கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அலீ ஃகாமினயீ: இஸ்லாமிய ஈரானைச் செதுக்கிய சிற்பி

Loading

பல நாடுகளையும் நாட்டுத் தலைவர்களையும் அச்சுறுத்திவரும் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கும், ஸியோனிச இஸ்ரேலுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் இமாம் அலீ ஃகாமினயீ. அவர் இமாம் ஃகுமைனீயை அடுத்து, ஈரான் இஸ்லாமியக் குடியரசை 35 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்தியவர் ஆவார்.

அலீ ஃகாமினயீயின் ஷஹாதத் உறுதிசெய்யப்பட்டதும், டிரம்பும் நெதன்யாஹுவும் ‘ஈரான் மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுக்கக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு’ என வெற்று கோஷம் முழக்கினர். அதேபோல், மக்களும் நாட்டை மீட்டெடுக்கத் தெருக்களில் கூடினர்; ஆனால் தற்போதைய அரசிடமிருந்தல்ல. மாறாக, ஈரான் இஸ்லாமியக் குடியரசை அழிக்கத் துடிக்கும் அமெரிக்க-இஸ்ரேல் ஸியோனிஸ்டுகளிடமிருந்து. ஃகாமினயீயின் ஷஹாதத்திற்குத் துக்கம் அனுசரித்துத் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியவாறே ‘அமெரிக்கா செத்தொழியட்டும்’ (Death to America) என்று மக்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.

ரஹ்பர் ஃகாமினயீ ஈரானை ஷா மன்னரின் கோரப் பிடியிலிருந்து மீட்டு, ஒரு பிராந்திய சக்தியாக மாற்றி, ஃபலஸ்தீன் விவகாரத்தை அதன் மூலோபாயக் கொள்கையின் மையமாக வைத்தவர். நவீன ஈரானை நீண்டகாலம் திறம்பட நிர்வகித்த தீரமிக்க தலைவர். அவரின் இந்த அரும்பணி பல தசாப்தங்களுக்கு மக்களின் நினைவுகளில் ஆழப் பதிந்திருக்கும். இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக!

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

Gen Z அரசியலின் தொடக்கமா CJP?

Loading

டைனோர்சர்களை அழித்த விண்கற்களின் தாக்குதல் உட்பட பல பேரழிவுகளில் இருந்து தப்பித்த உயிரினங்களில் ஒன்று கரப்பான்பூச்சி. ஒவ்வொரு நிலப்பரப்பின் சூழலுக்கும் ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் இந்த உயிரினத்தின் திறன் அபாரமானது.
இந்திய இளைஞர்களை குறிப்பிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு எதிரொலியாக கரப்பான்பூச்சியின் பெயரால் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இணையத்தை பயன்படுத்தி பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் செல்வாக்கை பெற்று வரும் இந்த அணி, யாரை குறிவைத்து, எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தோற்றப் பின்னணியையும் அதன் செயல்பாட்டு முறையையும் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

எண்ணெய்க்கு கிடைக்கும் மதிப்பு மனித உயிர்களுக்கு கிடைக்குமா?

Loading

இருபது ஆண்டுகளாக ஃபலஸ்தீனின் காஸா பொருளாதார தடையில் சிக்கித் தவித்தாலும் கண்டு கொள்ளாத உலக நாடுகள், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டவுடன் அவசரமாக செயலில் இறங்குகின்றன.
மனிதாபிமானம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் போது அமைதியும், வர்த்தகம் அச்சுறுத்தப்படும்போது அவசரமும் உடனடியாக வெளிப்படுகிறது. உலகம் தனது மனசாட்சியை சந்தையின் ஓசைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொண்டுள்ளது. உலக நாடுகள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதை இது உணர்த்துகிறது.
எந்தவொரு நாகரிகமும் அதன் கருவூலங்களின் செழிப்பையோ அல்லது எண்ணெய் வழித்தடங்களின் பாதுகாப்பையோ கொண்டு மதிப்பிடப்படாது; மாறாக, அது மனித உயிருக்கு அளித்த முக்கியத்துவத்தைக் கொண்டே மதிப்பிடப்படும் என்பதை நாடுகள் உணருமா?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கட்டுறுதி கொண்டவராக இருப்பதன் முக்கியத்துவம்

Loading

இஸ்லாம் ஆர்வமூட்டும் விளையாட்டு மரபுகள் மனம், உடல், ஆன்மா அனைத்தையும் ஒருசேர வலுப்படுத்துகின்றன. இஸ்லாத்தில் விளையாட்டிற்கு உடல் ரீதியான பயனையும் தாண்டி ஓர் உயர்ந்த நோக்கம் உள்ளது. அதுதான் ‘ஃபனா’ (fana) — அதாவது மனிதன் தனது ஈகோவை அல்லது சுயத்தைப் பூஜ்யமாக்கி, தன் நாட்டங்களை அல்லாஹ்வின் நாட்டத்தோடு இணைப்பதாகும்.

மேலும் படிக்க