இஸ்லாமிய கல்வி கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலனியமும் இஸ்லாமியக் கல்விமுறையின் வீழ்ச்சியும் – ஃபைசல் மாலிக்

முன்னுரை அளவிலாக் கருணையாளனும், இணையிலாக் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் CNNல் 2009ம் ஆண்டு வெளியான Generation Islam எனும் ஆவணப்படத்தில் ‘பாகிஸ்தானில் இஸ்லாமியக் கல்வி’ என்ற பகுதியில், “பழங்காலத்தில் அடைபட்டிருக்கும் ஒருவித இஸ்லாத்தையே பல மதரசாக்கள் பயிற்றுவிக்கின்றன. கணிதம், அறிவியல் போன்றவை பயிற்றுவிக்கப்படுவதில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு ஒரு என்ஜிஓ பணியாளரை “பாகிஸ்தானின் மதரசாக்களை நவீனமாக்கும் போரில் முன்னணியிலிருப்பவர்” [1] எனப் பாராட்டியது. மதரசாக்களை [2] நவீன யுகத்துக்கு முந்தைய முஸ்லிம் கலாச்சாரத்தின் எச்சமாகவும், சமகாலத்துக்குத் தொடர்பற்றவையாகவும், நவீன உலகிற்கு முரணானவையாகவும் சித்தரித்தது இந்த ஆவணப்படம். முஸ்லிம் உலகம் கல்வியில் எதிர்கொள்ளும் சவால்களுக்குக் காரணம் அது கல்வியை “நவீனமாக்காததே” என நாம் பரவலாக ஊடகங்களிலும் அறிவுஜீவி வட்டாரங்களிலும் அரசுசார் நிறுவனங்களிலும் [3] காணும் கருத்தைப் பிரதிபலிப்பதாக இப்படம் அமைந்தது. இப்படிச் சொல்வதன் வழியாக முஸ்லிம் உலகின் பல…

மேலும் படிக்க
பாத்திமா சேக் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஃபாத்திமா ஷேக்: கல்வி மறுக்கப்பட்டவர்களுக்காகத் தன் இல்லத்தைப் பள்ளிக்கூடமாக்கியவர்

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியை என்று அறியப்படும் கல்வியாளர் ஃபாத்திமா ஷேக் அவர்களின் 191வது பிறந்தநாளான இன்று, அவரை கூகுளின் டூடுல் சிறப்பித்துள்ளது. இதையொட்டி முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ தன் முகநூல் பக்கத்தில் ஃபாத்திமா ஷேக் குறித்து பகிர்ந்துள்ள பதிவின் சுருக்கம் இது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மதரசாக் கல்வித் திட்டம் – நேற்றும் இன்றும்

முகலாயர் காலத்தில், குறிப்பாக அக்பரின் காலத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் மதரசாக்களில் ஒருசேர கல்வி பயில ஊக்குவிக்கப்பட்டனர். ஏழ்மை அறிவுத் தேட்டத்திற்கான தடைகல்லாக இருக்கக் கூடாது என்பதற்காக மேல்படிப்பு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கும் நடைமுறையும் முதன்முதலாக மதரசாக்களிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மதரசாக்களின் மாணவர்கள் நல்லொழுக்கம், கணிதம், அளவையியல், வேளாண்மை, வடிவியல், எண்சோதிடம், வானவியல், அரசியல், பொதுநிர்வாகம், மருத்துவம், தர்க்கவியல், இயற்பியல் உள்ளிட்ட 18 வகையான பாடங்களைக் கற்றுத்தேற வேண்டியிருந்ததாக அபுல்ஃபஜல் தனது அய்ன் இ அக்பரியில் குறிப்பிடுகிறார். நவீன பாரதத்தின் தந்தை, இந்து மதச் சீர்திருத்த சிற்பி என்று புகழப்படும் ராஜாராம் மோகன்ராய் இத்தகைய இஸ்லாமியக் கலைக்கூடத்தில் பயின்றவரே.

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

சங்குத்தவம் (சிறுகதை)

”இந்தக் காலத்தில் அறபியை மட்டும் படிச்சாப் போதுமா? உலகம் பூரா இங்கிலீஷ்காரன் தன்னோட பாஷையைத் திணிச்சி வச்சிருக்கான்… அதுலேர்ந்து யாரும் தப்பிக்க முடியாது” என்று மக்கள் கூடியிருந்த நிஜாமியா வளாகத்தில் நான் காலையில் முழங்கியபோது ஊர் மக்களுக்குக் கலககாரனாகத் தெரிந்தேன். ”கால் காசு படிப்புனாலும் இங்கிருந்து இராம்நாட் கிறிஸ்துவ ஸ்வார்ட்ஸ் ஸ்கூலுக்குத்தான் போகணும்” என்றேன்.

மேலும் படிக்க