வெறும் நெருக்கடியைக் குறைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரை சிறைவாசிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நிலை, அவர்களின் உரிமைகுறித்து கிஞ்சிற்றும் அக்கறை கொள்ளவில்லை.
தொழுகை முடித்து அறைக்குத் திரும்பி வந்த இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ அவர்கள் ஹதீஸ் விரிவுரை எழுதப்பட்ட அந்தத் தாளைப் பார்க்கிறார்கள். தன் மகள் அதில் கிறுக்கி வைத்திருப்பதை அறிகிறார்கள். வேறொரு தாளில் அதை அப்படியே எழுதிக்கொண்டு அதைக் கிழித்துப் போட்டிருக்கலாம். கால் நூற்றாண்டு காலம் கடுமையாக உழைத்து எழுதும் பணியில் ஒரேயொரு தாளை மீண்டும் படி எடுப்பது ஒன்றும் சிரமமான வேலை அல்ல. ஆனால், மகான் அவர்கள் தன் மகள் கிறுக்கிய அந்தத் தாளை அப்படியே தன் நூலில் சேர்த்துவிட்டார்கள். அது இன்றும் மூலக் கையெழுத்து ஆவணமாக (manuscript) இருக்கிறது.
அணுக்களால் உருவான பொருள் உலகத்திலிருந்து பொருட்களற்ற அருவ உலகத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம் என்கிறார் தென்கொரியாவில் பிறந்த சுவிஸ் – ஜெர்மன் தத்துவவியலாளர் ப்யுங் சுல் ஹான். உருவில்லா அருவப் பொருட்களையே நேசிக்கவும் பகிரவும் செய்கிறோம், அவையே நம்மை ஆள்கின்றன. யதார்த்த உலகிற்கும் எண்ம உலகிற்குமான (digital world) வேறுபாடுகள் குறையும்போது நம்முடைய இருப்பு என்பது கேள்விக்குள்ளாகிறது என்கிறார் ஹான். உலகளவில் அதிகம் வாசிக்கப்படும் தத்துவவியலாளரான ஹான், நவதாராளவாத முதலாளித்துவத்தின் விளைவுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்.
எவ்வித வரைமுறையும் கட்டுப்பாடுகளும் இல்லாத சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம். இணையதளங்களும் சமூக ஊடகங்களும் பெருமளவில் பெருகியிருக்கின்றன. மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகமெங்கும் ஆபாசங்கள் நிரம்பி வழிகின்றன. புகைப்படங்கள், காணொளிகள் என பல வடிவங்களில் அவை பதின்ம வயதினரிடம்கூட சென்றுசேர்கிறது. நமக்கு முன் வாழ்ந்த தலைமுறையினர் எதிர்கொள்ளாத ஒரு புதுவித சிக்கல் இது.
நண்பர்களோடு உளநிலை குறித்து உரையாடும்போது “டிப்ரஷனா இருக்கு..” என்பது தவிர்க்க முடியாத வசனமாகிவிட்டது. கவலை, துக்கம் என உளம் சார்ந்த இயல்பான அனைத்து இடர்பாடுகளும் டிப்ரஷனாக மட்டுமே அடையாளம் காணப்படுகிறது. ஏன் தொடர்ந்து அனைவரும் ஒரே விதமாகத் தங்களின் உளநிலையை மொழிப்படுத்துகின்றனர் என்று ஆழ்ந்து பார்த்தால், அதைத்தான் உள மருத்துவர்களும், anti-depressants தயாரிக்கும் நிறுவனங்களும் விரும்புகின்றன என்பது புலப்படும்.
இப்படி மொழி ஒரே விதமாக அமையும்போது உரையாடுவதற்கு வசதியாக அமைந்துவிடுகிறது. உள மருத்துவர்களும் எளிமையாக “உன் செரடோனின் (serotonin) அளவு குறைவாக இருப்பதால்தான் உனக்கு டிப்ரஷன்..” என்று சொல்வதற்கு வசதியாக இருக்கிறது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வதில் இவர்களுக்கு ஆர்வமில்லை. அதற்கான சட்டகமும் அவர்களிடம் இல்லை. ஒரு பாக்டீரியாவை நீக்குவதுபோல அதை நீக்க முனைகிறார்கள். அவ்வளவுதான். மூளையின் வேதியியல் கூறுகளைக் கொண்டு மட்டுமே மானுட நிலைமையை (human condition) சொல்லிவிட முடியுமா?
தமது ஆத்ம திருப்திக்காக மக்கள் நாடிச்சென்ற சமயப் பெரியார்களை நாம் இழந்து நிற்கும் தருணமிது. இப்போதெல்லாம், மக்களின் ஆன்மீக, பண்பாட்டுப் பயணங்களில் பங்கெடுக்கும் ஆன்மீகத் தலைவர்களை காண்பதரிது. மாறாக, லௌகீக தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக மட்டுமே இஸ்லாமியத் தலைமைகளை நாடிச் செல்லும் சமூக மரபு தோன்றியதானது நம்மை வருந்தச் செய்கிறது. இந்நிலையில், இளம்தலைமுறையினரை வழிநடாத்தும் பணியை நமது முதன்மையான செயற்திட்டமாகக் கொண்டு செயற்பட முயற்சிப்போம்.