கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

சையித் குதுப்: ஓர் அறிமுகம்

சிறையிலிருந்த காலத்தில் பல முக்கிய ஆக்கங்களை சையித் குதுப் எழுதி முடித்தார். அவை அனைத்திலும் பிரதானமாக, அவர் 1962-ஆம் ஆண்டு எழுதத் துவங்கிய ‘ஃபீ ழிலால் அல்-குர்ஆன்’ (‘திருக்குர்ஆனின் நிழலில்’) என்ற திருக்குர்ஆன் விரிவுரை ஆக்கமும் இதில் அடக்கம். அவருடைய வாழ்வின் அன்றாட போராட்ட மோதல் சூழ்நிலைகளால் இவ்விரிவுரை பெருமளவு தாக்கத்திற்கு உள்ளானது எனலாம். ஒவ்வொரு வசனத்திலும் இடம்பெறும் மொழியியல் மற்றும் வரலாற்று விவரணங்களைக் குறிப்பிடுவதிலும், விரிவான மேற்கோள்களையும் மாறுபட்ட அபிப்பிராயங்களையும் எடுத்துக் கூறுவதிலுமே கவனத்தைக் குவிக்கும் ஏனைய மரபுமுறை விரிவுரை ஆக்கங்களிலிருந்து இது மிக அடிப்படையிலேயே மாறுபடுகின்றது.

மேலும் படிக்க