கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலம் கடந்தும் கனலும் பெருநெருப்பு

Loading

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில், அமெரிக்காவின் இனவெறி நிறைந்த தெருக்களில் ஒரு குரல் எழுந்தது. அது வெறும் எதிர்ப்பின் குரல் மட்டுமல்ல, விடுதலையின் தத்துவத்தை மறுவரையறை செய்த ஓர் அறிவுசார் புரட்சிக் குரல். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரின் பெயர், வரலாற்று இயங்கியலில் (Historical Dialectics) ஒரு முக்கியமான ஆளுமையாக இடம் பிடித்திருக்கிறது. ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை மட்டும் அவர் வழங்கவில்லை; மாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையையும், அடையாளத்தையும், உரிமைகளையும் புதிய பரிமாணங்களுக்கு உயர்த்திய சிந்தனையாளராக அவர் திகழ்ந்தார்.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

தனிமையில் என் புத்தகங்களுடன்…
சிறையிலிருந்து ஷர்ஜீல் இமாம்

Loading

எழுத்துப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பிரத்யேக நேர்காணலில், திகார் மத்திய சிறையில் இருக்கும் 37 வயதான ஷர்ஜீல் இமாம் தனது சிறைவாசம், வாசிக்கும் புத்தகங்கள், சக கைதிகள், தனது பூனை நண்பர்கள் ஆகியோர் பற்றித் தம்முடைய எண்ணங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். வெளியுலக நிகழ்வுகளுடன் இணைய விரும்பும் அவர் தனது தாயின் உடல்நிலை குறித்துக் கவலையை வெளிப்படுத்துகிறார். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் குறித்து வியப்பும் உற்சாகமும் அடைந்துள்ளார். தனது முனைவர் பட்டத்தை நிறைவுசெய்ய முடியுமென்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

தீண்டாமையை அழித்தொழித்த சையித் ஃபழ்ல் தங்ஙள்

Loading

மாப்பிளா போராட்டத்தை மதவெறி என இந்துத்வ நாஜிகள் சாயமடிக்கின்றனர். இடது சாரியினரோ  “விவசாயக்கூலிகளின் புரட்சி” என்பதாக மட்டிறுத்துகின்றனர். ஆனால், மாப்பிளா போராட்டத்தின் களமோ மானுட கரிசனத்தின்  ஆழமும் பரப்பும் கொண்டது. இந்துத்வ நாஜிகள் அவதூறு உரைப்பதைப் போல இப்போராட்டம் இந்து x முஸ்லிம் என்ற இருமைகளுக்கிடையிலான முரணாக நடந்திடவில்லை. இப்போராட்டங்கள் அவற்றின் இலக்கைப் போலவே, ஆதரவும் எதிர்ப்பும் கூடிய பல முனைகளைக் கொண்டவை என்பதை தனது உழைப்பினால் நிரூபித்திருக்கிறார் நூலாசிரியர் முஹம்மது அப்துல் சத்தார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சையித் குதுப்: ஆளுமை உருவாக்கமும் குடும்பப் பின்னணியும்

Loading

மலேசியா சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழக உசூலுத்தீன் துறைப் பேராசிரியர் தமீம் உசாமா எழுதிய Sayyid Qutb: Between Reform and Revolution என்ற நூலின் தமிழாக்கம் சீர்மை வெளியீடாக இவ்வாண்டின் இறுதியில் வெளிவரும், இன்ஷா அல்லாஹ். தமிழாக்கம்: நூரிய்யா ஃபாத்திமா. நூலிலிருந்து ஒரு பகுதி கீழே…

மேலும் படிக்க
Yusuf Al-Qaradawi குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

பேரறிஞர் யூசுஃப் அல்-கர்ளாவி: வாழ்வும் பணிகளும்

Loading

கத்தார் தலைநகர் தோஹாவில் வசித்து வந்த உலகப் புகழ்பெற்ற இஸ்லாமியப் பேரறிஞர் யூசுஃப் அல்-கர்ளாவி (96) மரணமடைந்ததாக அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க
பாத்திமா சேக் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஃபாத்திமா ஷேக்: கல்வி மறுக்கப்பட்டவர்களுக்காகத் தன் இல்லத்தைப் பள்ளிக்கூடமாக்கியவர்

