கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம் மக்கள் தொகை: பொதுப்புத்தியை அச்சுறுத்தும் கட்டுக்கதையும் நிதர்சனமும்

Loading

மக்கள் தொகை உயர்வானது எந்நேரமும் தீங்கு விளைவிப்பதாய் மட்டும் இருப்பதில்லை என்பதையும் மதத்தோடு தொடர்புடையதாகவும் இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்த சமயம் முஸ்லிம்கள் 9.8ஆக இருந்தார்கள். 2011 கணக்கெடுப்பின்போது 14.2 சதவீதமானார்கள். அவர்களின் வளர்ச்சி விகிதம் கடந்த சில தசாப்தங்களாக சரிந்து வருகிறது. கூடியவிரைவில் அது நிலையானதாக ஆகிவிடக்கூடும். அரசாங்கம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது பற்றியெல்லாம் கலந்துரையாடவும், அதற்காகத் திட்டம் வகுக்கவும் செய்யலாமே அன்றி, இவ்விஷயத்தை மதம் சார்ந்து அணுகக் கூடாது. வாக்காளர்களைத் துண்டாடி, அதன் வழியாக ஒரு குறிப்பிட்ட கட்சியை வளர்ப்பதே முஸ்லிம் மக்கள் தொகை குறித்த வெறுப்புப் பேச்சுகளின் நோக்கமாகும். காலவோட்டத்தில் இதுவே சமூகத்தில் ஆழமாகப் படிந்துவிடுகிறது. எனவே, தர்க்க ரீதியாகவும் உண்மையைக் கொண்டும் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை முறியடிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதன் விளைவு என்னவாக இருக்கும்? – பேரா. அசோக் ஸ்வைன் நேர்காணல்

Loading

ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தையும் ஒபாமா நிர்வாகத்தையும் ஒப்பிட்டால், ஆஃப்கானிஸ்தான் விஷயத்தில் ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் தாலிபானுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியதுடன், அதன் முன்னணித் தலைவர்களை விடுதலை செய்ய பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது. மேலும், தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி உடன்படிக்கைச் செய்துகொண்டு, பன்னாட்டுப் படைகளை ஆஃப்கானிஸ்தானிலிருந்து திரும்பப்பெற நாள் குறித்தது. என்றாலும், பைடன் நிர்வாகத்திடம் இந்தக் கடினமாக பணியை ஒப்படைத்துவிட்டது. இவ்விஷயத்தில் பைடன் தன் தலைமைத்துவப் பண்மைக் காட்டியிருக்கிறார். ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சியின் தீவிர விமர்சனங்களுக்கிடையேதாம் துருப்புகள் திரும்பப்பெறப்படுகின்றன.

அமெரிக்காவுக்கு இது வெற்றிபெற இயலாத போர்தான். அமெரிக்காவின் தோல்வியை ஒப்புக்கொண்டு போரை நிறுத்தியிருப்பது பைடன் செய்த சரியான காரியம் என்றே சொல்வேன்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

தாலிபான் ஆட்சியை சர்வதேசச் சமூகம் ஏன் ஏற்க வேண்டும்?

Loading

பல்லாண்டுகால வெளிநாட்டுத் தலையீடுகளால் ஆஃப்கானிஸ்தான் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்துள்ளது. முதலில் ரஷ்யாவாலும், பிறகு அமெரிக்கா, பிரிட்டிஷ், நேட்டோ ஆகியவற்றாலும் அது பாதிப்புக்குள்ளானது. இந்தக் காலனியத் தலையீடுகளெல்லாம் அந்நாட்டையே நாசமாக்கி விட்டிருக்கின்றன; உயிரிழப்புகளையும் அழிவையும் தவிர அவை ஈட்டியது வேறொன்றுமில்லை. காலனியச் சக்திகள் தோற்க வேண்டியவைதாம்; ஏனெனில், தம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சட்டபூர்வ உரிமை ஆஃப்கானியர்களுக்கு மட்டுமே இருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

