ஃகாமினயீ: இஸ்லாமிய ஈரானைச் செதுக்கிய சிற்பி
![]()
பல நாடுகளையும் நாட்டுத் தலைவர்களையும் அச்சுறுத்திவரும் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கும், ஸியோனிச இஸ்ரேலுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் இமாம் அலீ ஃகாமினயீ. அவர் இமாம் ஃகொமேனீயை அடுத்து, ஈரான் இஸ்லாமியக் குடியரசை 35 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்தியவர் ஆவார்.
அலீ ஃகாமினயீயின் ஷஹாதத் உறுதிசெய்யப்பட்டதும், டிரம்பும் நெதன்யாஹுவும் ‘ஈரான் மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுக்கக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு’ என வெற்று கோஷம் முழக்கினர். அதேபோல், மக்களும் நாட்டை மீட்டெடுக்கத் தெருக்களில் கூடினர்; ஆனால் தற்போதைய அரசிடமிருந்தல்ல. மாறாக, ஈரான் இஸ்லாமியக் குடியரசை அழிக்கத் துடிக்கும் அமெரிக்க-இஸ்ரேல் ஸியோனிஸ்டுகளிடமிருந்து. ஃகாமினயீயின் ஷஹாதத்திற்குத் துக்கம் அனுசரித்துத் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியவாறே ‘அமெரிக்கா செத்தொழியட்டும்’ (Death to America) என்று மக்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.
ரஹ்பர் ஃகாமினயீ ஈரானை ஷா மன்னரின் கோரப் பிடியிலிருந்து மீட்டு, ஒரு பிராந்திய சக்தியாக மாற்றி, ஃபலஸ்தீன் விவகாரத்தை அதன் மூலோபாயக் கொள்கையின் மையமாக வைத்தவர். நவீன ஈரானை நீண்டகாலம் திறம்பட நிர்வகித்த தீரமிக்க தலைவர். அவரின் இந்த அரும்பணி பல தசாப்தங்களுக்கு மக்களின் நினைவுகளில் ஆழப் பதிந்திருக்கும். இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக!
மேலும் படிக்க