Loading

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியை என்று அறியப்படும் கல்வியாளர் ஃபாத்திமா ஷேக் அவர்களின் 191வது பிறந்தநாளான இன்று, அவரை கூகுளின் டூடுல் சிறப்பித்துள்ளது. இதையொட்டி முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ தன் முகநூல் பக்கத்தில் ஃபாத்திமா ஷேக் குறித்து பகிர்ந்துள்ள பதிவின் சுருக்கம் இது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மௌலானா மௌதூதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஒரு விமர்சனப் பார்வை

Loading

மௌலானா மீதான குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை ஆதாரமற்றவை. காழ்ப்புணர்ச்சி, அறியாமை, குறுகிய மனப்பான்மை, சிந்தனைக் குழப்பம் ஆகிய காரணங்களினாலேயே எழுந்துள்ளன.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் 

மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

Loading

இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய மாபெரும் இஸ்லாமிய ஆளுமை மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்). 20ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகக் களம் கண்ட புரட்சிகர சிந்தனையாளரான அவர், இஸ்லாத்தை இம்மண்ணில் மேலோங்கிடச் செய்யும் உயரிய லட்சியத்துக்காக அல்லும் பகலும் உழைத்தவர். பல இஸ்லாமியப் போராளிகளுக்கு ஆதர்ச நாயகராக விளங்கிய மௌதூதியைக் கற்பதற்கான ஆர்வமும் தேடலும் உலகம் முழுக்க இன்றும் உயிர்ப்புடன் இருந்துவருகிறது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

முஸ்லிம் மக்களுக்கு அம்பத்கர் எதிரானவரா?

Loading

கல்வி நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், பிழைப்புவாத தலித் தலைவர்களுடன் தேர்தல் கூட்டணிகள் ஆகியவற்றின் மூலம் தலித் மக்கள் மத்தியில் ஊடுருவத் தொடங்கியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அம்பேத்கரை முஸ்லிம் எதிர்ப்பாளராக அவர்களுக்கு அறிமுகப்படுத்த முனைகிறது. சாதி, தீண்டாமையைத் தோற்றுவித்துப் பாதுகாக்கும் இந்து மதத்தை ஒழிப்பதையே தனது லட்சியமாகக் கொண்டிருந்த அம்பேத்கரை, தனது நோக்கத்துக்கேற்ப பிசைந்து மாற்றியமைக்கிறது. அவரை முழுமையாக இருட்டடிப்புச் செய்ய முடியாதாகையால், “இந்து சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டுமென விழைந்த முஸ்லிம் எதிர்ப்பாளராக” அவரைக் காட்ட முனைகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

உயிர் துறத்தலின் அழகியல்

Loading

உயிர் வாழவேண்டும் எனும் ஆசையில், அனைத்து ஆசாபாசங்களுக்கும் அடிமைப்பட்டோர், உண்மையில் வரலாற்றிலே இழிவோடும், நிரந்தரமாகவும் இறந்துவிட்டனர். ஆனால், உயிர் வாழ்வதற்காக தங்களைக் காத்துக்கொள்வதற்கு எத்தனையோ காப்பரண்கள் இருந்த போதிலும், எத்தனையோ சாக்குப்போக்குகள் இருந்த போதிலும், அவற்றை முன்வைக்காது, கொலைக்களத்திற்கு கனவான்களாய் சென்று இமாம் ஹுசைனோடு வீரமரணத்தை அடைந்துகொண்டோர் இன்றும் நித்தியமாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். உயிர் துறத்தலின் அழகியலே, ‘ஷஹாதத்’ ஆகும். அதனூடாக, சிறப்பாக வாழவும், சிறப்பாக உயிர் துறக்கவும் இமாம் ஹுசைன் அவர்கள் நம்மனைவருக்கும் கற்றுத்தந்துள்ளார்.

மேலும் படிக்க