1980 மொராதாபாத் பெருநாள் படுகொலை: நினைவேந்தல்

Loading

இந்தப் படுகொலையையும், ஊடகங்களில் இடதுசாரிகளால் அப்பட்டமாக இதற்கு வகுப்புவாதச் சாயம் பூசப்பட்டதையும் நாம் மறந்துவிட்டோம் எனும் உண்மை ஒருபுறமிருக்க, இன்னொரு முக்கியமான அம்சத்தையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். பொதுவாக சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் புரிந்துகொள்ளவேண்டியது, காங்கிரஸும் அதன் இடதுசாரிக் கூட்டாளிகளும் மதச்சார்பற்றோராக இல்லை (அவர்கள் அவ்வாறு வாதிட்டபோதிலும்) என்பதைத்தான். ஒருபோதும் அவர்கள் அப்படி இருந்ததும் இல்லை. பாஜகவின் பக்கம் மட்டும் கவனம் செலுத்துவது மதச்சார்பற்ற கட்சிகள் எனச் சொல்லப்படுவனவற்றின் குற்றங்களை நமக்கு மறக்கடிப்பதோடு, அது காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்குமே அனுகூலமளிக்கும் என்பதை மறந்துவிடவேண்டாம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

உ.பி.யில் மதமாற்றத் தடைச் சட்டத்தின் பெயரால் வேட்டையாடப்படும் முஸ்லிம்கள்

Loading

ஒருவாரகாலமாக வடநாட்டு செய்தி ஊடகங்களில் படுதீவிரமாக ஒளிபரப்பப்படும் செய்தி என்னவென்றால், சுமார் ஆயிரம் பேரை ஏமாற்றி மதமாற்றம் செய்தற்காக முஹம்மது உமர் கவுதம் (57), முஃப்தி ஜஹாங்கிர் (52) ஆகியோரை உத்தரப் பிரதேச மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸ் (ஏடிஎஸ்) டெல்லி ஜாமியா நகரில் கைது செய்திருக்கிறது என்பதும், விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் கிடைத்திருக்கின்றன என்பதும்தான். பிடிபட்டவர்கள் பின்தங்கிய சமூகத்தவர்களையும் பெண்களையும் மாற்றுத் திறனாளிகளையும் குறிவைத்து அவர்களை மூளைச்சலவை செய்திருப்பதாகவும், அவர்களுக்குப் பணம் கொடுத்து அல்லது வேலை வாங்கித்தந்து அல்லது திருமணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதன் மூலம் மதமாற்றம் செய்ததாகவும் யோகி ஆதித்யநாத் அரசின் காவல்துறை வாதிடுகிறது. அது மட்டுமல்லாமல், கைது செய்யப்பட்டவர்கள் இஸ்லாமிய தஅவா மையம் (ஐடிசி) என்பதை நிறுவி மதமாற்றத்தில் ஈடுபட்டதோடு, இந்தியாவின் மக்கள் தொகையையே மாற்றியமைக்கச் சதி செய்ததாகவும், பாகிஸ்தானின்…

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

எழுபதாண்டுகளாக இந்திய முஸ்லிம்களை வஞ்சிக்கும் ‘இந்துக் குடியரசு’

Loading

கடந்த ஏழு தசாப்தங்களாக பல வழிகளில் இந்த அரசமைப்புச் சட்டம் சிறுபான்மையினரை, அதிலும் குறிப்பாக 20 கோடி முஸ்லிம்களை, இரண்டாந்தரக் குடிமக்ககளாக குறுக்குவதற்குப் பெரும் பங்காற்றியுள்ளது. முஸ்லிம்களின் வறுமை, கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை குறித்த பரிதாபகரமான புள்ளிவிவரங்கள் யாவும் அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தின்போது சிறுபான்மை விவகாரம் தொலைநோக்குடன் அணுகப்படவில்லை என்பதை மிகத்தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

என்ன நடக்கிறது ஃபலஸ்தீனில்?

Loading

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான அல்அக்ஸா பள்ளிவாசல் அமைந்துள்ள நிலமான ஃபலஸ்தீன், இஸ்லாமிய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவமும் தனிச்சிறப்பும் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். இப்ராஹீம், லூத், தாவூத், சுலைமான், மூஸா, ஈஸா (அலை) உள்ளிட்ட இறைத்தூதர்களின் பிறப்பு அல்லது இறப்பு இம்மண்ணில்தான் நிகழ்ந்துள்ளது. ’இறைத்தூதர்களின் பூமி’ எனும் புகழுக்குரிய ஃபலஸ்தீனில் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் இருப்பது தொட்டு அங்கிருந்து நபிகள் நாயகம் (ஸல்) விண்ணுலகப் பயணம் மேற்கொண்டது வரை அதை மிகுந்த சிறப்புமிக்கதாய் ஆக்கியிருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

