ஃபலஸ்தீன விவகாரத்தில் இந்தியா இரு தேசத் தீர்வை ஆதரிப்பதாகக் கூறினாலும், உறவு இஸ்ரேலுடன் மிக நெருக்கமாக ஆகியிருக்கிறது. குறிப்பாக, ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்காவின் தற்போதைய தாக்குதல்களையோ, ஆயதுல்லாஹ் ஃகாமினயீயின் கொலையையோ இந்தியா கண்டிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டுத் தப்பியோடி இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளார். இப்போது அங்கு இடைக்கால அரசு அமைந்து அதில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ் பொறுப்பேற்றிருக்கிறார். இவ்வளவு பெரிய மாற்றம் வங்கதேசத்தில் நிகழ்ந்ததற்குக் காரணமாக அமைந்தது அங்கே ஏற்பட்ட மாணவர் எழுச்சிதான்.
மேற்குலகிலும் மற்ற பல நாடுகளிலும் வலதுசாரித் தீவிரவாதம்தான் உண்மையான அச்சுறுத்தலாக உள்ளது. அரசியல், ஊடகம் என அனைத்துத் தளங்களிலும் இவர்கள்தாம் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இளைஞர்களை மூளைச் சலவை செய்து வன்முறையைத் தூண்டுகின்றனர். இதற்கு எதிராக உலகம் முழுவதும் பலமான குரல் எழ வேண்டும். அந்தந்த நாடுகளில் இருக்கும் அரசுகள் வலதுசாரித் தீவிரவாதத்தை தனிக் கவனமெடுத்து முறியடிக்க வேண்டும். இனவாதத்தையும், இஸ்லாமிய வெறுப்பையும் முற்றாக வேரறுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த நாடுகள் ‘உண்மையான வளர்ச்சி’யை நோக்கிச் செல்ல முடியும்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட செய்தி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 10 மாதத்துக்குள் இஸ்மாயில் ஹனிய்யாவின் குடும்ப உறுப்பினர்கள் 60 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்கூட ஃகஸ்ஸாவில் இருந்த அவரின் மூன்று மகன்களைக் கொன்றது இஸ்ரேல்.
இப்போது இஸ்மாயில் ஹனிய்யா ஷஹீதாகியிருக்கிறார். இதற்குக் காரணம் என்னவென்று பலருக்கும் கேள்வி இருக்கும். குறிப்பாக இதற்கு 4 காரணங்களைச் சொல்லலாம்.
மதத்தையும் அரசையும் பிரித்தல் என்று செக்யூலரிசத்தை எளிய முறையில் வரையறுக்கலாம். செக்யூலரிசம் பல்வேறு விதமாக மதச்சார்பற்ற நாடுகளில் வெளிப்படும். இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அது உள்ளடக்கும் (Inclusive) தன்மையில் இருப்பதாகச் சொல்வார்கள். அதுவே பிரான்ஸ் பாணி மதச்சார்பின்மையானது அரசிலிருந்து மதங்களை முற்றிலும் பிரிக்கும் பண்பைக் கொண்டது. அதை ‘லைசிடே’ என்றழைப்பார்கள். துருக்கியின் மதச்சார்பின்மையை ‘லைக்ளிக்’ என்கிறார்கள். அது பிரான்ஸைவிட மதத்தில் நேரடியாகத் தலையிடுகிறது.
இப்படி செக்யூலரிசம் நடைமுறைப்படுத்தப்படுவதில் வித்தியாசங்கள் இருப்பது உண்மையே. அதேசமயம் அவற்றுக்கு மத்தியிலுள்ள பொதுப் பண்பை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. நவீன தேச அரசு எனும் கட்டமைப்புக்குள் இயங்கும்போது அதன் பண்பை அது எல்லா மதச்சார்பற்ற நாடுகளிலும் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. ஆம், சமயத்தை, சமய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாகச் செல்லரிப்பது அதன் முதன்மையான பொதுப்பண்பு எனலாம்.
பல ஆண்டுகளாக அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இஸ்ரேல் இருப்பது நமக்குத் தெரியும். அதிலும் காஸா மீது இஸ்ரேல் அரசு இனப்படுகொலையை நிகழ்த்தும்போது அமெரிக்கா அதற்கு பக்கபலமாக நின்று எந்த அளவுக்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். 1948ல் இஸ்ரேல் எனும் நாடு உருவான சமயம் தொட்டு (75 ஆண்டுகளாக) இரு நாடுகளுக்கும் மத்தியில் மிக பலமான உறவு இருந்துவருகிறது. இந்த உறவு வலுவாக இருப்பதற்கு 4 முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.
ஆஃபியா சித்தீக் எனும் பெண் டாக்டருக்கு 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, உலகின் மிகக் கொடூரமான சிறைகளில் ஒன்றான FMC கார்ஸ்வெல் சிறையில் அவர் வாடிக்கொண்டிருக்கிறார். Prisoner 650, Grey Lady, தேசத்தின் மகள் என அவருக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. ஆஃபியாவுக்கும், அவருடைய பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் நேர்ந்த கொடூரத்தை வார்த்தைகளைக் கொண்டு நம்மால் விளக்க முடியாது. Dr.ஆஃபியா யார், அவர் எப்படி சிறை சென்றார், அவரை சிறைவைத்திருப்பது யார், என்ன காரணம் அதற்குச் சொல்லப்படுகிறது என இங்கு பார்ப்போம்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மத்திய அரசு ரத்து செய்தது. இந்த முடிவு மக்களையோ, மாநிலங்களவையையோ கலந்தாலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் முறையான விவாதம்கூட இல்லாமல் ஒருதலைபட்சமாக மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் உச்ச நீதிமன்றம் பாஜக அரசின் இந்தச் செயலை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இன்று உத்தரப் பிரதேசம் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவுரங்கசீப் ஞானவாபி மசூதியைக் கட்டினார் என்று சொல்லி, அதற்கெதிராக வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்குக்கு எதிரான ஞானவாபி பள்ளிவாசல் நிர்வாகத்தின் மனுதான் நாளை விசாரணைக்கு வருகிறது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான 450 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 அன்று இந்துத்துவ பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது. சரியாக 27 ஆண்டுகள் கழித்து, 2019 நவம்பர் 9ஆம் தேதி மசூதியைத் தகர்த்த அந்த இந்துத்துவ வன்முறை கும்பலிடமே மசூதி அமைந்திருந்த நிலம் முழுவதுமாக ஒப்படைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் பாஜக அரசை அறக்கட்டளை அமைத்து கோவில் கட்டிக்கொள்ளுங்கள் என்று ஒரு அநீதியான தீர்ப்பை வழங்கியது. 5 ஏக்கரில் முஸ்லிம்களுக்கு வேறொரு நிலம் ஒதுக்கப்பட்டது. கொடுமை…
1973ல் அறபு-இஸ்ரேல் போர் நடந்தபோது சவூதியை ஆட்சிபுரிந்த மன்னர் ஃபைசல் எண்ணெய் ஏற்றுமதியைத் தடை செய்து அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் மிகப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தார். அது அவர்களுக்கு பொருளாதார ரீதியான அடியைக் கொடுத்தது. உலக அரங்கில் இஸ்ரேலைத் தனிமைப்படுத்தியது. இதுபோல் ஒரு சரியான, தாக்ககரமான நடவடிக்கையை MBS எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.