கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஹலால் லவ் ஸ்டோரி: அறம், அழகியல், அரசியல்

‘ஹலால் லவ் ஸ்டோரி’ அதன் மாறுபட்ட கதையம்சத்தினாலும், பல்வேறு அடுக்குகளைக் கொண்ட கதைசொல்லல் பாணியாலும், பேசிய அரசியலாலும் பரவலான கவனத்தைப் பெற்றதோடு, பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று ஒரு விவாதத்தையும் உருவாக்கியிருந்தது. ஹலால் லவ் ஸ்டோரி கேரளத்தின் மலபார் பகுதியில் இரண்டாயிரங்களின் தொடக்க காலகட்டத்தில் நடப்பதாகச் சித்தரிக்கப்படுகிறது. இது கேரளத்தில் செயல்படும் ஓர் இஸ்லாமிய அமைப்பின் தொண்டர்களில் சிலர் ஒரு திரைப்படம் எடுக்க முயற்சிசெய்வது குறித்த திரைப்படமாகும். எனவே இது திரைப்படத்துக்குள் திரைப்படம் என்ற பாணியைக் கையாள்கிறது.

மேலும் படிக்க
sita ramam review tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சீதா ராமம்: காதல் காவியம் அல்ல, காவி விஷம்!

சீதா ராமம் திரைப்படத்தில் பல காட்சிகளில் முஸ்லிம் வெறுப்பு அப்பட்டமாக இடம்பெறுகிறது. அதை நைச்சியமாக முன்வைப்பதற்கெல்லாம் படக்குழுவினர் மெனக்கெடவே இல்லை. அதுபோல, தெலுங்குப் படத்துக்கே உரிய க்ரிஞ்சு அம்சங்கள் திரைப்படம் நெடுக இடம்பெறுகின்றன. ஆனால் யூடியூபில் பட விமர்சனம் தரும் பிரஷாந்த், ப்ளூ சட்டை போன்ற பலர் இதை ஆஹா, ஓஹோ எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம் கதாநாயகியைக் கொண்ட மிஸ் மார்வல் தொடர் எப்படியிருக்கிறது?

அமெரிக்க முஸ்லிம்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, அடையாளச் சிக்கல்கள், நெருக்கடிகள் ஆகியவற்றைத் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் எல்லைக்குள் கரிசனத்தோடு சித்தரிக்க முயன்றுள்ளது மிஸ் மார்வல் தொடர். நியூயார்க் நகரத்தில் இருக்கும் பள்ளிவாசலையும், அதனுள்ளே இயங்கும் ஒரு பண்பாட்டு வெளியையும் மிக அழகாகப் பதிவு செய்துள்ளது. அதேபோல், பல்வேறு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட, அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் இஸ்லாமியர்கள் தங்களது பண்டிகைகளையும், வீட்டு விஷேசங்களையும் ஒன்றிணைந்து கொண்டாடுவதைக் காட்டுவது நெகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. உதாரணமாக, கமலா கானின் அண்ணன் ஒரு ஆஃப்ரோ அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்வார். அவரும், இஸ்லாமியர் அல்லாத கமலாவின் மற்ற நண்பர்களும் பாகிஸ்தான் முஸ்லிம்களின் பண்பாட்டு உலகிற்குள் நுழைந்து, ஈத், திருமணம் முதலான அவர்களின் கொண்டாட்டங்களில் மகிழ்வோடு கலந்துகொள்ளும் காட்சி அத்தனை இனிமையாக இருந்தது.

மேலும் படிக்க
beast review குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

பீஸ்ட்: விமர்சனம் எழுதக்கூட தகுதியற்ற குப்பை – ப. பிரபாகரன்

FIR படத்தைத் தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் மற்றுமொரு நச்சுக் குப்பைதான் இந்த Beast திரைப்படம். இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து வெளியிடும் உதயநிதி ஸ்டாலினின் கொள்கைப் பற்று மயக்கமடைய வைக்கிறது.

நாடே இந்துத் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும்போது, அதிலும் வடக்கில் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டும்கூட இப்படியொரு படம் எடுக்க முடிகிறதென்றால் நெல்சன் போன்றவர்கள் யார் என்று அடையாளம் கண்டு கொள்ள வேண்டிய தருணம் இது.

மேலும் படிக்க
the kashmir files review tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: இந்திய சினிமாவின் ‘புதிய பாய்ச்சல்’!

காஷ்மீர் ஃபைல்ஸ் திரையிடப்பட்ட திரையரங்குகளின் வாசல்களில் இஸ்லாமிய வெறுப்பு முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன; “துரோகிகளை அழிக்க வேண்டும், பழிதீர்க்க வேண்டும்” போன்ற முழக்கங்கள் வெகு இயல்பாக எழுப்பப்படுவது இந்தியாவில் இன்று பரவியிருக்கும் வெறுப்புச் சூழலை நமக்கு உணர்த்துகின்றன. அதே 90களின் இறுதியில் தேசியத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் சேனலில் பொது நிதியைக் கொண்டு ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்பட்டது. இது இந்தியாவில் ராமர் அரசியல் வலுவாகக் காலூன்ற வழிவகுத்தது. பாபர் மசூதிக்கு எதிரான கரசேவைக்கு ஆள் சேர்க்கவும் இது பயன்பட்டது. அதுபோல, இன்று காஷ்மீர் ஃபைல்ஸ் படம் இந்துத் தேசியவாத நிகழ்ச்சி நிரலுக்கு மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.

இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் உண்மைக்குப் புறம்பான அம்சங்கள் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன. வெளியேற்றப்பட்ட பண்டிட்களின் எண்ணிக்கை, கொல்லப்பட்டோர் எண்ணிக்கை, அன்று பாஜக ஆதரவு ஒன்றிய அரசின் ஆட்சி இருந்தது முதலான பல்வேறு அம்சங்கள் இப்படத்தில் பிழையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படியான தகவல் பிழைகளையெல்லாம் தாண்டி, இஸ்லாமிய வெறுப்பை உற்பத்தி செய்யும் தனது நோக்கத்தை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது இந்தப் படம்.

மேலும் படிக்க
thozhar thiyagu காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

இந்து தேசிய வெறியூட்டும் தி காஷ்மீர் பைல்ஸ் – தோழர் தியாகு நேர்காணல்

பண்டிட்கள் பிரச்னையை அரசியலாக்குகிறதா பாஜக?
பண்டிட்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்களா?
ஆளுநர் ஜக்மோகன் மீது குற்றம் சாட்டுவது சரியா?
கஷ்மீரிகளின் தற்போதைய நிலை என்ன?
ராணுவம் அங்கு குவிக்கப்படுவது நியாயமா?

மேலும் படிக்க
fir movie review tamil குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

FIR முஸ்லிம்களுக்கு எதிரான திரைப்படமா?

மனு ஆனந்த் என்பவர் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் FIR. விஷ்ணு விஷால் நடிப்பில் ஒரு திரில்லர் படமாக இது வெளிவந்துள்ளது. அவ்வளவு ரசிக்கும்படியாகவோ நேர்த்தியாகவோ இது எடுக்கப்படவில்லை என்பதால் பார்வையாளர்களை எந்தளவுக்கு ஈர்க்கும் என்று தெரியவில்லை. ஆனால் முஸ்லிம்கள் மீது அச்சத்தை அதிகரிக்கச் செய்தல், ‘கெட்ட முஸ்லிம்களை’ அழித்தல் போன்றவை மூலம் அவர்களுக்குக் கிளர்ச்சியூட்ட முயல்கிறது இப்படம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மாநாடு திரைப்படமும் முஸ்லிம்களும்

இந்திய சினிமாவில் முஸ்லிம்கள் குறித்த பதிவு எப்படியிருந்திருக்கிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முஸ்லிம்கள் வலதுசாரிகளாலும் லிபரல்களாலும் எப்போதும் வன்முறையாளர்களாக, பெண் வெறுப்பாளர்களாக, மத வெறியர்களாகவே சித்தரிக்கப்பட்டு வந்த சூழலில், மாநாடு திரைப்படம் இந்தப் போக்கிற்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

இன்றைக்கு இந்திய அரசியல் முஸ்லிம்களை மையப்படுத்தி சுற்றிச்சுழல்வதை நாம் அறிவோம். அவர்கள்மீது அச்சத்தையும் துவேசத்தையும் ஏற்படுத்துவதன் வழியாகவே இந்துத்துவமும் பெரும்பான்மைவாதமும் தம் இருப்பை வலுப்படுத்தியிருக்கும் நிலையில், இஸ்லாமிய வெறுப்புக்கு எதிரான படமாகவும் மாநாடு வெளிவந்திருக்கிறது. முஸ்லிம்கள்மீது காவல்துறை பொய் வழக்கு புனைவது, அரசியல் லாபங்களுக்காக மதக் கலவரம் தூண்டப்படுவது முதலான விஷயங்களை அது அழுத்தமாக பலமுறை பதிவு செய்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘ஆன்டி இண்டியன்’ படத்தின் அரசியல் என்ன?

பாட்சாவின் சடலத்தைக் கொண்டு முஸ்லிம்கள் – சங்கிகள் – கிறிஸ்தவர்கள் இடையில் ஏற்படும் சிக்கலும் முறுகலும்தான் ஆன்டி இண்டியன் படத்தின் மையக்கரு. படத்தின் தொடக்கம் முதலே முஸ்லிம்கள் பிரச்னைக்குரியவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். சங்கிகள் மீம் கண்டெண்ட் பாணியில் சில இடங்களில் பகடி செய்யப்படுகிறார்கள். முட்டாளாக, நகைப்புக்குரியவர்களாக அவர்களைச் சித்தரிக்கிறது படம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சமநிலையற்றுப் பாயும் ‘குருதி’: சில விமர்சனக் குறிப்புகள்

இந்துத்துவ இளைஞனின் வன்முறைகள் வெறுமனே வார்த்தைகளில் மட்டுமே விவரிக்கப்படுகின்றன. ஆனால் லாயிக், கரீம் மற்றும் இன்னொரு முஸ்லிம் இளைஞன் ஆகியவர்கள் கொடூரத்தின் எந்த எல்லைக்கும் செல்பவர்களாகக் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். இந்துத்துவ இளைஞன் கிராமத்து ஏழைப் பூசாரியின் பேரன். லாயிக்கோ முஸ்லிம் அடிப்படைவாத இயக்கத்தில் சேர்ந்து, அது தடைசெய்யப்பட்டவுடன் வெளிநாடு செல்லும் அளவுக்கு வசதியானவன். எல்லாவற்றையும்விட முக்கியமான பிரச்னை, இந்துத்துவ இளைஞன் எந்த அமைப்பைச் சேர்ந்தவனாகவும் காட்டப்படுவதில்லை. ‘இந்துக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக’ உணர்ந்து வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்தவன். ஆனால் லாயிக்கோ இஸ்லாமிய வன்முறை அமைப்பில் செயல்படுபவன். வெளிநாட்டில் இருந்ததன்மூலம் அவனுக்கு வெளிநாட்டு ஆயுதக்குழுக்களுடன் தொடர்பு இருக்கலாம் என்று பார்வையாளர்கள் புரிந்துகொள்வதற்கான மௌனமும் பிரதியில் உண்டு.

மேலும் படிக்க