கேள்வி-பதில்கள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

மலபார் இலக்கியத் திருவிழா ஏற்பாட்டாளர்களுடன் ஒரு நேர்காணல்

வாழ்விலிருந்து இலக்கியம் தொலைவான ஒன்றில்லைதானே? எழுத்தறிவில்லாத ஒரு மனிதனுக்குகூட நாட்டார் பாடல், கதை, இசை என்பன உண்டு. பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுவதும்,  நூலகம், புத்தகத்தில் இருப்பதும்தான் இலக்கியம் என்பது இலக்கியத்தைக் குறித்த நவீன கருத்தாக்கமே. ஆனால், உண்மை அவ்வாறில்லை. மனித நாகரிகத்தின் வரலாற்றைக் கவனிக்குமிடத்து எல்லா சமூகங்களுக்கும் கதைகளும், கதைச் சொல்லலும் இருக்கின்றன. நம்மனைவருக்கும் செறிவான கதை சொல்லும் மரபுண்டு. அது மாப்பிளாக்களுக்குமுண்டு.

மேலும் படிக்க
இலக்கியம் கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘கவிதையின் சமன்’ – மலபார் இலக்கியத் திருவிழா, கோழிக்கோடு 2023

ஒவ்வொரு சமூகத்தினரும் சாதி, மத அடிப்படையில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினால் மட்டுமே தங்கள் சமூக மாணவர்களுக்கு போதிய இடங்கிடைக்கிறது என்ற பருண்மை இலக்கிய நிகழ்வுகளுக்குள்ளும்  தவிர்க்க முடியாத ஒன்றாக மாறுவது வேதனையளிக்கும் விசயம்தான். மலபார் இலக்கியத் திருவிழாவுமே நீண்ட ஒதுக்கலினால், சமூகம் தனக்குத்தானே கண்டெடுத்த விடைதானே. ‘எங்கள் இலக்கிய முதுசொங்களை இறக்கி வைப்பதற்கும், புதியதாய் சுட்ட பணியாரங்களைக் கடை விரிப்பதற்கும் ஈரடி இடந்தாருங்கள் எஜமானே!’ என்ற மன்றாட்டுகளிலிருந்து விடுதலை. இது நம்ம இடம் என்ற உணர்வு அளிக்கும் விசாலமும் தன்னுணர்வும் மகத்தானது.

மேலும் படிக்க
கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

தீண்டாமையை அழித்தொழித்த சையித் ஃபழ்ல் தங்ஙள்

மாப்பிளா போராட்டத்தை மதவெறி என இந்துத்வ நாஜிகள் சாயமடிக்கின்றனர். இடது சாரியினரோ  “விவசாயக்கூலிகளின் புரட்சி” என்பதாக மட்டிறுத்துகின்றனர். ஆனால், மாப்பிளா போராட்டத்தின் களமோ மானுட கரிசனத்தின்  ஆழமும் பரப்பும் கொண்டது. இந்துத்வ நாஜிகள் அவதூறு உரைப்பதைப் போல இப்போராட்டம் இந்து x முஸ்லிம் என்ற இருமைகளுக்கிடையிலான முரணாக நடந்திடவில்லை. இப்போராட்டங்கள் அவற்றின் இலக்கைப் போலவே, ஆதரவும் எதிர்ப்பும் கூடிய பல முனைகளைக் கொண்டவை என்பதை தனது உழைப்பினால் நிரூபித்திருக்கிறார் நூலாசிரியர் முஹம்மது அப்துல் சத்தார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

தஸவ்வுப்: இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம் – நூல் பார்வை

உண்மை ஸூஃபிகள் எங்கோ ஒரு மூலையில் ஓசையற்ற நதிபோல ஒழுகிக்கொண்டிருக்க, எதிர்மறைகளால் ஸூஃபியியம் பற்றிய புரிதல்களமோ அலங்கோலப்பட்டுக் கிடக்கிறது. இந்த அவலப் பார்வைகளிலிருந்தும் தெற்றுப் போக்குகளிலிருந்தும் ஸூஃபியியத்தை விடுவிக்கிறது இச்சிறு நூல்.

மேலும் படிக்க
ali manikfan tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அலீ மனிக்ஃபான்: பேரண்ட ஆற்றலின் தூதர்

அந்தக் கல் கட்டடத்தின் வாயிலிற்கு ஓலை கிடுகினாலான கதவு.. சன்னலின் இடத்தில் வட்ட வடிவிலான சிமிட்டி கிராதிகள்.

அந்த கிடுகு , கிராதி துளைகள் வழியாக அரூப மாயாவியான காற்றானது குடிலுக்குள் வருவதும் போவதுமாக இருந்தது. வீட்டின் உள்ளே வாழ்க்கையை அன்றாடம் நகர்த்திச் செல்வதற்குத் தேவையான மிக எளிய தளவாடங்களே இருந்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாக மரங்கள் வளர்ந்து நின்றன. அந்த மரத்திலிருந்து பல அடிகள் தள்ளி நின்று நீரூற்றிக் கொண்டிருந்தார் ஒரு முதியவர்.

தலைப்பாகையும் கை பனியனும் லுங்கியும் அணிந்திருந்த அவர் எங்கள் நண்பர்கள் குழாமை பனங்கற்கண்டும் எலுமிச்சை சாறும் கலந்த பானகம் தந்து வரவேற்றார். அவர்தான் அலீ மனிக்ஃபான்.

