malcom x tamilகுறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஒடுக்கப்பட்ட மக்களுடன் அணிசேர்தல்

நாம் விடுதலை பெறுவதற்கான ஒரே வழி, உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருடனும் நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்வது மட்டுமே.

– மால்கம் X (மாலிக் அல்-ஷப்பாஸ்)

‘முஸ்தழ்அஃபூன்’ (ஒடுக்கப்பட்ட பலவீனர்கள்) எனும் முக்கியமானதொரு குர்ஆனியப் பதத்தை இது நமக்கு நினைவூட்டுகிறது அல்லவா?!

“உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நாம் ஆதரவு வழங்கவும், அவர்களை தலைவர்களாக ஆக்கவும், (பூமியின்) வாரிசுகளாக ஆக்கவும் நாடியுள்ளோம்” (திருக்குர்ஆன் – அல்-கஸஸ்: 5)

‘ஒடுக்கப்பட்டோர்’ என்பது மிகவும் விசாலமான வகையினரைக் குறிக்கிறது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை, ‘நீதி’ என்பது வெறுமனே மனிதர்களின் சிந்தையில் பிறக்கும் ஒரு கருத்தாக்கமல்ல. மாறாக, எல்லாம் வல்ல இறைவனால் தீர்மானகரமாக வரையறுக்கப்பட்ட ஒன்று அது. அத்தகைய நீதி மறுக்கப்பட்ட எல்லோரையும் ‘முஸ்தழ்அஃபூன்’ (ஒடுக்கப்பட்டவர்கள்) எனும் பதம் உள்ளடக்கும்.

சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், நிறத்தின் பெயரால், இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், பாலினத்தின் பெயரால், இன்னும் பலவற்றின் பெயரால் ஒடுக்கப்படும், அநீதி இழைக்கப்படும், உரிமை மறுக்கப்படும் அல்லாஹ்வின் அடியார்கள் அனைவரையும் இப்பதம் உள்ளடக்கும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்கப் போவதாக பிரகடனம் செய்வதன் மூலம் அல்லாஹ் நம்மையும் அவ்வாறு செய்யும்படி ஆர்வமூட்டுகிறான் என்பதும் கூட, மேற்கூறிய திருக்குர்ஆன் வசனத்திற்கு நாம் அளிக்கத்தக்க பொருள்கோடல்களில் ஒன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.

இறைவனே நன்கறிந்தவன்!

Related posts

Leave a Comment