கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

திமுகவின் கொடுங்கனவான பிம்பச் சிறை

Loading

தமிழ்நாடு அரசியலுக்கும் கலைத் துறைக்குமான தொடர்பு காற்றுக்கும் மரத்துக்கும் உள்ள தொடர்பை ஒத்தது. அமெரிக்க நடிகர் ரொனால்ட் ரீகனுக்குப் பிறகு திரைத் துறையை அரசியலுக்கு கச்சிதமாகப் பயன்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம். அண்ணா, கருணாநிதியின் அர்த்தம் பொதிந்த ஆழமான அரசியல் வசனங்கள், அதனை திரையில் பிரதிபலித்த எம்ஜிஆர் உள்ளிட்ட நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு என திராவிட அரசியலின் வளர்ச்சியில் திரைத் துறையின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.
வெண் திரை என்ற மாயச் சுவரில் தோன்றி மறையும் கதாபாத்திரங்களை அச்சு அசல் மனிதர்களாக நம்பும் குணம் இப்போதும் தமிழக மக்களின் நனவிலியில் ஆழப்பதிந்துள்ளது. அதை அறியாமை என்று விலக்கிவிட்டு நகர்ந்து செல்ல முடியாது. அந்த அறியாமை ஆட்சி மாற்றத்துக்கு இட்டுச் செல்லும் – இட்டுச் சென்ற வரலாறுதான் தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தோற்றப் பொலிவும் தொழில்நுட்பத் தேடலும்

Loading

தொழில்நுட்பங்கள் சக்தி வாய்ந்தது என்பதைத் தாண்டி, யார் அதனை கட்டுப்படுத்துகிறார்கள் என்பது முக்கியம். வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் என நவீன மக்கள் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி வெள்ளை இனவெறி கருத்தாக்கங்களை பரப்பும்போது, கறுப்பர்களும் அதே தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தங்கள் கதைகளைச் சொல்ல வேண்டுமென மால்கம் விரும்பினார்.
தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் உந்துதல் வெறும் ஆர்வக்கோளாறால்ல. மால்கமைப் பொறுத்தவரை அது உயிர் வாழ்வதற்கான உத்தி.
தோற்றத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் முக்கியத்துவம் வழங்கிய மால்கம் X அதனை அதிகாரமாக்கலுக்கான கருவிகளாக கருதினார். மால்கமின் இந்த வித்தியாசமான பார்வையை இக்கட்டுரை முன்வைக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மால்கம் X-ம் கவிதையும்: ஓர் இரகசிய உறவின் கதை

Loading

சிறையிலிருந்து விடுதலையான பின், அடிமை வம்ச பெயரை தூக்கி எறிந்து, மால்கம் X ஆனார், அந்தக் கவிஞர். அமெரிக்க கறுப்பர்களின் விடுதலையை நோக்கி ஓடத் தொடங்கிய அந்த இளைஞனால், அடுத்து கவிதை இயற்ற முடியவில்லை.
ஆனால், சொல்லே தன் செயலாக வாழ்ந்த அவருக்கு, கவிதையின் இலக்கணமே மேடைப் பேச்சில் கவிந்தது. ஆற்றல் மிக்க பேச்சாளராக உருமாறிய மால்கமின் வார்த்தைகளில் தெறித்தது வெறும் அரசியல் முழக்கங்களோ, ஆவேச உணர்வுகளோ அல்ல. அவை கவிதைகள்.
போராட்ட நாயகனாக அறியப்படும் மால்கம் X கவிதையுடன் கொண்டிருந்த ஆச்சர்யமான உறவை விவரிக்கும் கட்டுரை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலம் கடந்தும் கனலும் பெருநெருப்பு

Loading

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில், அமெரிக்காவின் இனவெறி நிறைந்த தெருக்களில் ஒரு குரல் எழுந்தது. அது வெறும் எதிர்ப்பின் குரல் மட்டுமல்ல, விடுதலையின் தத்துவத்தை மறுவரையறை செய்த ஓர் அறிவுசார் புரட்சிக் குரல். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரின் பெயர், வரலாற்று இயங்கியலில் (Historical Dialectics) ஒரு முக்கியமான ஆளுமையாக இடம் பிடித்திருக்கிறது. ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை மட்டும் அவர் வழங்கவில்லை; மாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையையும், அடையாளத்தையும், உரிமைகளையும் புதிய பரிமாணங்களுக்கு உயர்த்திய சிந்தனையாளராக அவர் திகழ்ந்தார்.

மேலும் படிக்க