மேலும் படிக்க
kayalpattinam shuaib குறும்பதிவுகள் 

புத்தக மனிதர் சுஐபு காக்கா

அமெரிக்காவாழ் இந்தியரொருவர் சுஐபு காக்காவின் புத்தகங்களை அப்படியே விலைக்கு எடுத்துக் கொள்கிறேன் எனச் சொன்னார். மூத்த ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசனின் வழிகாட்டுதலின்படி சுஐபு காக்காவின் மொத்த நூல் சேகரம் அவர் மிகவும் நேசித்த காயல்பட்டினம் அரசு நூலகத்தில் சேர்க்கப்பட்டு அவரது பெயரிட்ட தனியடுக்கில் வைக்கப்படவுள்ளன.

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

‘க’ஞானம்

முதுகு ஒட்டிக் கொண்டு வியர்த்து எண்ணெயாகி டைல்ஸ் தரை நழுவியது. சற்று நகர்ந்த பிறகு பழைய இடத்திலுள்ள வியர்வையின் மினுமினுப்பில் ஜன்னலின் கிராதி கோணவும் தலையின் சூடு மெழுகாகி இளகியது. அதற்கு மேல் தொடர மனமில்லை. எழும்பி அமர்ந்து கொண்டான் நூகு.

பச்சையும் கருமையுமாக இடது கெண்டைக்காலில் முந்திரிக்கொத்து போல சுருண்டிருந்த சுருள் நரம்பு பிரச்சினைக்கு விபரீத கரணி ஆசனம் சிறந்தது என யோகாச்சார்யன் இஸ்மாயீல் திருவனந்தபுரம் வானொலியில் சொல்லியதைக் கேட்டிருந்தான். அதன் பேரில் ஒரு வாரமாக காலை அல்லது மாலை என நூகின் யோகாசனப் பயிற்சி தீவிரமடைந்தது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கிரானடா: முஸ்லிம் ஸ்பெயின் அழிப்பும், நிகழ்கால இந்தியாவும்

ஒரு படைப்பு அதன் இலக்கியச் சுவைக்காகவும், அது உண்டாக்கும் கிளர்விற்காகவும் வாசிக்கப்பதோடு, அது பேசும் அரசியலுக்காகவும்தான் மனங்கொள்ளப்படுகின்றது. கிரானடா நாவல் பேசும் அரசியலின் தகிப்பு நம்மை முழுமையாக தன் வசம் எடுத்துக்கொள்கின்றது. அதன் ஒவ்வொரு சொல்லும் இன்றைய தினத்திற்குள்ளும் அதன் கணத் துகள்களுக்குள்ளும் சொரிகின்றது. சிலுவையின் இடத்தை காவி அனிச்சையாகவே மாற்றீடு செய்துகொள்கின்றது. நிகழ்கால இந்தியாவுடன் கிரானடாவின் பனுவலை இணைத்துப் பார்க்காமல் வாசிப்பதென்பது ஒரு வகையில் கள்ள வாசிப்பில்தான் சேர்த்தி.

கிரானடா ஒன்றாம் நாவலின் இறுதிப் பகுதியில் இடம்பெறும் சலீமாவின் மீதான மத விசாரணையையும், அதன் பிறகு கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த கஷ்டிலியப் படையாளிகளால் அவள் கொலைக்களத்தை நோக்கி அழைத்துச் செல்லும் படலத்தையும் வாசித்துக்கொண்டிருக்கும் நாளில்தான் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் வெளியாகின்றது. கர்நாடகக் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிவதற்கான மாநில அரசின் தடையை உறுதிப்படுத்திய தீர்ப்புதான் அது. இரத்தம் தோய்ந்த வரலாற்றின் ஓர் அத்தியாயம் தனது கூட்டாளியை இரத்தக் கவிச்சி மாறாமல் நோக்கி புன்னகைத்துப் புளகமெய்திய தருணம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சாயாக்கடை விஜயனும் மொய்து கீழிச்சேரியும்

இந்தப் பெரும் போக்கு சராசரி உறைவில் உடைவை ஏற்படுத்தி சாதித்தவர் விஜயன். வாழ்வின் கடைசி வாரங்கள் வரை அயல் நில உலாவில்தான் இருந்திருக்கின்றார். செல்வருக்கும் சாதிக்கக் கிடைக்காத ஒன்று. தன் நேசத்திற்கு முன்நிபந்தனைகள் எதுவும் கோராத வைக்கம் முஹம்மது பஷீர், வாடிக்கையாளரின் மானம் காக்கும் கே.ஆர்.விஜயன், கோடி ரூபாய்களை தள்ளி நிறுத்திய மொய்து கீழ்ச்சேரி – இது போன்றவர்கள்தான் சுற்றுலாவிற்கும் பயணத்திற்குமான வேறுபாட்டை தங்கள் வாழ்வைக் கொண்டு வரையறுப்பதோடு வாழ்வின் வரம்புகளை விரித்துப் பரத்துபவர்களும்கூட.

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

மூன்று நாள் ஜமாஅத் (சிறுகதை)

தொலைவில் சிலோன் தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களை முஹல்லா கஷ்த்திற்காக காதுமந்தம் சதக்கத்துல்லா வழிநடத்தி வந்தார். சிலோன் ஜமாஅத்துதான் ஏகேக்கு சரி என்ற முன்தீர்மானத்தில் காதுமந்தம் சதக்கத்துல்லா ஏகே காக்காவை வளைத்துப் பிடித்துவிட்டார். சிகரட்டிற்கான விலையை எண்ணி காதுமந்தம் சதக்கத்துல்லாவை மனத்திற்குள் சபித்தவாறே புகையும் சிகரட்டை காலில் போட்டு நசுக்கியவாறே அவர்கள் சொன்ன சலாமிற்கு விடையளித்தார் ஏகே காக்கா.

மேலும் படிக்க