அறிவியல் என்றால் என்ன? – சில குறிப்புகள் (3)
What is God? என்ற நூலில் ஜேக்கப் நீடில்மென் ஜென் ஞானியைச் சந்தித்த நிகழ்ச்சியைப் பகிர்ந்திருப்பார். ஜென் தத்துவ ஞானியான டி.டி. சுசுக்கியிடம் நீடில்மென் சுயம் என்றால் என்ன என்று கேட்பார். அதற்கு அவர் அதைக் கேட்பது யார் என்பார். உறுதியாக “நான்தான் கேட்கிறேன்” என்று நீடில்மென் பதில் சொல்வார். அப்படியானால், எங்கே என்னிடம் காட்டு பார்க்கிறேன் என்பார் சுசுக்கி.
சுயத்தைக் காட்ட முடியாது! இதை தர்க்கமுறைக்குள் கொண்டு வரமுடியாது. மெய்மை குறித்த ஐயமும் இப்படியான புதிர்களுக்குள் நம்மைக் கொண்டு செல்லும். வெளி, காலம் என்பது உண்மையான ஒன்றா? அதாவது, அனுபவபூர்வமாக உணர்வது வெளியின் நிதர்சனத்தைதானா? பிளேட்டோ, அரிஸ்டாட்டில் தொடங்கி வெளி, காலம் குறித்த புரிதல்கள் என்னவாக இருந்துள்ளன? அவற்றிலிருந்து நவீன அறிவியல் எந்த அளவிற்கு வேறுபடுகிறது என்பது பற்றி விரிவான விளக்கங்கள் நான்காம் அத்தியாயத்தில் உள்ளன. நீங்களும் வாசியுங்கள்.
மேலும் படிக்க