நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கிரானடா: முஸ்லிம் ஸ்பெயின் அழிப்பும், நிகழ்கால இந்தியாவும்

ஒரு படைப்பு அதன் இலக்கியச் சுவைக்காகவும், அது உண்டாக்கும் கிளர்விற்காகவும் வாசிக்கப்பதோடு, அது பேசும் அரசியலுக்காகவும்தான் மனங்கொள்ளப்படுகின்றது. கிரானடா நாவல் பேசும் அரசியலின் தகிப்பு நம்மை முழுமையாக தன் வசம் எடுத்துக்கொள்கின்றது. அதன் ஒவ்வொரு சொல்லும் இன்றைய தினத்திற்குள்ளும் அதன் கணத் துகள்களுக்குள்ளும் சொரிகின்றது. சிலுவையின் இடத்தை காவி அனிச்சையாகவே மாற்றீடு செய்துகொள்கின்றது. நிகழ்கால இந்தியாவுடன் கிரானடாவின் பனுவலை இணைத்துப் பார்க்காமல் வாசிப்பதென்பது ஒரு வகையில் கள்ள வாசிப்பில்தான் சேர்த்தி.

கிரானடா ஒன்றாம் நாவலின் இறுதிப் பகுதியில் இடம்பெறும் சலீமாவின் மீதான மத விசாரணையையும், அதன் பிறகு கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த கஷ்டிலியப் படையாளிகளால் அவள் கொலைக்களத்தை நோக்கி அழைத்துச் செல்லும் படலத்தையும் வாசித்துக்கொண்டிருக்கும் நாளில்தான் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் வெளியாகின்றது. கர்நாடகக் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிவதற்கான மாநில அரசின் தடையை உறுதிப்படுத்திய தீர்ப்புதான் அது. இரத்தம் தோய்ந்த வரலாற்றின் ஓர் அத்தியாயம் தனது கூட்டாளியை இரத்தக் கவிச்சி மாறாமல் நோக்கி புன்னகைத்துப் புளகமெய்திய தருணம்.

மேலும் படிக்க
granada novel - radwa ashour நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கிரானடா: மாபெரும் வரலாற்றுத் துயரின் நிழலோட்டம்

15ம் நூற்றாண்டின் இஸ்லாமிய நாகரிகத்தின் அறிவு மற்றும் பண்பாட்டுத் தலைநகரான முஸ்லிம் ஸ்பெயினின் (அந்தலூஸ்) வீழ்ச்சியின் வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாக வைத்து நகர்கிறது கிரானடா நாவலின் கதை. பெருமளவு ஒரே குடும்ப உறுப்பினர்கள்தாம் கதை மாந்தர்கள். ஆனால், அதன் வழியே நாவல் ஒரு மாபெரும் வரலாற்றுத் துயரை நிழலோட்டமாக முன்வைத்து அற்புதமான தரிசனத்தை எமக்குள் நிகழ்த்துகிறது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கிரானடா: நாவல் வாசிப்பனுபவம்

தமிழ் நாவல் உலகு எனும் வீட்டில் புதியதொரு ஜன்னலை திறந்துவிட்டுள்ளது கிரானடா என்று சொன்னால் அது மிகையான கருத்தல்ல. ”அசாதரணமாதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின் தொடர்ந்து செல்வதன் ஊடாக, பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகு நுட்பமாக நெய்தெடுக்கிருக்கிறது கிரானடா” எனப் பின்னட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகத்திற்கு நியாயம் செய்துள்ளது இந்த நாவல்.

மேலும் படிக்க