நடிகர் விவேக் மரணமும் கொரோனா தடுப்பூசி அச்சமும் – சில குறிப்புகள்

Loading

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இரு தினங்களுக்குமுன் நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்ததற்குக் காரணம் அவர் அதற்கு முந்தைய நாள் எடுத்துக்கொண்ட கொரோனா தடுப்பூசிதான் என்ற அச்சம் இன்று பொது மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. இச்சந்தர்ப்பத்தில் அலோபதி மருத்துவ முறைக்கு எதிராக இயற்கை மருத்துவம் போன்ற முறைகளை உயர்த்திப்பிடிப்போர் தடுப்பூசி அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறி, நிலவும் அச்சத்தை அதிகப்படுத்தியிருக்கின்றனர்.

இதற்கு எதிர்முனையில் தடுப்பூசி பாதுகாப்பானது; கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க அது அவசியமானது என்று அரசும் மருத்துவர்களும் மக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். விவேக் மரணத்துக்கும் தடுப்பூசிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சுகாதாரத்துறை செயலரும் அமைச்சரும் ஒரே குரலில் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘பிரிவினைவாத எதிர்ப்பு மசோதா’: பிரான்ஸில் சட்டப்பூர்வமாகும் இஸ்லாமோ ஃபோபியா

Loading

பிரான்ஸின் செனட் அவையில் கொண்டுவரப்பட்டுள்ள ’பிரிவினைவாத எதிர்ப்பு மசோதா’ அந்நாடு முழுக்க பெரும் சர்ச்சைக்கும் விவாதங்களுக்கும் இட்டுச்சென்றுள்ளது. இந்தச் சட்ட வரைவானது இஸ்லாமோ ஃபோபியாவுக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பதாக மனித உரிமை ஆர்வலர்களும் முஸ்லிம்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், அரசு ”இஸ்லாமியப் பிரிவினைவாதத்துக்கு” எதிரான மசோதா என்பதாக இதை முன்வைத்து வருகிறது.

பிரான்ஸ் நாடு 2004ல் ஹிஜாப், டர்பன் உள்ளிட்ட மத அடையாளங்களை பள்ளிக்கூடங்களில் தடை செய்தபோதும், 2011ல் முகத்திரை அணிவதைத் தடை செய்தபோதும், 2016ம் ஆண்டு பல பகுதிகளில் புர்கினி (முழு உடலையும் மூடும் வகையிலான நீச்சல் உடை) தடை செய்யப்பட்டபோதும் இதேபோன்ற விவாதங்கள் மேலெழுந்தன. பிரான்ஸின் மதச்சார்பின்மை எந்த அளவு மூர்க்கமாக மத அடையாளங்களை ஒடுக்குகிறது என்பது அப்போது பெரிதும் பேசப்பட்டது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்து ஓரியண்டலிசத்தின் பன்முகங்கள் – பேரா. இர்ஃபான் அஹ்மது உரைத் தொகுப்பு

Loading

கடந்த பிப்ரவரி மாதம் 25 அன்று ஆஸ்திரேலியா இந்தியா முஸ்லிம் மன்றம் (AIMF) நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் பேரா. இர்ஃபான் அஹ்மது, ‘இந்து ஓரியண்டலிசத்தின் முகங்கள்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். 2014ல் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் போக்கும் நகர்வும் புதிய பரிமாணத்தை எட்டியிருப்பதை அறிவோம். அதை வெறுமனே அரசியல் ரீதியில் அணுகாமல், அதன் அறிவுசார் அடித்தளத்தை நாம் இனங்காண வேண்டும் என்கிறார் இர்ஃபான் அஹ்மது. அதைக் குறிக்கவே ‘இந்து ஓரியண்டலிசம்’ எனும் புதிய பதத்தைப் பயன்படுத்துகிறார்.

இங்கு முதன்மையானது அறிவமைப்புதான் (Knowledge System) என்று சுட்டிக்காட்டும் அவர், சமகால அரசியல் போக்கானது கடந்த காலத்திலிருந்து (குறிப்பாக நேரு, காந்தி, பட்டேல் போன்றோர் பாதையிலிருந்து) தடம் புரண்டதால், திசை மாறியதால் உருவாகியிருப்பதாக நிலவும் பொதுக் கருத்தைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, கடந்த காலத்தின் நீட்சியாக தற்போதைய சூழலைக் குறிப்பிடுகிறார்.

மேலும் படிக்க