கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்: ஒரு சமூகவியல் ஆய்வு – நூலறிமுகம்

Loading

மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் பற்றிய நினைவுகள் சில இஸ்லாமியர்களைத் தவிர்த்து அனேகமாக பொதுச் சமூக நினைவிலிருந்து முற்றிலும் நீங்கிவிட்டதாகவே தெரிகிறது. தமிழ்நாட்டில் வேங்கைவயல் போன்ற சாதிய வக்கிரங்கள் நிகழும் யுகத்தில், இந்தியாவில் இந்துத்துவம் இஸ்லாமிய மக்களை இரண்டாம் குடிகளாக மாற்றத் துடிக்கும் காலகட்டத்தில் மீண்டும் மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றத்தைக் குறித்துப் பேசுவதும் விவாதிப்பதும் அவசியமாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

சனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்

Loading

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் பத்து இலட்சம் பேரோடு பௌத்தத்தைத் தழுவினார். சனாதனிகளுக்கு அது வேதனையைத் தந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவர்கள் பதற்றப்படவில்லை. பத்து இலட்சம் பேர் மதம் மாறியபோதும் இந்தியாவில் பதற்றம் தொற்றிக் கொள்ளவில்லை. மீனாட்சிபுரத்திலே 180 குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவியதும் ஒட்டுமொத்த இந்தியாவே பதற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. சனாதனத்தை அச்சுறுத்தக்கூடிய அளவிற்கு, பதற்றத்திற்குள்ளாகக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்ற ஒரு கோட்பாடு இஸ்லாம். அது அறிவியல் பூர்வமாகவும் மீனாட்சிபுரத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

மதமாற்றத்தின் அரசியல்!

Loading

அவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு மாற்றத்தை மட்டுமே கொண்டுவந்திருப்பது தெரிகிறது. மொத்தத்தில் பெரும்பாலான பௌத்தர்கள், மதமாற்றத்துக்கு முந்தைய தமது இந்து வழக்காறுகளையும் நம்பிக்கைகளையுமே தொடர்கிறார்கள். எனவேதான், தலித்கள் இஸ்லாத்துக்கு மாறுவதை மூர்க்கமாக எதிர்க்கும் இந்துவெறிக் குழுக்கள், தலித்கள் விரும்பினால் பௌத்தர்களாக மாறிக் கொள்ளலாம் என வாதிடுகின்றன. ஏனெனில், அவர்களின் பார்வையில் பௌத்தம் என்பது இந்து மதத்தின் ஒரு கிளைதான்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஒரு தலித் போராளியின் வாழ்வும் அவர் காட்டிய வழியும்

Loading

‘இறைவனின் இந்த இஸ்லாமியத் தத்துவங்கள் உலகெல்லாம் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்தச் சூழலிலும் எடுத்துச் செல்ல வெண்டிய மாபெரும் தத்துவங்களாகும். இவை இரகசியமாகக் கூட்டங்களில் சொல்லப்படவேண்டியவை அல்ல. மாறாக மலை மீதும், குன்றின் மீதேறியும் நின்று வெளிப்படையாக அனைத்து மக்களுக்கும் எட்ட வைக்கப்பட வேண்டிய உயர்ந்த தத்துவங்களாகும். அனைத்து மக்களுக்கும் வழி காட்டக் கூடிய கருத்துக்களாகும். இறைவன் ஒருவனே, நீங்கள் அவனையே நம்புங்கள். முஹம்மது நபி அவர்களையே ஏற்றுக் கொள்ளுங்கள், பின்பற்றுங்கள்”.

மேலும் படிக்க