்மை.இனிமேலும் இது கையறுந்த திகைப்பல்ல,“எங்களைக் கொல்லஉங்களால் முடியாது!” என்றஎன் தாயின் கைதிறந்த சாபம்! 3. ”இனி இது தொடரக்கூடாது”சிறுவர்களின் எதிர்காலம் கேட்கிறது.2000-ல் சிறுவன் முஹம்மது அத்துரானி கொலை தொடங்கி“ஏவுகணையில் நாங்கள் சிக்குவது நிச்சயம்.எனது பொருளெல்லாம் நண்பர்களுக்கு” என்று தீட்டிவைத்தநேர்மை என்ற…

மேலும் படிக்க
கவிதைகள் 

திரை

Loading

சின்னஞ்சிறு பொய்களையெல்லாம் சிறு பொய்கை ஒன்று வளர்த்தது ஊதா வெள்ளை என்று இரவு பகலாய் பூத்து அத்தனைக்கும் மேலால் திரையிட்டிருந்தது சத்தியத்தின் நீர்வெளியில் அசாத்தியம் தலைகீழ் விம்பமாய்த் தெரிகிறது பழுப்பு நிறத்தில் மாறியிருந்த முந்தைய வாக்குறுதி தோய்ந்த வெண்சட்டை பெட்டியில் காலங்காலமாக மஞ்சள் கனவில் உறங்கியிருக்கிறது ஒவ்வொரு அசத்தியமும் தன்னையொத்த மற்றுமொரு அசத்தியத்தின் சலசலப்புக்கு இரையாகிறது ஒவ்வொன்றாய் குறைந்து குறைந்து மெய்மையின் வேலியில் கைகளைக் கிழித்து சொட்டும் குருதியை பொய்கையில் கலந்து காலத்தின் ரணமென நொந்துகொண்டது சுழற்சியில் பலியாகிறது பித்தம் தெளிந்த பின் ஒற்றிக்கொள்ளும் வாய்மையின் வழித்தடம்

மேலும் படிக்க
கவிதைகள் முக்கியப் பதிவுகள் 

காற்றில் தளரும் சுமை

Loading

சிரித்துக்கொண்டிருக்கும் விழிகளுள்
தூசியைத் தூற்றி
கண்களைக் குளமாக்கி
அதில் தாமரை வளர்க்கும்
கைங்கரியம் அறிகிறது

மேலும் படிக்க
கவிதைகள் முக்கியப் பதிவுகள் 

தாழிடப்பட்ட நாட்களின் அகவல்

Loading

பாதங்களற்ற வீதிகள்
சக்கரங்களின் உருளும்
சுமை நீங்கி ஓய்கின்றன

நிறமற்று வழியும்
கண்ணீர் அப்பிய செய்திகள்
குருதியின் நிறமாகின்றன

மேலும் படிக்க