காணொளிகள் குறும்பதிவுகள் 

சூஃபி இனாயத் நிறுவிய கம்யூன்

சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென்ற இஸ்லாத்தின் குறிக்கோளை அடைவதற்கு வெறுமனே ‘செல்வம் பகிர்ந்தளிக்கப்படுவது’ மட்டும் போதாது; செல்வம் ஈட்டுவதற்கான ‘உற்பத்தி முறையையே’ புரட்சிகரமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்ட சூஃபி ஷாஹ் இனாயத் (1655-1718), கல்வி மற்றும் ஆன்மிகப் பணிகளுக்காக அரசு வழங்கிய விளைநிலத்தில், கூட்டு முறையில் விவசாயம் செய்து, கிடைக்கும் விளைச்சலை எல்லோரும் அவரவரின் தேவைக்கேற்ப பகிர்ந்துகொள்ளும் பரிசோதனை முயற்சியை சிந்துப் பகுதியில் வெற்றிகரமாக செய்து காட்டினார். இது நிலமற்ற கூலி விவசாயிகள் மத்தியில் பிராந்தியம் முழுக்க மாபெரும் எழுச்சியை உண்டு பண்ணியது.

இது நடந்தது கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்; பாரிஸ் கம்யூன் நிறுவப்படுவதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் என்பதை மனதிலிருத்திக் கொள்ளுங்கள்.

இந்தப் புரட்சிகர முயற்சியின் விளைவுகளைக் கண்டு நடுங்கிய நில உடமையாளர்களும் நவாபும் சூஃபி ஷாஹ் இனாயத்தையும் அவருடைய ‘புரட்சிகர கம்யூனையும்’ நசுக்குவதற்காக மிகப்பெரும் படை திரட்டிவந்து முற்றுகை இட்டனர். சூஃபி ஃபக்கீர்களும் ஏழை விவசாயிகளும் அசாதரணமான நெஞ்சுரத்துடன் முற்றுகையை எதிர்த்துப் போரிட்டார்கள்.

நான்கு மாதங்கள் கடந்தும் வெற்றிபெற முடியாததால், அமைதிப் பேச்சு வார்த்தைக்கென அழைத்து, கைது செய்து, வஞ்சகமாக சூஃபி ஷாஹ் இனாயத்தைக் கொன்று போட்டார்கள் எதிரிகள். ஷாஹ் இனாயத்தையும், போரில் உயிர்த்தியாகம் செய்த அவருடைய 24000 பின்பற்றாளர்களையும் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

அந்த வீரமரணங்கள் நடந்தேறி 300 ஆண்டுகள் ஆவதை நினைவுகூறும் விதமாக பாகிஸ்தானைச் சேர்ந்த Raza Naeem ‘தி வயர்’ தளத்தில் நான்கு பகுதிகளாக அமையும் ஒரு கட்டுரைத் தொடரை எழுதியுள்ளார்.


1. Remembering the Socialist Sufi of the Indus Valley, Shah Inayat Shaheed

2. How Sufi Shah Inayat Shaheed Battled to Free Sindh’s Peasants From their Landlords

3. The Martyrdom of Sufi Shah Inayat

4. In an Era of Feudalism, Sufi Shah Inayat’s Movement of Collective Farming Was Doomed to Fail

Related posts

Leave a Comment