கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

செக்யுலரிசம்: அரசியல் நவீனத்துவத்தின் புனிதப் பசு

Loading

இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது மேற்கத்திய நாடுகளைப் போல் அனைத்து மதங்களையும் விலக்குவது அல்ல; மாறாக அவ்வனைத்தையும் சமமாக நடத்துவது எனக் கூறப்பட்டு வந்தாலும் இங்கு ஏன் பெரும்பான்மையினரின் அடையாளங்கள் இயல்பாகவும் சிறுபான்மையினரின் அடையாளங்கள் சந்தேகக் கண்கொண்டும் பார்க்கப்படுகின்றன? இந்திய தேசியம் ‘உள்ளடக்கும் தேசியம் (Inclusive Nationalism)’ என்றால் சகிப்புத்தன்மை, மதச் சுதந்திரம் போன்ற வார்த்தைகள் சிறுபான்மையினரை மையப்படுத்தி இருப்பதன் தேவை என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடைகாண, இருவேறு துருவங்களான தேசியம், அரசு ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட நவீன தேச அரசு எனும் கருத்தாக்கத்தின் வரலாற்றுப் பின்னணியையும் அதன் அடிப்படைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். இக்கட்டுரை அதைக்குறித்தான புதிய கண்திறப்பை நமக்கு கொடுக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நடப்பு தேர்தல் முறையின் பிரச்னைகளும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையும்

Loading

1952இலிருந்து (அதற்கு முன்பும்கூட) பிரிட்டிஷாரிடமிருந்து பெற்றுக்கொண்ட FPTP (First-past-the-post) எனும் இந்தத் தேர்தல் முறையைக் கொண்டே நாம் தேர்தல்களை நடத்திவருகிறோம். மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பகுதியைப் பெறும் கட்சிகள்கூட அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதற்கு இது வழியேற்படுத்துகிறது. இதுதான் காங்கிரஸை 35% வாக்குகளைக் கொண்டு 60% தொகுதிகளைப் பிடிக்க வாய்ப்பளித்தது. அதுபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 37% வாக்குகளுடன் 56% இடங்களைக் கைப்பற்ற பாஜகவுக்கும் உதவியது.

மேலும் படிக்க