கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலம் கடந்தும் கனலும் பெருநெருப்பு

Loading

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில், அமெரிக்காவின் இனவெறி நிறைந்த தெருக்களில் ஒரு குரல் எழுந்தது. அது வெறும் எதிர்ப்பின் குரல் மட்டுமல்ல, விடுதலையின் தத்துவத்தை மறுவரையறை செய்த ஓர் அறிவுசார் புரட்சிக் குரல். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரின் பெயர், வரலாற்று இயங்கியலில் (Historical Dialectics) ஒரு முக்கியமான ஆளுமையாக இடம் பிடித்திருக்கிறது. ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை மட்டும் அவர் வழங்கவில்லை; மாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையையும், அடையாளத்தையும், உரிமைகளையும் புதிய பரிமாணங்களுக்கு உயர்த்திய சிந்தனையாளராக அவர் திகழ்ந்தார்.

மேலும் படிக்க
malcom x tamil குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஒடுக்கப்பட்ட மக்களுடன் அணிசேர்தல்

Loading

நாம் விடுதலை பெறுவதற்கான ஒரே வழி, உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருடனும் நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்வது மட்டுமே.

– மால்கம் X (மாலிக் அல்-ஷப்பாஸ்)

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

மால்கம் எக்ஸ்: கண்டெடுக்கப்பட்ட புதிய பக்கங்கள்

Loading

ஆனால், சமீபத்தில் சில கையெழுத்துப் பிரதிகள் கிடைத்துள்ளன. தற்போதைய தன்வரலாற்று நூலில் இடம்பெறாத பலவும் அதில் உள்ளன. நூலின் கட்டமைப்பையுமே கூட மால்கம் எக்ஸ் முற்றிலும் வேறுவிதமாகத் திட்டமிருந்தது இவற்றின் வழி தெரியவந்துள்ளது. தன் வாழ்க்கைப் பரிணாமத்தை வெறும் மூன்று அத்தியாயங்களில் சுருக்கிக் கொண்டு, எஞ்சிய அத்தியாயங்களில் கறுப்பின மக்களின் விடுதலைக்கான போராட்ட வரலாற்றை உரை (speech) வடிவிலான அத்தியாயங்களாக அமைக்கத் திட்டமிட்டிருந்திருக்கிறார் மால்கம்.

மேலும் படிக்க