குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஓர் அழகிய ஆவணம்

Loading

தொழுகை முடித்து அறைக்குத் திரும்பி வந்த இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ அவர்கள் ஹதீஸ் விரிவுரை எழுதப்பட்ட அந்தத் தாளைப் பார்க்கிறார்கள். தன் மகள் அதில் கிறுக்கி வைத்திருப்பதை அறிகிறார்கள். வேறொரு தாளில் அதை அப்படியே எழுதிக்கொண்டு அதைக் கிழித்துப் போட்டிருக்கலாம். கால் நூற்றாண்டு காலம் கடுமையாக உழைத்து எழுதும் பணியில் ஒரேயொரு தாளை மீண்டும் படி எடுப்பது ஒன்றும் சிரமமான வேலை அல்ல. ஆனால், மகான் அவர்கள் தன் மகள் கிறுக்கிய அந்தத் தாளை அப்படியே தன் நூலில் சேர்த்துவிட்டார்கள். அது இன்றும் மூலக் கையெழுத்து ஆவணமாக (manuscript) இருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அறுக்கும் முன்…

Loading

நாம் ஏன் இளம் பிராணிகளை அறுக்கிறோம்? அதன் இறைச்சி மென்மையாக இருப்பதற்காக என்று சொல்கிறோம். அதுதான் ருசியாக இருக்கும் என்கிறோம். நாவு ருசி தேடி அலைவதில் சட்டங்களை நமக்குச் சாதகமாக வளைக்கிறோம். ருசியாகச் சாப்பிட்டால்தானே அல்லாஹ்வுக்கு மனமுவந்து நன்றி சொல்லலாம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறோம். சபாஷ்! அல்லாஹ்வுக்கு நன்றி சொல்வதில் நாம் அவ்லியாக்களை மிஞ்சிவிட்டோம் பாருங்கள்!

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

உன் பெயரின் ரோஜாக்கள்

Loading

ரோஜாப் பூவுக்கு ஆங்கிலத்தில் Rose என்று பெயர். இறை தியானத்திற்கு, இறைவனை நினைவு கூர்ந்து ஓதுவதற்குப் பயன்படுத்தப்படும் மணிமாலைக்கு ஆங்கிலத்தில் Rosary என்று பெயர். ரோஜாப் பூவுக்கும் ஜெப மாலைக்கும் என்ன தொடர்பு? இதற்கு ஆங்கிலம் விடை தருகிறதோ இல்லையோ, ஆங்கில மொழியே தோன்றியிராத காலத்தில் செம்மொழியாகிவிட்ட அறபியில் விளக்கம் கிடைக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

இன்னும் எயிதுக!

Loading

தனித்தமிழ் அல்லது தூய தமிழ் என்பது சொற்பொழிவுக்கு அழகு. வட்டார வழக்கிலும் மேடையுரை ஆற்றுவதில் தப்பில்லை. ஆனால், மேடைகளில் செந்தமிழுக்கு உள்ள மதிப்பு ஒருநாளும் வட்டார வழக்குக்கு வாய்க்காது, இயல்பாகவே இது மக்களின் பொது மனத்தில் உணரப்படுகிறது. அதேபோல், தமிழறிஞர் எவரும் தம் அன்றாடப் புழக்கத்தில் செந்தமிழ் செப்புவதில்லை. செப்பினால் வீட்டிலேயே எடுபடாது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிந்தையில் ஆயிரம் வினாக்கள் – ரமீஸ் பிலாலி

Loading

ஸூஃபி மகான்களை இஸ்லாம்-நீக்கம் செய்து காட்டுவது என்பது இஸ்லாமோ ஃபோபியாவைப் பரப்புவதன் ஓர் அங்கமாக இவர்களால் முன்னெடுக்கப்படுகிறது. ஸூஃபிகளின் ஞானச் செல்வங்களை முஸ்லிம்களே மறுதலிக்கும்படிச் செய்வதும் இதன் மூலம் சாத்தியமாகிறது. அதே சமயம், ஸூஃபிகள் எல்லாம் இஸ்லாத்தின் கட்டுப்பாடான சட்டங்களுக்கு எதிரானவர்கள் என்னும் பொய்ப் பிம்பத்தையும் கட்டமைத்துவிட முடிகிறது. இப்படி ஒரே கல்லில் இரண்டு அல்லது மேற்பட்ட மாங்காய்கள் விழுகின்றன.

மேலும் படிக்க