the kashmir files review tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: இந்திய சினிமாவின் ‘புதிய பாய்ச்சல்’!

Loading

காஷ்மீர் ஃபைல்ஸ் திரையிடப்பட்ட திரையரங்குகளின் வாசல்களில் இஸ்லாமிய வெறுப்பு முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன; “துரோகிகளை அழிக்க வேண்டும், பழிதீர்க்க வேண்டும்” போன்ற முழக்கங்கள் வெகு இயல்பாக எழுப்பப்படுவது இந்தியாவில் இன்று பரவியிருக்கும் வெறுப்புச் சூழலை நமக்கு உணர்த்துகின்றன. அதே 90களின் இறுதியில் தேசியத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் சேனலில் பொது நிதியைக் கொண்டு ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்பட்டது. இது இந்தியாவில் ராமர் அரசியல் வலுவாகக் காலூன்ற வழிவகுத்தது. பாபர் மசூதிக்கு எதிரான கரசேவைக்கு ஆள் சேர்க்கவும் இது பயன்பட்டது. அதுபோல, இன்று காஷ்மீர் ஃபைல்ஸ் படம் இந்துத் தேசியவாத நிகழ்ச்சி நிரலுக்கு மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.

இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் உண்மைக்குப் புறம்பான அம்சங்கள் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன. வெளியேற்றப்பட்ட பண்டிட்களின் எண்ணிக்கை, கொல்லப்பட்டோர் எண்ணிக்கை, அன்று பாஜக ஆதரவு ஒன்றிய அரசின் ஆட்சி இருந்தது முதலான பல்வேறு அம்சங்கள் இப்படத்தில் பிழையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படியான தகவல் பிழைகளையெல்லாம் தாண்டி, இஸ்லாமிய வெறுப்பை உற்பத்தி செய்யும் தனது நோக்கத்தை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது இந்தப் படம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்!

Loading

அரசியல் ரீதியான பிரச்னைகளுக்கு அடிப்படையான காரணங்கள் அரசியல் ரீதியானதுதானே அன்றி கலாச்சார ரீதியான வேறுபாடுகள் அல்ல. அப்படி கலாச்சாரக் காரணங்களைக் காட்டுபவர்கள் பாதிக்கப்படுபவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் வேலையைத்தான் செய்கிறார்கள்.

மேலும் படிக்க